Wednesday, August 28, 2013

ஏ......நானும் பதிவர் தான். நானும் பதிவர் தான். சொன்னா நம்புங்க சார்....

அட, கீழே உள்ள படத்த பார்த்த பிறகாவது நம்புங்கப்பா. நானும் ஒரு பதிவர் தான்னு. இதே போல் பதிவர் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரின் பெயரும் கீழே உள்ள லிங்க் -ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்து கொள்ளாதவர்கள் உடனே விழா குழுவினருக்கு ஈமெயில்/அலை பேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதி படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விழாவுக்கு வருகை தரும் பதிவர்கள் பட்டியல்...




பதிவர் திருவிழா ஏற்பாடுகளை பல பதிவுகளில் படிக்கும் போது இது தான் நினைவுக்கு வருகிறது. ஒரு கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை அப்புறம் அவர்களுடைய குடும்பத்தினர் என்றால் ஒரு பத்து பேருக்கு மேல் தேராது. அவர்கள் முக்கியமானவர்கள் என்றாலும் கூட அதை விட முக்கியம் திருமணத்திற்கு வருகை தரும் உறவுகள் தான். அதனால் தான் வந்திருக்கும் உறவுகளை முதலில் கவனித்து விட்டு தான் அவர்களே சாப்பிட போவர்கள்.  

கல்யாணத்தன்று அவர்கள் எல்லோருடைய கவனமும் அந்த சொந்தம், இந்த சொந்தம் என்று பல நூறு மையில் தூரத்து சொந்தக்காரனை எல்லாம் நீங்க சாப்பிட்டீங்களா? நீங்க சாப்பிட்டீங்களா? கேட்டு கேட்டு சாப்பிட வைப்பதிலும், வரவேற்பதிலும் இருக்கும். அது போல் தான் நம்முடைய இரண்டாம் ஆண்டு பதிவர் திருவிழாவும். பெரிய பதிவர்கள் எல்லாம் தாங்களாகவே முன் வந்து தங்கள் வீட்டு விசேசம் போல் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டுள்ளார்கள். யாருக்குக்காக? எதற்காக? எல்லாம் விழா சிறப்பாக நடை பெற வேண்டும் என்பதற்காக. நாம் எல்லாம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.

தங்கும் வசதி, மதிய உணவு (வெஜ்/நான்-வெஜ்) என்று எல்லாவற்றையும் தடபுடலாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நம்மை போன்ற சாதாரண பதிவர்களுக்காக தான். இன்னும் சொல்லப்போனால் நம்ம பதிவர் திருவிழாவின் சிறப்பு அம்சமே இது தான். ஒரே ஒரு பதிவு போட்டவராக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பதிவு போடுவாராக இருந்தாலும் எல்லோருக்கும் அடை மொழி பதிவர் தான்.

ஆகவே பதிவர்களே, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வரும் ஞாயிறு அன்று நடை பெற உள்ள இரண்டாம் ஆண்டு பதிவர் திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டியது மட்டும் தான். விட்டாச்சு லீவுன்னு ஞாயிற்று கிழமை வீட்டுல உட்கார்ந்து விடாதீர்கள்.

நிகழ்ச்சி நிரல் கீழே.



share on:facebook

Sunday, August 25, 2013

ஒரே பதிவு, ஒரு லட்சம் ஹிட்ஸ். வீடுதிரும்பல் சாதனை.

ஒரே பதிவில், அதுவும் வெளியாகி ஓரிரு மணி நேரத்தில் ஒரு லட்சம் ஹிட்ஸ் என்றால் உண்மையிலே அது சாதனை தான். எது அந்த பதிவு என்று நீங்கள் கேட்கும் முன், உண்மையை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். பதிவுக்கு கிடைத்தது ஒரு லட்சம் ஹிட்ஸ் அல்ல. மாறாக அதை விட பெரிதாக ஒரு லட்ச ரூபாய் உதவி தொகை. ஆம். வீடுதிரும்பலில் வெளியான சேவை இல்ல பதிவு தான் அது.

