Thursday, January 28, 2010

படுக்கையறையில் சிக்கி குழந்தை தவிப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் - செய்தி

இது நடந்து ஓரிரு மாதங்கள் இருக்கும். இன்று அது சமந்தப்பட்ட ஒரு செய்தியை படித்தவுடன் தான் ஒரு விழிப்புணர்வு பதிவாக நாமும் இதை போட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இனி நடந்தது என்ன ...?

வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் வழக்கம்  உள்ளவன் நான். அப்படி  போகையில்  அலை  பேசியில் மனைவி மகளுடன் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பேசும் பழக்கம் உண்டு (இல்லனாலும் விட்ருவாங்களா  என்ன?). அப்படி பேசுகையில் என் மனைவியோ/மகளோ பேசும் விதத்தை வைத்தே அங்க வூட்ல என்ன விசேசம்னு ஓரளவுக்கு நான் கணிச்சுடுவேன்(ரொம்ப தான் புத்திசாலின்னு எனக்கு நினைப்பு).

அப்படி ஒரு நாள் பேசும் போதுதான் என் மனைவியிடம் சற்று சுரத்து கம்மியாக காணப்பட்டது. என்ன விஷயம் என்று கிண்டி கிளறின பிறகு தான் உண்மை வெளியே வந்தது. எங்கள் அப்பார்ட்மென்ட்  4 அடுக்குகளை கொண்டது. எங்கள் பிளாட் 3- வது  மாடியில் இருக்கிறது. வீட்டிற்குள் நுழையும் மெயின் டோர் ஆட்டோ லாக் சிஸ்டம் கொண்டது. அதாவது சாவியே இல்லாமல் வெளியிலிருந்து வேகமாக இழுத்து சாத்தினால் கதவு தானாக லாக் ஆகிவிடும்.

எங்கள் வீட்டு பாத்ரூம் கதவின் உள்  தாழ்ப்பாள் சற்று உயரத்தில்  இருந்ததால்  என் இளைய மகளுக்கு அது எட்டாது. ஆகவே  எப்போதும் அவள் என் மனைவியிடம் வெளியே தாழ்பாள் போடச் சொல்லி உள்ளே அவள் குளிப்பது தான் வழக்கம். அவளுக்கு அது விளையாட்டு கூட. நாங்களும்  அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அது  போலவே  அவளுக்காக  வெளியில்  லாக்  செய்வோம்.
 
இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் தான் அன்று என் மூத்த மகள் வெளியே விளையாட போய் விட்டாள். என் மனைவி துணிகளை காய போட மேல் மாடிக்கு சென்று விட்டார். பாத்ரூம் உள்ளே என் சின்ன மகள் குளித்துக்கொண்டிருக்கிறாள், கதவு வெளியில் தாழிட்டபடி.

என் மனைவி மாடிக்கு சென்ற சிறுது நேரத்தில் பலத்த காற்றொன்று அடிக்க, மெயின் டோர்  ஆட்டோ லாக் ஆகிவிட்டது. திரும்பி வந்த என் மனைவி உள்ளே செல்ல முடியவில்லை. குளித்துக் கொண்டிருந்த என் இளைய மகள் வெளியே வர முடியவில்லை.

பாத்ரூம் பக்கத்திலேயே ots(over to sky)இருப்பதால் மேல் வீட்டு பாத்ரூம் அருகில் இருந்து சத்தமாக என் மகளிடம் பயப்படாதே, அழுகாதே அம்மா சீக்கிரம் கதவை திறந்து விடுகிறேன் என என்  மனைவி கூவிக் (அழுது) கொண்டு இருக்கும் போதே பக்கத்தில் உள்ளவர்கள் அங்குள்ள ஒரு யலக்ட்ரிசியனை அழைத்து வந்து கதவை திறக்கும் வழியை தேடினார்கள். 

