இன்று அட்லீஸ்ட் நகரங்களில் தெருவுக்கு ஒருவர் அமெரிக்காவிலோ அல்லது வேறு நாடுகளிலோ நல்ல வேலைகளில் உள்ளார்கள். இதில் பெரும்பாலும் கொடுத்து வைத்தவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஸ்பவுசுக்கு ஆன வீசாவில் வரும் கணவன்/மனைவிமார்களே. பெரும்பாலும் ஆண்கள் H1/L1 போன்ற வொர்க் வீசாவிலும் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் H4/L2 போன்ற டிபன்டன்ட் வீசாவிலும் வருவார்கள்.
உலகத்திலேயே அதிகம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் டிபன்டன்ட் வீசாவில் வருபவர்கள் தான். பின்னே? மற்றவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு படித்து வேலை பார்த்து இன்டர்வியு அட்டன்ட் செய்து வாய்ப்புக்காக காத்திருந்து ஒரு வழியாக வந்து சேர்வார்கள். ஆனால், இதில் எந்த கஷ்டமும் இல்லாமல் ச்பவுஸ் என்ற ஒரே தகுதியுடன் நேராக அமெரிக்காவில் காலடி வைக்கும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு மட்டும் தான். அமெரிக்கா பற்றி சொல்லும் போது இன்னொன்றையும் நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவருடைய டிப்பண்டன்ட்ஸ் அவருடைய மனைவி/கணவர் மற்றும் குழைந்தைகள் மட்டும் தான். பெற்றோர்கள் டிப்பண்டன்ட்ஸ் கிடையாது. அவர்கள் சுற்றுலா வீசாவில் மட்டும் தான் வர முடியும். அதிலும் ஏகப்பட்ட பார்மாலிடீஸ்.
சரி, அப்படி அமெரிக்கா வரும் இல்லத்தரசிகள் இங்கு எப்படி பொழுதை கழிக்கிறார்கள் என்பதை தான் இங்கு பார்க்க போகிறோம். இல்லத்தரசிகளை பொறுத்தவரை பெரும்பாலனோர் அமெரிக்காவை விரும்புகிறார்கள். அதற்க்கு காரணம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இங்கு அதிகம் கட்டுப்பாடு கிடையாது. அதாவது மாமனார், மாமியார், நாத்தனார் கட்டுபாடுகள் கிடையாது. பெரும்பாலும் திருமணமான புதிதில் வருபவர்களுக்கு தனிமையும் சந்தோசமும் தொடர்ந்து கிடைப்பதும் ஒரு காரணம். அதே போல் வீட்டு வேலைகள் என்று பார்த்தாலும் பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றுக்கும் மிஷினும் தேவை என்றால் எந்நேரமும் வெளியில் சாப்பிடும் வசதியும் நினைத்த நேரத்தில் தூங்கி எழும் வசதியும் ஒரு காரணம்.
இது ஒரு புறம் என்றால், அமெரிக்காவில் வேலை பார்க்கும் பெண்கள் நிலைமை வேறு. கணவன் மனைவி மட்டும் என்றால் ஓரளவு பரவாயில்லை. சமாளிப்பது ஒன்றும் பெரிதில்லை. ஆனால், குழந்தை(கள்) இருந்து வேலைக்கு இருவரும் சென்றால் அதை விட பெரிய கஷ்டம் வேறு இல்லை(குழந்தைக்கு தான்). காலையிலேயே எழுந்து குழந்தையை ஸ்கூலுக்கோ டே கேருக்கோ அனுப்பி விட்டு அவசர அவசரமாக அலுவலகம் சென்று நாள் முழுதும் குழந்தை சாப்பிட்டதா தூங்கி இருக்குமா என கவலை பட்டுக் கொண்டே மாலை ஆனதும் சரியான நேரத்துக்கு சென்று குழந்தையை மீண்டும் டே கேரில் இருந்து அழைத்துக் கொண்டு வருவதும் என சற்று கடுமையான பணி தான். அமெரிக்கா என்பதால் குழந்தை வளர்ப்பில் தாய் தந்தை என இருவரும் பாகுபாடு இல்லாமல் பொறுப்புகளை எடுத்துக் கொள்வார்கள். அதாவது நான் மேலே கூறியதை சில பல நேரங்களில் குழந்தையின் தந்தையும் செய்வார்.
