தமிழ் திரை உலகில் ரஜினி வில்லனாக உலா வந்த நேரம். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ரஜினி படம் என்றால் எப்போதும் "நோ" தான். அவன் கெட்டவன், அவன் படத்துக்கெல்லாம் போக கூடாது என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்(இன்றைய ரஜினி ரசிகர்கள் கோபித்து கொள்ள கூடாது).
முகம்: 1
16 வயதினிலே "பரட்டை" ஆகட்டும், மூன்று முடிச்சு வில்லன் காரக்டர் ஆகட்டும். நம்பியார், அசோகன் காலத்திற்கு பிறகு வில்லன் என்றால் ரஜினி, ரஜினி என்றால் வில்லன் என்றால் மிகையாகாது. அதிலும் மூன்று முடிச்சில், நீச்சல் தெரியாத கமலஹாசனை தண்ணீரில் விழும் போது அதை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாத ரஜினி, ஸ்ரீதேவி எவ்வளவோ கெஞ்சியும் தனக்கு நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு துடுப்பை போட்டபடி "மனநிலைகள் யாருடனோ, மாயவனின் விதிவலைகள்.." என்று முகத்தை அவ்வளவு இறுக்கமாக வைத்துக்கொண்டு பாடும் பாடல் காட்சியில் யாருக்குமே ரஜினியை பிடிக்காது. இப்போது உள்ள அனைத்து வில்லன்களும் அப்படி ஒரு கெட்ட! பெயர் வாங்க ரொம்ப கஷ்ட பட வேண்டும்.
அதன் பிறகு ஹீரோ ரோல் பண்ண ஆரம்பித்த பிறகு, அவருடைய ஸ்டைலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக சினிமா ரசிகர்கள் அடிமை ஆக ஆரம்பித்தார்கள். குழந்தைகளிடம் ரஜினி ஸ்டைல் பாப்புலராக ஆரம்பித்தது. எதார்த்தமாக கையை காலை தூக்கினால் கூட அது என்ன? ரஜினி ஸ்டைலா? என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த காலக்கட்டத்திலேயே (இன்றும் அவர் முன்னணி ஹீரோ தான்) அவருடைய நூறாவது படமாக "ராகவேந்தர்" வெளிவந்தது. இது தமிழக தாய்மார்களிடம் பெரும் வரவேற்பையும், ரஜினியை பற்றிய மாற்று கருத்தையும் உருவாக்கியது.
அன்றிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினியை ரசிக்க ஆரம்பித்தார்கள். ரஜினி படமென்றால் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பார்க்கலாம் என்ற அளவில் அவரை பற்றிய கண்ணோட்டம் மாறியது. அதன்பிறகு வந்த படங்களில் காரக்டர் ரோல், கிராமத்தான், காமெடி ரோல் என பல வேடங்கள் ஏற்று தான் ஒரு முழு நடிகன் என நிரூபிக்க ஆரம்பித்தார். அவருடைய படங்கள் பெரும்பாலும் நன்றாகவே ஓடின.
80 களின் இறுதியில் தனக்கென தமிழகத்தில் ஒரு பெரும் படையையே ரசிகர்களாக உருவாக்கி வைத்திருந்தார் ரஜினி. அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. அவருடைய போயஸ் கார்டன் இல்லத்திலேயே.
தொடரும்...

share on:facebook
3 comments:
// அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. //
அன்றைய கால கட்டத்திலேயே சூப்பர் ஸ்டாரை சந்தித்த தலைவர் ஆதிமனிதன் வாழ்க... வாழ்க..
நல்ல தொகுப்பு. சூப்பர் ஸ்டார் பற்றிய வில்லன் இமேஜ் ஆனால் பைரவியிலேயே உடைய ஆரம்பித்து விட்டதென்று நினைக்கிறேன். ஸ்ரீ ராகவேந்திரர் படம் அவரை வெகு உயரத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.
நன்றி
ரசிகன் - Superstar-Rajni.com
நன்றி மாதவன்.
நன்றி சந்யாசி.
Post a Comment