பிறகு அங்கிருந்த ஒருவரின் ஆலோசனைப்படி, மேல் மாடியில் உள்ள பிளாட்டில் இருந்து ஒரு கயிறு மூலம்  எங்கள் வீட்டின் பால்கனி அருகே யலக்ட்ரிசியனை இறங்க (தொங்க) செய்து அங்கிருந்தபடியே பால்கனி கிரில் டோர் பூட்டை  அறுத்து அதன்  மூலம்  எங்கள் ஹாலுக்குள் செல்ல முடிவானது (எங்கள் வீட்டின் ஹாலுக்கும் பால்கனிக்கும் இடையில் பிரெஞ்சு  டோர் தான். நல்ல  வேலை  அதை அன்று  லாக்  செய்யவில்லை. இல்லை என்றால்  பிரெஞ்சு  டோரின் பூட்டையோ/க்ளாசையோ அன்று உடைக்கவேண்டி இருந்திருக்கும்).

அதன்படியே அவரும் கயிற்றில் தொங்கியபடியே மிகவும்  கஷ்ட்டப்பட்டு பால்கனி கிரில் டோர் பூட்டை அறுத்து பிறகு அதன் மூலம் ஹாலுக்குள் நுழைந்து என் மகளுக்கு பாத்ரூம் கதவை திறந்து  விட பிறகுதான் என்  மகள்  வெளியே  வர முடிந்தது. பிறகு உள்ளிருந்தபடி மெயின்  டோர் லாக்கையும் ரிலீஸ் செய்து  கதவை திறந்து விட்டார்.

அதிலிருந்து மரியாதையா ஒரு கீயை எப்போதும் பக்கத்து வீட்டில் கொடுத்து வைத்துள்ளோம். பின்னால் தான் தெரியவந்தது இது எங்கள் வீட்டில் மட்டுமில்லை இன்னும் சில பிளாட்களிலும் இது போல் முன்பு நடந்துள்ளது என்று.

ஆகவே நண்பர்களே, எனக்கு தெரிந்து இந்த ஆட்டோ லாக்கினால் ஒன்றும் பெரிய பயனில்லை; சாவி போடாமல் பூட்டை பூட்டுவதை தவிர. ஆனால் சாவி உள்ளே மாட்டிக்கொண்டால் பின்னர் பெரும்பாடுதான். அனுபவத்த சொல்லியாச்சு. மத்தபடி நீங்களே முடிவு பண்ணிக்குங்க. ஆட்டோ  லாக் வேணுமா வேணாமானு.

நல்ல பதிவுனா நீங்க எப்பவும் வோட்ட போட்டுடுவிங்க. அப்ப இதுக்கும் அப்படியே போட்டுடுங்க.

* மேலே உள்ள தலைப்பு சில தினங்களுக்கு முன் செய்தியாக வந்தது.
share on:facebook

Friday, January 22, 2010

பாத்துப் போங்கப்பு... உங்க புள்ள குட்டிங்க உங்களுக்காக காத்துக்கிடக்கு...


ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம். நன்றாக இழுத்து போத்திக்கிட்டு தூங்கிக்கிட்டுருந்த என்னை செல்போன் அலறல்தான் எழுப்பிவிட்டது. தூக்க கலக்கத்தில் செல்போனை எடுத்து சோம்பலாக ஹலோ சொல்லி முடிக்கக்கூட இல்லை.

ஏய் பாலு, நான்தாண்டா கிஷோர் பேசுறேன். நம்ம ஆனந்துக்கு திடீர்னு உடம்புக்கு முடியலடா. ராத்திரி பூரா ஹய் பீவர். அப்புறம் 911 கால் பண்ணி ஸ்டேட் ஹாஸ்பிடல்ல சேத்துருக்கோம். இப்ப பரவாயில்லை. நான் வேற அமெரிக்காவுக்கு புதுசா, இங்க இவனுங்க (doctor) பேசறது, கேக்கறது சில நேரத்தில ஒன்னும் புரியமாட்டேன்குது.

நீ கொஞ்சம் உடனே கிளம்பி இங்க வரமுடியுமாடா?

அப்படியா? சரிடா நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நான் உடனே கிளம்பி அங்க வரேன். சரியா? கிஷோரின் பதிலுக்கு கூட காத்திராமல், உடனே படுக்கையை எடுத்துவைத்துவிட்டு அவசர அவசரமாக என்னை தயார் செய்து கொண்டு கீழே (underground) கார் பார்கிங் ஏரியாவை நோக்கி நடக்க தொடங்கினேன்.