எங்கள் அம்மா ஆசிரியராகவும், பின் கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய தஞ்சை அரசு சேவை இல்லம் பற்றி ஆதி மனிதனில் வெளியான பதிவை தொடர்ந்து நண்பர் மோகன் குமார் அவர்கள் அப்பள்ளி பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்களை நாடியபோது அதற்க்கான ஏற்பாடுகளை அம்மா செய்து கொடுத்தார்கள். அதை தொடர்ந்து வீடு திரும்பலில் வெளியான சேவை இல்லம் பற்றிய பதிவை பார்த்து பதிவு வெளியான ஓரிரு மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் இருந்து தமிழர்களால் நடத்தப்படும் AIMS India என்ற தொண்டு நிறுவனத்திடமிருந்து தொலை பேசி அழைப்பு. பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அவர்கள் கூறியது போலவே நாங்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் ஓரிரு வாரங்களில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான உதவி தொகை வந்து சேர்ந்தது. அதன் மூலம் பள்ளிக்கு நான்கைந்து வகுப்புகளுக்கு தேவையான 10 க்கும் மேற்பட்ட இரும்பினால் ஆன டேபிள் மற்றும் பெஞ்ச்சுகள் TANSI யில் ஆர்டர் கொடுத்து நல்ல தரத்துடனும், உட்கார, எழுத வசிதியுடனும் அழகாக வண்ணம் பூசி ஓரிரு மாதங்களில் வந்து சேர்ந்தது.

AIMS India தொடரபு கிடைத்ததிலிருந்து பள்ளிக்கு உதவிகளை ஒப்படைக்கும் வரை AIMS India வின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பாலகுமார், AIMS India வின் தமிழக தொடர்பு NAMCO ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவா அவர்களும், சேவை இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு), அலுவலர் திரு. அசோகன், நண்பர் மோகன் குமார் மற்றும் எனது அம்மா ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்புக்கும், உதவிக்கும் இதன் மூலம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த அகஸ்ட்-15 ஆம் தேதி இரு பெரும் விழாவாக சுதந்திர தினம் மற்றும் உதவி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பள்ளி பொறுப்பாளர்கள் அழைத்ததின் பேரில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தார்கள். அது தொடர்புடைய புகைப்படங்கள் கீழே.

பதிவர் திருவிழா நடைபெறும் இந்த தருணத்தில் பதிவு/பதிவர்களுக்கு கிடைத்த கிடைத்த மரியாதையாகவே இந்த உதவித்தொகையை நான் பெரிதும் கருதுகிறேன்.

சேவை இல்லம் சார்பாக உற்சாக வரவேற்ப்பு:


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (அம்மாவுக்கு)...


தமிழ்த்தாய் வாழ்த்து...


கண்காணிப்பாளர் வரவேற்புரை....


அம்மாவுக்கு மரியாதை...


NAMCO ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவாவுக்கு மரியாதை...


வீடு திரும்பல் திரு. மோகன் குமாருக்கு மரியாதை...


விழாவில் பேசியோர்கள்...




மோகனுக்காக ஒரு ஸ்பெஷல் க்ளோஸ்-அப் ஷாட்...


நன்றியுரை சேவை இல்ல திரு. அசோகன் அவர்கள்...


மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்...




டேபிள் பெஞ்ச் சாம்பிள்....


மாணவிகளின் கலை நிகழ்சிகள்...


மதிய உணவுக்கு முன் சாமி கும்பிடும் மாணவிகள்...


மதிய உணவு கூடம். இதற்கும் யாராவது புண்ணியவான் மேஜை நாற்காலிகள் செய்து கொடுத்தால் கோடி கும்பிடலாம்.


தஞ்சை சேவை இல்லத்தில் சேர தகுதி மற்றும் அதன் சேவைகள் குறித்து பள்ளியின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு இத்தகவலை அளித்து உதவலாம்.





share on:facebook

Thursday, August 22, 2013

பதிவர் திருவிழா Caption : பிரபல பதிவர்கள் கவனத்திற்கு


ஆளப்பிறந்தவன், அண்ணி ஆக பிறந்தவள்னு தமிழ் சினிமாக்களுக்கு பேர் வைக்க கஷ்ட படுறாங்களோ இல்லையோ. இந்த மாதிரி caption என்னா வைக்கறதுன்னு தான் 11 பேர் கொண்ட குழு அமைத்து பாடு படுறாங்கன்னு நமக்கு தெரிந்த சினிமா PRO ஒருத்தர் சொன்னாரு.

சரி, அவங்களாம் இப்படி வைக்கும் போது, நம்ம பதிவர் பாசறைக்கும் (பாசறை கவனிக்க: பின்னாடி அரசியல் கட்சி எதாவது தேர்தல் நேரத்தில நம்ம கிட்ட அதரவு கேட்டு வரும் போது கெத்தா இருக்கும்ல. அதான்) இந்த பதிவர் திருவிழாவின் போது ஒரு caption கண்டுபிடித்து வைத்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் உதித்தது தான் இது. சில caption உண்மையிலேயே நல்லா தான் வந்திருக்கு. சில சும்மா கவுண்டுக்கு.