என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் தோழி தன் இரு வயது குழந்தையை டே கேரில் விட்டு விட்டு மதிய உணவின் போது எப்போதும் குழந்தையை பற்றியே பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும் அவருக்கு தொண்டைக் குழிக்குள் உணவு இறங்க கூட மறுக்கும். அந்த அளவிற்கு குழந்தையின் பிரிவு அவரது ஏக்கத்தில் தெரியும். இந்தியா என்றால் அட் லீஸ்ட் குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு பாட்டி தாத்தாவோ இல்லை வேறு யாரோ இருப்பார்கள். இங்கு தான் அதுவும் கிடையாதே. அப்படி குழந்தையை விட்டு விட்டு இருவரும் ஏன் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சரி அதை அப்படியே விட்டு விடுவோம்.
அடுத்து...ஜீன்சுக்கு பழகிப் போன தமிழ் பெண்கள்.
உங்களுக்கு தெரியுமா...?
அமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்?
அடுத்து...ஜீன்சுக்கு பழகிப் போன தமிழ் பெண்கள்.
உங்களுக்கு தெரியுமா...?
அமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்?
share on:facebook
14 comments:
இந்த சூழல் நம் இந்தியாவிலும் பெருநகரங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் இருக்கிறது..
அருமையான கட்டுரை..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
நிதர்சனமான பகிர்வு. பாராட்டுக்கள்..
True. The post could have been little more detailed also.
அருமையாகவும், எளிமையாகவும் இருக்கிறது உங்கள் அலசல். ஆனால் இது எல்லா வெளிநாட்டுக்கும் பொருந்தும் உண்மை. அமெரிக்காவில் பெற்றோர்களை அனுமதிப்பதில்லை என்பது கூடுதல் தகவல்.
அய்யா,
நீங்கள் சொல்வது போல அமெரிக்காவிற்கு டிபெண்டண்ட் விசாவில் வரும் பெண்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் கொடுத்து வைத்ததாகத்தான் தோனும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, மிகப்பெரிய போர் ஆக ஆகிவிடும். இங்கு வந்த கொஞ்ச நாட்களில், பேசிவதற்கு யாரும் இல்லாத, சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாமல் எல்லாவற்ரிற்க்கும் கணவரை நம்பிக்கொண்டு வாழும் வாழ்க்கை கடினமாகி விடும். அதுவும் இந்தியாவில் வேலை பார்த்து விட்டு, இங் கு வந்து ஹவுஸ்வைப் ஆக இருப்பவர்களுக்கு தனிமை மிக மிக கொடியது.அதனாலேயே, வேலை செய்யும் அங்கீகாரம் வந்தவுடன் பலர் வேலைக்கு கிளம்வி விடுகிறார்கள்.
இது ஒரு வகை என்றால், பல இந்திய, அதுவும் தமிழ் கு்டும்பங்களில் இருக்கும் மகளிர் ஏனோ டிரைவிங் லைசென்ஸ் கூட எடுத்து கொள்வதில்லை எல்லாவற்றிர்க்கும் கணவனை சார்ந்து கொண்டு வாழ விரும்புவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.
நல்ல அலசல்.
//உலகத்திலேயே அதிகம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் டிபன்டன்ட் வீசாவில் வருபவர்கள் தான். பின்னே? மற்றவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு படித்து வேலை பார்த்து இன்டர்வியு அட்டன்ட் செய்து வாய்ப்புக்காக காத்திருந்து ஒரு வழியாக வந்து சேர்வார்கள். ஆனால், இதில் எந்த கஷ்டமும் இல்லாமல் ச்பவுஸ் என்ற ஒரே தகுதியுடன் நேராக அமெரிக்காவில் காலடி வைக்கும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு மட்டும் தான்.//
I am so surprised about your views on this. முகுந்த் அம்மா சொல்பது போல், தனிமை ஒரு கொடுமை.. சில மாநிலங்களில் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது கடினமாக இருந்தது.. இப்போது பரவாயில்லை. அதே போல், வேலை குறைவு என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. வீட்டு வேலை என்பது நம் மனதிற்கு ஏற்றபடி தான். நல்ல ஆரோக்யமான உணவு தான் குடும்பத்திற்கு என்று முடிவு செய்துவிட்டால், வெளியே சென்று உணவு அருந்துவதை விட்டு விட வேண்டியிருக்கும். நம் இந்திய பாத்திரங்களை டிஷ் வாஷர்கள் சரியாக சுத்தம் செய்யாது. ஒருமுறை எல்லா பாத்திரத்தையும் ரின்ஸ் செய்துவிட்டு போடவேண்டியிருக்கும். சில நாள், அதற்க்கு நாமே சுத்தம் செய்துவிடலாம் போல தோன்றும். இந்தியாவிலிருந்து வாங்கிய துணிகள் பலவற்றை வாஷிங் மெஷினில் போட முடியாது. சாயம் போய்விடும்.. காலை எழுந்தவுடன் அடுத்த இரண்டு மணி நேரம், நம் ஊர் போலவே, எல்லோரும் பள்ளி / அலுவலகம் செல்லும் வரை வேலை உயிரை வாங்கும்..