கார் பார்கிங் ஏரியா உள்ளே நுழைந்தவுடன் என் கார் ரிமோட் கீயில் உள்ள இக்னைட் பட்டனை மறக்காமல் அழுத்தினேன். இரவு முவதும் சீரோ டிகிரி குளிருக்கு காரின் உள்ளே ஏறி உக்கார்ந்தால் ஸ்டீயரிங்கை கூட புடிக்க முடியாது. ஐஸ் கட்டியை தொட்டது போல் இருக்கும். அதற்குதான் இந்த ரிமோட் ஆட்டோ ஸ்டார்ட் வசதி. நாம் காரை நெருங்குவதற்குள் கார் ஆட்டோமேடிக்காக ஸ்டார்ட் செய்யப்பட்டு ஹீட்டரும் ஓடத் தொடங்கிவிடும். அப்பா... என்ன எல்லாம் கண்டு பிடிச்சு வச்சிருக்காங்க!

நினைத்துக் கொண்டிருக்கையிலேயே கார் அருகில் வந்து விட்டேன். மனதிற்குள் ஆனந்துக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கை. அமெரிக்காவிற்கு வந்த ஆறு வருடங்களில் இப்படி அவசரமாக எங்கும் கிளம்பி போனதே கிடையாது.

காரின் இஞ்சின் ஓடிக்கொண்டிருப்பது கூட வெளியே தெரியவில்லை. நம் ஊர் மாதிரி சைலன்சரிலிருந்து புகை வெளியே வராது அல்லது தெரியாது. கதவை திறந்து உள்ளே ஏறி அமர்ந்தேன். சற்று கதகதப்பாக இருந்தது .

சீட் பெல்டை எடுத்து மாட்டிக்கொண்டு, பார்வர்ட் மற்றும் சைடு ரிவீவ் மிரரை உள்ளேயிருந்த கண்ட்ரோல் மூலமாகவே சரி படுத்தினேன். ஹான்ட் பிரேக்கை ரிலீஸ் செய்து பின்னும் சைடிலும் பார்த்துக் கொண்டே வண்டியை ரிவர்ஸ் செய்து பிறகு நேராக்கினேன்.

ஐம்பதடி சென்றால் அங்கு ஸ்டாப் சைன் இருக்கும். கார் பார்கிங் செல்ல அங்கு இன்னொரு வழி இருப்பதால் யாரும் அவ்வழியாக வரும் போது அவர்களை வேகமாக வந்து இடித்து விட கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அமெரிக்காவில் ஸ்டாப் சைன் என்று ஒன்று இருந்தால் அங்கு கண்டிப்பாக வண்டியை கம்ப்ளீடாக நிறுத்திய பிறகு தான் (டயர் சுற்றுவது நிற்கும் அளவுக்கு ) பிறகு மூவ் செய்ய வேண்டும். நம்மூரில் பல இடங்களில் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் ஸ்டாப் சைன் போர்ட் பார்திருக்கிறேன். ஆனால் யாரும் வண்டியை நிறுத்தி கூட பார்த்ததில்லை. ஆனால் இங்கு அது சட்டம்.   

கார் பார்கிங் ஷட்டரை திறக்கும் ரிமோட்டை அழுத்தி வெளியில் வந்தால் பிறகு இன்னொரு ஸ்டாப் சிக்னல். இது பொது சாலையாதலால் இரு புறமும் திரும்பி பார்த்து வேறு வாகனங்கள் ஏதும் வரவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு தான் நாம் இடதோ வலதோ திரும்ப வேண்டும்.

ஏனெனில் அவர்களுக்கு தான் "right of way", அதாவது முன்னுரிமை. நாம் சிக்னல் இல்லாத நேர் சாலையில் திரும்ப வேண்டும் என்றால் இதை கடை பிடிக்க வேண்டும். இது உலகத்தில் எங்கு இருந்தாலும் கடை பிடிக்க வேண்டிய வாகனம் ஓட்டும் மரபு அல்லது ரோடு சென்ஸ்.