ஆகையால், பதிவுலக பெரியோர்களே, ஜாம்பாவான்களே, செயற் குழுவிலோ, பொது குழுவிலோ இந்த கோரிக்கையை முன் வைத்து நிறைவேற்றி தருமாறு கீழே கமெண்ட் போட்டவர்கள் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அப்புறம், வழக்கம் போல மேலும் நல்ல captions உங்களுக்கு உதித்தால் அவசியம் கமெண்டில் போடவும். மீண்டும் தலைப்பை படிக்கவும். கமெண்ட் போடும் ஒவ்வொருவரும் பிரபல பதிவராக கணக்கிடப்படுவர்.

1. Blogging : A new free world

2. Blogging: Right to Think, Read & Write

3. Bloggers: Citizens of the free world

4. Time to Blog

5. Time to Write

6. Time to Read

7. Time to Comment (தனபாலன் சார் கவனத்திற்கு)

அடடா, தமிழ் பிளாகர்களுக்கு தமிழ்ல அடை மொழி வேணுமேனு நினைத்ததின் விளைவு இது...

1. பதிவுலகம்: அது புது உலகம் 

2. சிந்திக்க, எழுத, பின்னூட்டமிட (எப்புடீ?)

4. பேனா முனையை விட கீ போர்ட் வலிமையானது (நாங்களும் கண்டு பிடிப்போம்ல!)

5. தமிழ் வாழ்க, பதிவர் ஒற்றுமை ஓங்குக (யாருப்பா அது, அங்கு எதிர் வினை பதிவு போட கிளம்பறது?) 
   

share on:facebook

Tuesday, August 20, 2013

பதிவர் திருவிழா: தலை காட்டும் பதிவர்கள் முகம் காட்டாமல் தப்பிப்பது எப்படி? அரிய யோசனைகள்...



அது என்னமோ தெரியல. எதனால் புனை பெயரில் பதிவு எழுத ஆரம்பித்தேன் என எனக்கே தெரியவில்லை. ஆனால் இன்று அதே பழகி விட்டதால் என்னை வெளிக்காட்டிக்கொள்ள எனக்கு கூச்சமாக இருக்கிறது. அதை விட புனை பெயரில் நாம் யாரென்றே அடுத்தவர்க்கு தெரியாமல் எழுதுவதில் ஒரு சுவாரசியமும் சுகமும் உள்ளது. அதற்காக நான் கண்டபடி எல்லாம் எழுதுவதில்லை. இதனாலேயே பதிவர்களிடம் நேரிடையாக பழகும்/பேசும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அது தான் என் மிக பெரிய வருத்தமே.

சரி, பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டால் அங்கு கூட்டத்தோடு கூட்டமாக எல்லோரையும் பார்த்து விடலாம் என்றால், கடந்த ஆண்டு நடந்த முதல் திருவிழாவின் போது மும்பையில் இருந்ததால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. ஆதலால் இம்முறை நிச்சயம் கலந்து கொள்ள ஏற்கனவே வீடு திரும்பல் மோகன் குமார் மூலம் என்னுடைய வரவை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டேன். கூடவே என்னுடைய பங்களிப்பையும்.

செப்டெம்பர்-1 ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு குழப்பம் தான். அதாங்க தலைப்பை திரும்பி படிங்க...

அதற்காக ஒரு சில யோசனைகள் வைத்திருக்கிறேன். எனக்காக மட்டும் அல்ல. என்னைப்போல் ஒரு சில/பல முகம் காட்ட விரும்பாத பதிவர்கள் தைரியமாக பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள மண்டையை குடைந்து சில யோசனைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1. அரசியல் கட்சி தொண்டர்கள்/சினிமா நடிகர்களின் ரசிகர்கள் செய்வது போல் அவரவர்க்கு பிடித்த ஒரு முகமூடியை அணிந்து கொண்டு விழாவில் கலந்து கொள்ளலாம்.

2. உங்களை போல முகம் காட்டாத அதே நேரம் பதிவர் விழாவுக்கு வராத ஒரு பதிவரின் பெயரில் நீங்கள் பங்கேற்கலாம். ஆனால் இவர் என்னை Impersonate செய்து விட்டார் என்று 66A அல்லது ஏதோ ஒரு தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் B பிரிவின் படி உங்கள் மேல் கேஸ் போடாமல் இருக்க வேண்டும்.

3. பெண் பதிவர்கள் என்றால் பர்தா போட்டுக் கொண்டு கலந்து கொள்ளலாம். 

4. கழுத்தில் no photos பிளீஸ் என்று ஒரு tag கட்டிக் கொள்ளலாம்.