வீட்டு வேலைக்கு உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ள முடியாது..
அமேரிக்கா வருவது அதிர்ஷ்டமா என்றால் கண்டிப்பாக இல்லை! மற்ற ஊர் போல இதுவும் ஒரு சாதாரண ஊர் தான். நம் ஊரில் இருக்கும் சில சிக்கல்கள் இதில் இல்லை. இதில் இருக்கும் சிக்கல்கள் பல நம் ஊரில் இல்லை.
முதலில் இப்பதிவை படித்த/பார்த்த அனைவருக்கும் நன்றி.
அனேகமாக இந்த பதிவுதான் ஒரே நாளில் கடந்த முப்பது நாட்களுக்குக்கான டாப் பதிவில் முதல் நாளே இடம் பிடித்த பதிவாக இருக்கும். சுமார் எண்ணூறு பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்பதிவை பார்க்க வந்து மற்ற பதிவையும் பார்த்த வகையில் ஒரே நாளில் என் பிளாகுக்கு ஆயிரத்து எண்ணூறுக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்துள்ளது. இதற்க்கு காரணமான நண்பர்/நண்பிகளுக்கு மீண்டும் என் நன்றி. மற்றபடி எல்லோருடைய பின்னூட்டத்துக்கும் தனி தனியாக என்னுடைய பதிகளும் உண்டு.
நன்றி சங்கர். ஆம், நீங்கள் சொல்வதும் உண்மை.
நன்றி இராஜராஜேஸ்வரி.
நன்றி மோகன்: இது சும்மா தொடக்கம் தான். பின்னால் எல்லாம் வருகிறது.
நன்றி நூருல்: முதல் வருகைக்கும் கருத்துக்கும். பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை என்றில்லை. டிபண்டன்ட்களுக்கான சலுகை மற்றும் உரிமை தான் பெற்றோர்களுக்கு இல்லை. அவை கணவன்/மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தான்.
முதல் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி முகுந்த் அம்மா. இம்ம்..அடுத்த, அடுத்த பதிவில் நான் சொல்லலாம் என்றிருந்த செய்திகளை எல்லாம் நீங்கள் பின்னூட்டமாக இட்டு விட்டீர்கள். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
//தமிழ் கு்டும்பங்களில் இருக்கும் மகளிர் ஏனோ டிரைவிங் லைசென்ஸ் கூட எடுத்து கொள்வதில்லை எல்லாவற்றிர்க்கும் கணவனை சார்ந்து கொண்டு வாழ விரும்புவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.//
நூற்றுக்கு நூறு உண்மை.
நன்றி bandhu : மேலே கூறியிருந்தது போல் முகுந்த் அம்மாவை விட நீங்கள் இன்னும் எல்லாவற்றையும் எடுத்து கூறி விட்டீர்கள்.
ஹூஹூம்...அடுத்த பதிவிற்கு எனக்கு வேலையே இல்லை போல. ஆமா? நீங்களும் எங்கள் வீட்டு அம்மணியும் தோழிகளா? அம்மணி அலுத்துக் கொள்ளும் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எடுத்து விட்டு உள்ளீர்கள்.
கடைசியாக, உண்மையை சொல்லுங்கள். இவ்வளவு கஷ்டப் பட்டாலும் ( ! ) அமெரிக்கா வாசம் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையா?
கண்டிப்பாக இல்லை!
எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை என் மனம் கவர்ந்த தங்கள் பதிவுக்கு பகிர்ந்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
http://vannathuli.blogspot.in/2012/02/blog-post_18.html
Post a Comment