ஆஸ்பத்திரி என் வீட்டில் இருந்து ஒரு 55 மைல் இருக்கும். ஒரு 5 மைலில் நம்மூரில் ஹைவேஸ் என்போமே அது போல் இங்கு ப்ரீ வேஸ் என்பார்கள். உண்மையிலேயே அது free ways தான். free way என்றால் எங்கும் சிக்னல் இருக்காது. தவிர்க்க முடியாத காரணங்கள் (an emergency) இருந்தால் மட்டுமே காரை நடுவழியில் நிறுத்தலாம். அதுவும் சர்வீஸ் லேன் எனப்படும் கடைசி தடத்தில்.

மற்ற சாலைகளிலிருந்து பிரீவேசுக்குள் நுழைய ராம்ப் (ramp) எனப்படும் சற்று சரிவான சாலைகள் இருக்கும். அதேபோல் பிரீவேசிலிருந்து உள்ளூர் சாலைகளுக்கான இணைப்பு சாலை (ramp) சற்று ஏற்றமாக காணப்படும். இதற்கு ஒரு காரணமும் உள்ளது.

ப்ரீவேயில் இணைந்த பின்பு அங்கு ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் வேகத்துக்கு இனையாக நீங்களும் செல்ல வேண்டும். இங்கும் "Right of the way" ப்ரீவேயில் செல்பவர்களுக்கே. உள்ளூர் சாலையிலிருந்து ப்ரீவே சாலையில் இணையும் போது அங்கு சிக்னல் இருக்காது. நீங்கள் தான் ப்ரீவே ட்ராபிக் flow-i கணித்து நிறுத்தி/நிதானித்து  இடைவெளி கிடைக்கும் போது உள்ளே இணைந்து விட வேண்டும்.


அதே போல் பிரீவேயிலிருந்து உள்ளூர் சாலைக்கு வெளியேறும் போது சற்றே ஏற்றமான சாலையில் பிரிவதால் உங்கள் வேகம் கட்டுப்படுத்தப்படும்.

பிரீவேசில் வாகனங்கள் குறைந்தது 45 மைலிலிருந்து 80 மைல்ஸ் (60 miles = 100 Kms) ஸ்பீட் வரை செல்லும். இதில் வலது ஓர வழித்தடம் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனத்திற்கும்(US இல் left hand drive), இடது ஓர சாலை வேகமா செல்லும் வாகனத்திற்கும் ஆனவை.

ஹாஸ்பிடலுக்கு விரைவாக செல்ல வேண்டுமாதலால் back and side ரிவீவ் மிரரில் மற்ற பின் தொடரும் வாகனங்களின் வேகத்தை சிறு நொடிகள் கணித்துவிட்டு பாதுகாப்பான இடைவெளி கிடைத்ததும் இடது இன்டிகேடரை ஆன் செய்துவிட்டு பாஸ்ட் லேனுக்கு மூவ் செய்தேன். நாம் லேன் மாறுவது நம் பின்னால் வரும் வாகனங்களின் வேகத்தை தடை செய்யாமலிருக்க இந்த உத்தி அவசியம்.

அடுத்த அரை மணி நேரத்தில் நண்பனின் ஹாஸ்பிடல் ரூமில் இருந்தேன். ஆனந்த் இப்போ நல்ல தெளிவாக இருந்தான். நன்றாக பேசினான். அங்கிருந்த டூட்டி டாக்டரிடம் அவனுக்கு ஏற்பட்ட ஜூரம் பற்றியும் அதற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றியும் தெரிந்து கொண்டேன். பயப்படும்படி ஒன்றும் இல்லை.


சிறிது நேரம் அங்கிருந்து விட்டு கிளம்பினேன். அதற்குள் வெளியே லேசாக இருட்ட ஆரம்பித்துவிட்டது. குளிர்காலம் ஆதலால் சீக்கிரம் இருட்டிவிடும். கார் பார்கிங்கில் நுழைந்து காரை வெளியே எடுத்தேன். வெளியே வெளிச்சம் சற்று கம்மியாக இருந்தாலும் உள்ளேயிருந்து என்னால் வெளியே தெளிவாக பார்க்க முடிந்தது. அதற்கு காரணம் அமெரிக்காவில் இங்குள்ளதுபோல் நம் இஷ்டத்துக்கு உள்ளே இருப்பவர் யாரென்று தெரியாத அளவிற்கு கார் கதவு கண்ணாடிகளில் ஸ்டிக்கர் (flim) ஓட்ட முடியாது. அதற்கென்று சில வரைமுறைகள் உண்டு.
 
