Friday, January 8, 2010

I.T. நிஜம் - நடப்பது என்ன?மற்ற துறைகளை காட்டிலும் IT சற்று மாறுப்பட்ட துறை என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு முக்கால்வாசி virtual தான். எங்கோ இருக்கும் ஒரு நாட்டின் கம்பனிக்கு இந்தியாவிலிருந்து வேலை செய்து கொடுக்கிறோம். வெளிநாட்டில் உள்ள முதலாளி (customer) இங்கு வேலை செய்யும் நபர்களின் (offshore team) முகத்தை கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்படியான ஒரு சூழ்நிலையில் ஒரு புது ப்ராஜக்டை எப்படியெல்லாம் பேசி தங்கள் கம்பனிக்கு கொண்டு வருகிறார்கள் இவர்கள் என்பதை பற்றிய ஒரு கற்பனை கலந்துரையாடல். இதில் சில சம்பவங்கள் நிஜத்திலும் நடந்ததுண்டு.
 
TM: Team Member
PM: Project Manager
TL: Team Lead
BH: Business Head
SH: Sales Head

TL  தன் டீம் மெம்பெர்ஸ் எல்லோரையும் அவசரமாக மீட்டிங்குக்கு அழைக்கிறார். அங்கே...

TL: Hai everybody, உங்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ். நமக்கு ஒரு புது கிளைன்ட் கிடைச்சிருக்காங்க. அவங்ககிட்ட இருந்து எப்படியும் ஒரு புது ப்ராஜக்டை நாம வாங்க ட்ரை பண்றோம். அதுக்கு முன்னாடி உங்க யாருக்காவது C$$ டெக்னாலஜி தெரியுமான்னு (எனக்கு தெரியாது) நான் தெரிஞ்சிக்குனும். ஏன்னா அது நமக்கு தெரிஞ்சாத்தான் நமக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைக்கும்.

TM1: C$$ அப்படினா?

TM2: நான் கேள்வி பட்டது கூட கிடையாது.

Others: எங்களுக்கு அத பத்தி ஐடியாவே இல்ல.

TL: அப்படியெல்லாம் நாம சொல்ல முடியாது. இன்னைலேர்ந்து நீங்க எல்லாம் அத தெரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க. புக்ஸ் படிங்க, கூகுள தேடுங்க. என்ன பன்னுவிங்களோ எனக்கு தெரியாது நீங்க எல்லாம் அதுல வொர்க் பண்ண தயாரா இருக்கணும்.

ஒரு மணி நேரம் கழித்து TL-லுக்கு PM இடமிருந்து கால்.

PM: உடனே என் cube க்கு வாங்க.

TL(PM ரூமில்): Hai how are you?

PM: I am fine-ஆ இல்லையானு நாளைக்குதான் தெரியும். இந்த C$$ டெக்னாலஜி ப்ராஜெக்ட நம்ம எப்படியாவது எடுக்கனும்னு மேலே இருந்து ஒரே பிரஷர். நம்ம டீம் கிட்ட பேசுநீங்களா? யாருக்காவது அந்த டெக்னாலஜி தெரியுமாமா?

TL: Oh yeah. நம்ம டீம்ல கேட்டேன். யாருக்கும் C$$ எச்பீரியன்சே இல்ல. ஆனா கொஞ்சம் பேருக்கு C$$ பத்தி தியரிட்டிக்கள் நாலேஜ் இருக்கு. எனக்கும் C$$ பத்தி ஐடியா இருக்கு(இதப் பார்ரா). அதனால நம்ம பசங்களுக்கு கொஞ்சம்
ட்ரைனிங் கொடுத்தா போதும். ஈசியா பிக்கப் பண்ணிக்குவாங்க (அப்பாடா தப்பிச்சோம்).

PM: Good, Good. அப்பப்ப எனக்கு ட்ரைனிங் ப்ராகரச அப்டேட் பண்ணுங்க. Thanks.

(PM calling BH from his cube)

PM: Hai how you doing? Yeah Yeah, No problem. We have few people who has experience in C$$. With them ,we can train other guys too. So no issues. Go ahead with the negotiation with the client.

BH: Thats a great news. Thanks and I will catch you later.

(US office)

(BH-க்கு SL இடமிருந்து call)

SH: Hai, how are you? Do you have any updates on the C$$ knowledge from the offshore team?

BH: Yes, I spoke to the PMs here. They said that they have executed one or two small projects on C$$. So it should not be a big deal for them to execute the new project.

SH: Really. Great. Okay I will talk to you tomorrow. Bye.

(US client office. Meeting with client manager)

CM: Hey dude, what's up?

SH: Hai, a good news for you. Just now I checked with my offshore team. They have executed couple of big projects on C$$ technology at offshore and we have a team already ready who has real time experience in C$$ . So it is just a mater of when we can start the project.

