நம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் கொண்டு செல்வது சகஜம். கேரளத்தில் இதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனால், அதே போல் தமிழகத்தில் பெண்கள் உடை அணிய முடியாது. அது போல் தான் ஒவ்வொரு கலாச்சாரமும். இது நாட்டிற்கு நாடு பெரும் அளவில் மாறு படுகிறது. இதை நான் கூறுவதற்கு காரணம், அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள் என்று தான் கூறியுள்ளேனே தவிர அவர்கள் அவ்வாறு செய்வது தவறு என நான் கூற வரவில்லை.
# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.
# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்போது மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.
# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.
# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).
# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.
அட ஐந்து முடிஞ்சிடுச்சே?
அமெரிக்க கஷ்டங்கள் மேலும் சில ...
அட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.
அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்?
share on:facebook
18 comments:
அமெரிக்கர்களிடம் பிடிக்காத ஐந்து விஷயங்கள் நிறைய பேர் மனதில் நினைப்பதுதான்...
Agree with all the points that you have mentioned. Hope you have never discussed about these with them :))
நன்றி இராஜராஜேஸ்வரி.
நன்றி மோகன்: சுத்தம் சம்பந்தப் பட்டது தவிர மற்ற விசயங்களை அவர்களுடன் நான் கலந்துரை யாடி உள்ளேன்.
தமிழ் மனத்தில் இன்று அதிகம் பார்வை இடப்பட்ட இடுகையில் முதல் நான்காவது இடத்தில் :
அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்
நல்லது... இதுபோல் இந்தியர்களிடம் பிடிக்காதது என ஏதாவது அமெரிக்கர் கூறியது இருந்தால் அதையும் பகிரலாமே..
http://anubhudhi.blogspot.in/
பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. //இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.//
அமெரிக்காவில் என்று மொத்தமாக எழுதியதால், எந்தப்பகுதியில் இதுவாறு இருக்கிறது என்று
குறிப்பிட்டால் நல்லது. USA ஆக இருந்தால், எந்த மானிலத்தில் என்று எழுதவும். ஏன் என்றால்,
அங்கெல்லாம் ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு தனி ரூல் புக் இருக்கிறது. ஒவ்வொரு விதமான பப்ளிக்
ஹெல்த் ப்ரோக்ராம் இருக்கிறது. அது அவரவர் பொருளாதார நிலைமை, ஊதியம், இன்ஸுரன்ஸு
இவற்றினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. எனினும் ஏழைகள் என்று சொல்லக்கூடிய அமெரிக்கர்கள்
நமது மத்திய தர வகுப்பின் ஊதியத்திற்கு மேலே உள்ளவர்கள்.
சுப்பு ரத்தினம்.
உங்களின் பாயிண்ட் 1) 4) and 5) மட்டும் நான் உடன்படுகிறேன்.
அமெரிக்கர்களை விட நான் சுத்தத்தில் மிக உயர்ந்தவர்கள்.
அவர்கள் தான் வீட்டு செல்ல பிராணியை கூட பக்கத்தில் படுக்க விடுவார்கள், அனால் தன் குழந்தையை தனி அறையில் படுக்க சொல்வார்கள்.
About point 3:
Even though there is no stated public hospital - when a person go to an emergency, regardless of his insurance status - he/she will be treated as by law.
Also, there are few states have "kind of" free health for poor and senior citizens
How is touching poop with your own hand more hygenic?
Sir
I differ with your point on the health insuranance aspect. If you go to emergency care according to
Law even if you don't have money or insurance, the hospital should treat the patients. There are many cases I saw in hospitals in which they treat poor people expecially Mexicans who neither had money nor insurance but got treatment.
I saw many small clinics run by Mexican ddoctors for Mexican/ low income people.
Thanks
நன்றி சங்கர்:
// இதுபோல் இந்தியர்களிடம் பிடிக்காதது என ஏதாவது அமெரிக்கர் கூறியது இருந்தால் அதையும் பகிரலாமே..//
அப்படி அவர்கள் பொதுவாக சொல்லுவதில்லை. அப்படியே எனக்கு தெரிந்திருந்தாலும் அதை நான் இங்கு கூற முடியாது. அப்படி கூறினால் "நீ" என்ன பெரிய இவனா என என்னை பந்தாடி விடுவார்கள்.
நன்றி சூரி:
நான் வானொலி மற்றும் செய்திகளில் படித்ததை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் சொல்வது போல் மாகாணத்திற்கு மாகாணம் சதவிகதத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் (நல்ல இன்சூரன்ஸ் இல்லாததால்) முழு மருத்துவ உதவி கிடைக்காமல் பலர் கஷ்டபடுவது உண்மைதான்.