பிரீவேசில் நான் இணைந்த போது நன்றாக இருட்டி இருந்தது. என்னுடைய கார் வெளியே உள்ள வெளிச்சம் குறைவாக இருந்தால் தானாக ஹெட் லைட்  ஆன் ஆகும் வசதி கொண்டது. எப்பொழுது கார் ஹெட் லைட் அவசியம் ஆன் செய்ய வேண்டும் என்பதற்கு கூட ஒரு ரூல் உண்டு இங்கே. நம்மூரில் ஒத்த லைட்டுடன் லாரி எதிரே வரும்போது அது டூ வீலர் என நினைத்துக்கொண்டு போய் முட்டி ஆக்சிடன்ட் ஆன கதையெல்லாம் நான் கேட்டதுண்டு.


எல்லோரும் அவசர அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். எதிரே தொடர்ச்சியாக வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. இருந்தும் எனக்கு கண்கள் கூசவில்லை. அவசியமில்லாமல் இங்கு ஹய் பீம் யூஸ் பண்ணக் கூடாது.

சிறிது நேரத்தில் ப்ரீவேசிலிருந்து  பிரிந்து உள்ளூர் சாலையில் இணைந்து விட்டேன். எதிரே பள்ளி பேருந்து (பெரும்பாலும் அது மஞ்சள் நிறத்தில் இருக்கும்) ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆட்டமேடிக்காக என் கால்கள் பிரேக்கை மிதித்து என் வண்டியின் வேகத்தை குறைத்தது. பள்ளி பேருந்து எதிரே சென்றால் வழக்கத்தை விட சற்று அதிகமான இடைவெளி விட்டுதான் செல்ல வேண்டும். அதேபோல் குழந்தைகளை இறக்கி விடுவதற்காக பேருந்து நின்றால் பின்புறம் ஒரு மஞ்சள் லைட் அணைந்து அணைந்து எறியும். அப்படி எறிந்தால் நாம் அந்த பேருந்தை cross/overtake செய்ய கூடாது (பக்கத்தில் எவ்வளவு இடம் இருந்தாலும்). விளக்கு அணைந்த பிறகு தான் நாம் அதை overtake செய்யலாம். நம்மூரில் ஆம்புலன்ஸ் போனால் கூட அதை ஒட்டியோ அல்லது அதை ஓவர்டேக் செய்தோ பார்திருக்கேன்.


ஒருவழியாக வீடு வந்து சேர்ந்ததும் களைப்பில் அப்படியே கண்கள் சொறுகியது. சோபாவில் சாய்ந்துகொண்டே சண் டி வி யை ஆன் செய்தேன். "இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 11 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழப்பு" என்று தலைப்பு செய்திகளில் கூறிக்கொண்டிருந்தார்கள். உலகத்தில் உள்ள மொத்த வாகனங்களில் இந்தியாவில் 2 % தான் உள்ளது. ஆனால் சாலை விபத்துக்களோ 90 % நம் நாட்டில் தான் நடக்கிறது. அதற்கு நாம் எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு காரணம் ஆகிறோம்.
 
இதை படிக்கும் ஒவ்வொருவரும் இனியாவது சாலை விதிகளை மதிப்போம். விலை மதிக்க முடியாத உயிர்களை   காப்போம். நன்றி.


பி. கு.
(1) சில நாட்களுக்கு முன்பே இந்த பதிவை பாதி எழுதி அப்படியே வைத்து விட்டேன். இன்று நண்பர் பலா பட்டறையின் "சாலையோரம் - தொடர் இடுகை"   படித்ததினாலும் மற்றும் அவரின் வேண்டுகோளுக்காகவும்   இதோ நானும் எழுதி பதிவிட்டுவிட்டேன். நீங்களும் ஒண்ணு முடிஞ்சா போடுங்க. இல்ல வழக்கம் போல உங்க கருத்துகளையும் ஓட்டையும் மறக்காம போட்டுடுங்க. மீண்டும் நன்றி.  
 