CM: Thats really a great news. So send me a proposal as soon as possible.

SM: Thank you very much(ஒழிஞ்சடா நீ இதோட).

இப்ப ஓரளவு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். IT-ல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு project புடிக்கிறாங்கனும் அதனால எப்படியெல்லாம் project team கஷ்டபடுதுனும்.

அப்படியே உங்களுக்கு கஷ்டமா இல்லனா மேட்டர் புடிச்சிருந்தா ஒரு ஓட்ட போட்டுடுங்க.  தேங்க்ஸ்!

டிஸ்கி: இதை போல் I. T. கம்பனிகளில் பல கதைகள் உலாவும். நான் யாரையும் இங்கு குறிப்பிட்டு சொல்லவில்லை.
share on:facebook

16 comments:

maddy73 said...

HA.. HA.. .HA.... LOL ( வாய் விட்டுச் சிரிச்சா, நோய் விட்டுப் போகும் )

Ramesh said...

Great! Very nice, heard from many people on such stories!

குப்பன்.யாஹூ said...

IPPADI USUPPU ETHI USUPPU ETHI THAAN RANAKALAM AAKITAANGA. (EXAMPLE- SATYAM, NORTON, ADOBE)

SAME HAPPENS IN BANK HOME LOANS DISCUSSIONS (EXAMPLE; SUB MARINIE CRISIS, DUBAI WORLD, PAL BEACH DUBAI PROJECTS)

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி ரமேஷ்.

ஆதி மனிதன் said...

வாய விட்டுட்டிங்கனா அப்புறம் சிரிக்க முடியாது மாடி(இதான LOL). அப்புறம் நீங்க ஏதாவுது குற்றம் குறை கண்டு புடிச்சு விடுவீங்கலோனு ஒரு பயம் வேற எனக்கு. நல்ல வேலை நான் தப்பிசேன் இந்த பதிவில்.

maddy73 said...

// அப்புறம் நீங்க ஏதாவுது குற்றம் குறை கண்டு புடிச்சு விடுவீங்கலோனு ஒரு பயம் வேற எனக்கு //

தவறு இருந்தாலும், சொல்லும் விதத்தில் சொல்லவேண்டும் (ஊக்குவிக்கும் வண்ணம் ie +vely) என்பதை எனக்கு உணர்த்தியமைக்கு நன்றி.
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!' என்பதற்கு, நான் நக்கீரன் அல்லவே!

வரதராஜலு .பூ said...

இப்பிடிதான் பிசினஸ் செய்ராங்களா?

சூப்பரப்பு

Anonymous said...

kajscka x

ஆதி மனிதன் said...

நல்லா சொன்னீங்க குப்பன். வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றி.

ஆதி மனிதன் said...

அப்படிதான் ஊர்ல பேசிக்கிறாங்க வரதராஜ்.
வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

Good one

ஆதி மனிதன் said...

//maddy73 said... தவறு இருந்தாலும், சொல்லும் விதத்தில் சொல்லவேண்டும் (ஊக்குவிக்கும் வண்ணம் ie +vely) என்பதை எனக்கு உணர்த்தியமைக்கு நன்றி.//

//ஆதி மனிதன் said... அப்புறம் நீங்க ஏதாவுது குற்றம் குறை கண்டு புடிச்சு விடுவீங்கலோனு ஒரு பயம் வேற எனக்கு. நல்ல வேலை நான் தப்பிசேன் இந்த பதிவில்.//

நான் மேலே கூறியதை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என நம்புகிறேன். உண்மையில் நீங்கள் ஒவ்வொரு பதிவையும் முழு கவனத்துடன் ஆழ்ந்து படிப்பதாகவே இதை நான் எடுத்துக்கொள்கிறேன்.

maddy73 said...

//நான் மேலே கூறியதை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என நம்புகிறேன்.//

நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை

Chitra said...

சிரிச்சிகிட்டே கழுத்தறுக்கிற வேலை, இங்கே ஜாஸ்தியோ? அங்கே நடக்குற கூத்தை நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க.

ஆதி மனிதன் said...

// Chitra said...
சிரிச்சிகிட்டே கழுத்தறுக்கிற வேலை, இங்கே ஜாஸ்தியோ? அங்கே நடக்குற கூத்தை நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க.//

வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றி சித்ரா மேடம்.

ரோஸ்விக் said...

ஐயய்யோ நம்ம ரகசியத்தை இப்படி பொதுவுல போட்டு உடைச்சுட்டீங்களே...ஏற்கனவே நம்மள ஒரு பயலும் மதிக்கிறது இல்ல... :-)))

Post a Comment