// எனினும் ஏழைகள் என்று சொல்லக்கூடிய அமெரிக்கர்கள்
நமது மத்திய தர வகுப்பின் ஊதியத்திற்கு மேலே உள்ளவர்கள். //
அமெரிக்கர்களின் வசதியை நம்மூரோடு ஒப்பிட முடியாதே....
நன்றி ராஜ்:
//உங்களின் பாயிண்ட் 1) 4) and 5) மட்டும் நான் உடன்படுகிறேன்.//
எனக்கு தெரிந்ததையும் அறிந்ததையும் வைத்து தான் இதை எழுதினேன். பிறருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதை நான் கூடாது என சொல்லவில்லை.
நன்றி முகுந்த் அம்மா:
// I differ with your point on the health insuranance aspect. If you go to emergency care according to
Law even if you don't have money or insurance,//
நீங்கள் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அது எமர்ஜென்சிக்கு மட்டும் தான். பிறகு தொடர் வைத்திய செலவுக்கு நாம் (இன்சூரன்ஸ்) தான் செலவு செய்ய வேண்டும்.
//I saw many small clinics run by Mexican ddoctors for Mexican/ low income people.//
Yes. there might be few clinics here and there but not everywhere in USA (as far I know).
Anonymous said...
//About point 3://
Completely agree with you. As I stated in my comments above, 'YES' for the initial emergency care they don't care about insurance. But for continued treatment we/insurance co., has to pay for that.
Also the free clinics are rare. May be few in a state.
//அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம்// எல்லாம் தெரிந்த இவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்பது மட்டும் தெரியாமல் போனதற்குக் காரணம் அதீத சுயநலமே.
I beg to differ on toilet paper and health insurance. Please read the toilet paper history in wikipedia.
http://en.wikipedia.org/wiki/Toilet_paper
Using water in cold place for cleaning is impossible in winter, bathing is luxury. depending upon the country and weather conditions or social custom the cleaning mechanism is chosen. The same applies to sun glass. In northern and southern hemisphere people uses sun glass in winter as well to avoid the glare from the snow.
Be a Roman in Rome or pay the price to be yourself!
There are varities of benefits by each state government and picked CA since it is one of the most populus state in US
http://www.benefits.gov/benefits/browse-by-state/state/CA
//அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது//
உதயகுமார் சொல்வது போல் நம்மூரிலேயே அப்படி இருந்திருக்கலாம் என்று தோன்றும். ↑
தண்ணீரில் தான் பாக்டீரியா மற்றும் பல கிருமிகள் தோதாய் வளர்கின்றன. நம் பாத்ரூமுடன் சேர்ந்து இருக்கும் ஆங்கில வழி toilet எப்போதும் நசநசவென்று ஈரம். நான் பெங்களூரில் வீடு கட்டினால் அங்கே உள்ளதுபோல் நின்றுக்கொண்டு குளிக்கும் கண்ணாடி கதவுகொண்ட குளியல் வழி வைத்தால் பாத்ரூம் முச்சூடும் தண்ணீர் இருக்காது.
வீட்டில் ஐந்து பத்து பேர் மற்றும் உறவினர்கள் / நண்பர்கள் என்று யார் வந்து போனாலும் எல்லோருக்கும் விளக்கி அவர்களை யூஸ் செய்ய வைப்பதற்குள் தாலி அறுந்துவிடும். நன்கு படித்தவர்களும் அந்த பைப்பை பிடித்துக்கொண்டு மூடியை திறக்காமல் அப்படியே அலம்பி - அதை கழுவும் நம் மனைவியை / வேலைக்காரியை நினைத்து பாருங்கள்.அசிங்கம் ஆதி மனிதன் !!⇍
நம்முடைய ஜனத்தொகைக்கு பேப்பர் என்று இருந்திருந்தால் எத்தனை குடிக்கவே லாரியில் தண்ணி வாங்கும் நாம் அதை இதற்கு செலவழிக்காமல் சேர்த்து இருக்கலாம் ? யோசியுங்கள். ↮
நான் அமெரிக்காவில் இருந்த ஒன்பது வருடமும், பேப்பர் தவிர - காஸ்ட்கோவில் விற்கும் வெட் wipes சேர்த்து உபயோகிப்போம். குளிக்கும் போது எனிவே நன்கு சுத்தம் செய்துகொண்டால் போதும்.↮
Post a Comment