5. குறிப்பாக மதிய உணவின் போது நான்-வெஜ் சாப்பிடுபவர்கள் கோழிக் காலை கடிக்கும் போது சுற்றும் முற்றும் பார்த்து சாப்பிட வேண்டும். இம்மாதிரி நேரங்களில் பலர் போட்டோ எடுக்கப் படுவார்கள்.

இதுக்கும் மேல நல்ல யோசனை இருந்த சொல்லுங்கள். நானும் ட்ரை பண்றேன். எப்படியோ எல்லோரும் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். அது தான் முக்கியம்.

நிகழ்ச்சி நிரல் கீழே....




share on:facebook

Sunday, August 18, 2013

அன்புள்ள அப்பா

அப்பா. இந்த உறவுக்கு தான் என்ன ஒரு மரியாதை, கம்பீரம், மதிப்பு. காலம் எல்லா வலியையும் ஆற்றும் என்பார்கள். என்னை பொருத்தவரை சில வலியை காலம் மட்டுதான் படுத்த முடியும். மறக்க வைக்க இயலாது.

அப்பா காலமாகி அகஸ்ட் 15 வுடன் 5 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அவரின் நினைவும் பாசமும் இருப்பும் என் நினைவை விட்டு அகலவில்லை. அப்பாவின் சிறப்பு குணங்கள் என சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், அது எல்லோருடனும் வயது வித்தியாசம் இல்லாமல் பழகுவது. தீண்டாமை ஜாதி/மதம் பிரித்து பார்க்காமை மற்றும் அவரின் எல்லோருக்கும் உதவும் குணமும் கூடவே தவறுகளை தட்டி கேட்கும் தைரியமும் தான்.

எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மட்டுமில்லாமல் என் நண்பர்களிடம் கூட ரஜினி, கமல் என்று திரையுலகினர் ஆரம்பித்து அரசியல் வரை சுவாரசியமாக விவாதமும், சண்டையும் போடுவார். அப்போது பெரும்பாலும் நான் அப்பாவின் எதிர் பக்கத்தில் தான் இருப்பேன். நான் சிறு வயதாக இருக்கும் போது கிராமத்தில் விவசாய தொடர்புகள் இருந்தது. அப்போது எங்கள் (தஞ்சை) வீட்டிற்கு வருவதற்கு வேலை ஆட்கள் போட்டி போட்டுக்கொள்வார்கள். காரணம், மாப்பிளை அய்யா  வீட்டுக்கு போனால் நல்ல சாப்பாடு கிடைக்கும். வரும் போது சினிமா பார்க்க காசு என்று எல்லாம் தருவார்கள்  என்றுதான். அதே போல் அனைவரையும் அந்த காலத்திலேயே வீட்டிற்குள் உட்கார வைத்து தான் சாப்பாடு போடுவார்கள்.

யார், வீட்டு வாசலில் வந்து உதவி கேட்டாலும் ஏதும் இல்லை என்று வீட்டில் உள்ளவர்கள் யாரும் சொல்லிவிட கூடாது. நம்மால் முடிந்ததை தேவை படுபவர்களுக்கு செய்ய வேண்டும். போகும் போது என்னத்தை கட்டிக்கொண்டு போக போகிறோம் என அடிக்கடி கூறுவார். அதே போல், எங்கு யார் தவறு செய்தலும் அதை தட்டி கேட்க தயங்க மாட்டார்.

அதே போல் அவர் விரும்பியது போலவே கடைசி வரை வாழ்ந்தார். இருக்கிறவரை சந்தோசமாக இருக்கணும். போகும் போது பட்டுன்னு போய்டணும் என்று சொல்லிக்கொண்டிருப்பார். அதே போல் 2008 அகஸ்ட் 15 அன்று காலை தூங்கி எழுந்தவர் வழக்கம் போல் கிளீன் சேவ் செய்து குளித்து முடித்து திருநீர், குங்குமம் என்று பளிச் முகத்துடன் சாமி கும்பிட்டு காலை உணவு அருந்தியவர், வெளியே சிறிது நேரம் சென்று விட்டுவந்து, மதியம் வீட்டில் உணவருந்தி விட்டு படுக்க சென்றவர் தான்.

அதன் பிறகு நடந்தவைகளை மீண்டும் அசை போட எனக்கு மனதளவில் தெம்பில்லை.

அப்பா...நீங்கள் என்றும் எங்கள் நினைவில். அப்பா இறந்த செய்தி கேட்டு அமெரிக்காவில் உள்ள என் அமெரிக்க நண்பி ஒருவர் சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. I know how difficult it is to lose a parent...

Yes it is...







share on:facebook