(2 ) இப்படி பதிவு போடுவதால் நான் இந்தியாவை மட்டம் தட்டுவதாக அர்த்தம் இல்லை. நமக்குள்ள குறைகளை மனம் திறந்து ஒத்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்.

 
படம்: United Nations Global Road Safety Week Logo, நன்றி.
share on:facebook

Wednesday, January 20, 2010

யாரிடம் எப்படி பேசுவது...?


தாயிடம் அன்பாக பேசுங்கள்

தந்தையிடம் பண்புடன் பேசுங்கள்

மனைவியிடம் உண்மை பேசுங்கள்

குழந்தைகளிடம் ஆர்வமாய் பேசுங்கள்

சகோதரர்களிடம் சகஜமாக பேசுங்கள்

சகோதிரியிடம் அளவோடு பேசுங்கள்

நண்பர்களிடம் உரிமையுடன் பேசுங்கள்

உறவினர்களிடம் சிரித்துப் பேசுங்கள்

ஆசிரியரிடம் தெளிவாக பேசுங்கள்

அதிகாரிகளிடம் அடக்கமாக பேசுங்கள்

முதலாளியிடம் முகம் மலர்ந்து பேசுங்கள்

தொழிலாளியிடம் இரக்கமுடன் பேசுங்கள்

கடவுளிடம் மவுனமாக பேசுங்கள்

பேசுங்கள்...பேசுங்கள்...

பேசாமல் மட்டும் இருக்காதீர்கள்.
 
 
கடைசியாக... பதிவை படித்தபின் வோட்டு போடாமல் மட்டும் இருக்காதீர்கள்... ஹீ ஹீ...
 
டிஸ்கி: பாதி எங்கோ படித்தது. மீதி நானே வடித்தது. ஆஹா கொஞ்சம் எதுகை மோனை நமக்கும் வருகிறதே? நீங்களும் வேறு யாரிடம் எப்படி பேச வேண்டும் என நினைத்தால் பின்னூட்டம் இடுங்களேன்! நன்றி.
share on:facebook

Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்.

எல்லோருக்கும் எனது பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள். பொங்கிவரும் புது அரிசி பொங்கலைப்போல் உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் குறைவின்றி பெற்றிட எனது மனமுவந்த வாழ்த்துக்கள்.

- ஆதி மனிதன்
share on:facebook

Friday, January 8, 2010

I.T. நிஜம் - நடப்பது என்ன?



மற்ற துறைகளை காட்டிலும் IT சற்று மாறுப்பட்ட துறை என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு முக்கால்வாசி virtual தான். எங்கோ இருக்கும் ஒரு நாட்டின் கம்பனிக்கு இந்தியாவிலிருந்து வேலை செய்து கொடுக்கிறோம். வெளிநாட்டில் உள்ள முதலாளி (customer) இங்கு வேலை செய்யும் நபர்களின் (offshore team) முகத்தை கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்படியான ஒரு சூழ்நிலையில் ஒரு புது ப்ராஜக்டை எப்படியெல்லாம் பேசி தங்கள் கம்பனிக்கு கொண்டு வருகிறார்கள் இவர்கள் என்பதை பற்றிய ஒரு கற்பனை கலந்துரையாடல். இதில் சில சம்பவங்கள் நிஜத்திலும் நடந்ததுண்டு.
 
TM: Team Member
PM: Project Manager
TL: Team Lead
BH: Business Head
SH: Sales Head

TL  தன் டீம் மெம்பெர்ஸ் எல்லோரையும் அவசரமாக மீட்டிங்குக்கு அழைக்கிறார். அங்கே...

