Wednesday, November 30, 2011

அமெரிக்கா போறீங்களா? இத படிங்க முதல்ல...


மேலை நாடுகளுக்கு முதல் தடவை நாம் பயணம் செய்யும் போது பல விஷயங்கள் நமக்கு புதிதாக இருக்கும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலான பழக்க வழக்கங்கள் நமக்கு எதிர் மறையாக இருக்கும். இதற்க்கு காரணம் அமெரிக்கர்கள் இங்கிலாந்து நாட்டினர் கடை பிடிக்கும் எதையும் பின் பற்றாததுதான். அதற்க்கான காரணம் ஒரு தனி கதை.

சரி, விசயத்திற்கு வருவோம். பெரும்பாலானவர்கள் அமேரிக்கா சென்றதும்  முதலில் ஒரு ஓட்டலில் தான் தங்க நேரிடும். அப்படி ஓட்டலில் தங்கும்  போது தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்களை இப்போது பார்ப்போம்.

# வெளியூர், அதிலும் அமேரிக்கா வந்த பிறகு நாம் எல்லோரும் செய்ய  நினைக்கும் முதல் செயல், ஊருக்கு போன் செய்து நலமாக வந்து சேர்ந்து  விட்டதை தெரிவிக்க ஆசைபடுவது தான். இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் எந்த ஒரு ஓட்டலில் இருந்து நீங்கள்  வெளிநாட்டுக்கு போன் செய்தாலும் அவ்வளவுதான். நிமிடத்திற்கு  பல  டாலர்களை நீங்கள் தொலை பேசி கட்டணமாக பின்னர் செலுத்த வேண்டி  வரும். தவிர்க்கவே முடியாத பட்சத்தில் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைத்து விடுவதுதான் சிறந்தது. அதன் பிறகு காலிங் கார்டு போன்று ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு பேசுவது தான் நன்று. அதில் கூட டோல் ப்ரீ நம்பருக்கு ஓட்டலில் சார்ஜ் செய்வார்களா என்று விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வது நன்று.

எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் முதலில் விபரம் தெரியாமல் இங்கு வந்து சேர்ந்த உடன் இந்தியாவிற்கு  பேசிவிட்டு பின் நூற்று கணக்கில்  டாலர்களில் டெலிபோன் பில்  கட்டிய கதை நடந்திருக்கிறது.

சென்ற பதிவில் கூறியிருந்தது போல், முதல் தடவை அமேரிக்கா சென்று இறங்கிய மறு தினம். Queue Discipline பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல், ஒரு கடையில் நாலைந்து பேர் Queue இல் நின்று கொண்டிருக்க, ஒரு குறிப்பிட்ட பொருள் கிடைக்குமா என்று தானே கேட்க போகிறோம் என்ற எண்ணத்தில் வரிசையை தாண்டி கவுண்டரிடம் உள்ளவரிடம் நான் சென்று கேட்க, அப்பெண்மணி என்னை கண்டு கொள்ளவேயில்லை. Excuse me..Excuse me...என்று நான் கூப்பிட்டுக் கொண்டே இருக்க கடைசியில், could you please come in Queue என்றது. அதன் பிறகு Queue என்று ஒன்று இருந்தால் அதில் கடைசி ஆளாக தான் இன்றும் நான் நிற்கிறேன்.

அதே போல் சில நேரங்களில் Queue விற்கு பக்கத்தில் ஒருவர் நின்றால் கூட அவரிடம் நீங்கள் Queue இல் நிற்கிறீர்களா என கேட்டுவிட்டு தான்  இங்கு  மக்கள்  Queue இல் சேர்ந்து கொள்வார்கள்.

அமெரிக்க தொல்லைகள் தொடரும்...

share on:facebook

6 comments:

Madhavan Srinivasagopalan said...

// Queue விற்கு பக்கத்தில் ஒருவர் நின்றால் கூட அவரிடம் நீங்கள் Queue இல் நிற்கிறீர்களா என கேட்டுவிட்டு தான் இங்கு மக்கள் Queue இல் சேர்ந்து கொள்வார்கள். //

I do this, here also.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அமெரிக்கா போறப்ப தேவைப்படும். படிச்சு வச்சிக்கிறேன். எப்போ அமெரிக்கா போக போறேன்னு கேட்கக் கூடாது.


எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

CS. Mohan Kumar said...

//அமெரிக்க தொல்லைகள் தொடரும்...//

தொடரட்டும்.

நீங்கள் எழுதும் பதிவுகள் அமேரிக்கா பற்றி இருந்தாலும் நீங்கள் நிஜமாவே இப்போ அமெரிக்காவில் தான் இருக்கீங்களான்னு சந்தேகமாவே இருக்கு. காரணம் நீங்க பதிவு வெளியிடும் நேரம் தான் !! இந்திய நேரம் காலை பத்து மணி என்றால் கூட அமெரிக்காவுக்கு பதினோரு மணி போல் இருக்கும். நீங்கள் இந்திய நேரம் ஒரு மணி போல் வெளியிடுகிறீர்கள். அது அங்கு இரவு இரண்டு அல்லது மூன்று மணி . என்னை ரொம்ப குழப்புறீங்க நண்பரே ! :)))

Anonymous said...

There is no Queue in America.....This is wrong....





















Just Kidding....Americal, people call it as 'Line'

ஆதி மனிதன் said...

சூப்பர் மாதவன்: Good thing. Keep it up.

நன்றி தமிழ்வாசி பிரகாஷ்: அப்போ எப்ப அமெரிக்கா வரபோறீங்கனு கேக்கலாமா?

ஆதி மனிதன் said...

நம்புங்க மோகன் சார். நான் அமெரிக்காவிலிருந்து தான் எழுதுகிறேன். இந்திய நேரம் 1 AM = அமெரிக்க நேரம் 11.30 PM. அப்போதுதான் எனக்கு எழுதவும் படிக்கவும் நேரம் கிடைக்கிறது:(

வக்கீல் என்றாலே கேள்விகள் தான்!!!

வருகைக்கு நன்றி அனானி: நீங்கள் சொல்வது சரிதான். நம்ம ஊர் வழக்கப்படி சொன்னால் தான் புரியும் என்பதற்காக Queue உபயோகப் படுத்தினேன். அனானியாக அப்ப அப்ப வருவது நீங்க ஒரே ஆள் மாதிரிதான் தெரியுது.

Post a Comment