TL: Hai everybody, உங்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ். நமக்கு ஒரு புது கிளைன்ட் கிடைச்சிருக்காங்க. அவங்ககிட்ட இருந்து எப்படியும் ஒரு புது ப்ராஜக்டை நாம வாங்க ட்ரை பண்றோம். அதுக்கு முன்னாடி உங்க யாருக்காவது C$$ டெக்னாலஜி தெரியுமான்னு (எனக்கு தெரியாது) நான் தெரிஞ்சிக்குனும். ஏன்னா அது நமக்கு தெரிஞ்சாத்தான் நமக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைக்கும்.

TM1: C$$ அப்படினா?

TM2: நான் கேள்வி பட்டது கூட கிடையாது.

Others: எங்களுக்கு அத பத்தி ஐடியாவே இல்ல.

TL: அப்படியெல்லாம் நாம சொல்ல முடியாது. இன்னைலேர்ந்து நீங்க எல்லாம் அத தெரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க. புக்ஸ் படிங்க, கூகுள தேடுங்க. என்ன பன்னுவிங்களோ எனக்கு தெரியாது நீங்க எல்லாம் அதுல வொர்க் பண்ண தயாரா இருக்கணும்.

ஒரு மணி நேரம் கழித்து TL-லுக்கு PM இடமிருந்து கால்.

PM: உடனே என் cube க்கு வாங்க.

TL(PM ரூமில்): Hai how are you?

PM: I am fine-ஆ இல்லையானு நாளைக்குதான் தெரியும். இந்த C$$ டெக்னாலஜி ப்ராஜெக்ட நம்ம எப்படியாவது எடுக்கனும்னு மேலே இருந்து ஒரே பிரஷர். நம்ம டீம் கிட்ட பேசுநீங்களா? யாருக்காவது அந்த டெக்னாலஜி தெரியுமாமா?

TL: Oh yeah. நம்ம டீம்ல கேட்டேன். யாருக்கும் C$$ எச்பீரியன்சே இல்ல. ஆனா கொஞ்சம் பேருக்கு C$$ பத்தி தியரிட்டிக்கள் நாலேஜ் இருக்கு. எனக்கும் C$$ பத்தி ஐடியா இருக்கு(இதப் பார்ரா). அதனால நம்ம பசங்களுக்கு கொஞ்சம்
ட்ரைனிங் கொடுத்தா போதும். ஈசியா பிக்கப் பண்ணிக்குவாங்க (அப்பாடா தப்பிச்சோம்).

PM: Good, Good. அப்பப்ப எனக்கு ட்ரைனிங் ப்ராகரச அப்டேட் பண்ணுங்க. Thanks.

(PM calling BH from his cube)

PM: Hai how you doing? Yeah Yeah, No problem. We have few people who has experience in C$$. With them ,we can train other guys too. So no issues. Go ahead with the negotiation with the client.

BH: Thats a great news. Thanks and I will catch you later.

(US office)

(BH-க்கு SL இடமிருந்து call)

SH: Hai, how are you? Do you have any updates on the C$$ knowledge from the offshore team?

BH: Yes, I spoke to the PMs here. They said that they have executed one or two small projects on C$$. So it should not be a big deal for them to execute the new project.

SH: Really. Great. Okay I will talk to you tomorrow. Bye.

(US client office. Meeting with client manager)

CM: Hey dude, what's up?

SH: Hai, a good news for you. Just now I checked with my offshore team. They have executed couple of big projects on C$$ technology at offshore and we have a team already ready who has real time experience in C$$ . So it is just a mater of when we can start the project.

CM: Thats really a great news. So send me a proposal as soon as possible.

SM: Thank you very much(ஒழிஞ்சடா நீ இதோட).

இப்ப ஓரளவு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். IT-ல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு project புடிக்கிறாங்கனும் அதனால எப்படியெல்லாம் project team கஷ்டபடுதுனும்.

அப்படியே உங்களுக்கு கஷ்டமா இல்லனா மேட்டர் புடிச்சிருந்தா ஒரு ஓட்ட போட்டுடுங்க.  தேங்க்ஸ்!

டிஸ்கி: இதை போல் I. T. கம்பனிகளில் பல கதைகள் உலாவும். நான் யாரையும் இங்கு குறிப்பிட்டு சொல்லவில்லை.
share on:facebook