இதுவரை அமெரிக்காவில் உள்ள நல்ல விஷயங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளேன். உலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கும் உண்டு. அதே போல் நல்லவைகளும் கெட்டவைகளும் எல்லா நாட்டிலும் உண்டு. அந்த வகையில் அமெரிக்காவிலும் பல விஷயங்கள் நமக்கு எரிச்சல் ஊட்டும். அந்த நேரங்களில் எப்படா நாம் இந்தியா திரும்பி போவோம் என்ற ஏக்கம் வந்து விடும்.
அதில் முக்கிய பிரச்னை, மருத்துவம் சார்ந்தது. என்ன தான் உயர் தர சிகிர்ச்சையும், அவசர கால உதவியும் இங்கு உடனே கிடைத்தாலும், சாதாரண தலைவலி ஜூரம் என்றால் அவசரத்திற்கு ஒரு மருத்துவரிடம் நாம் செல்ல முடியாது. இங்குள்ள அனைத்து மருத்துவர்களும் அரசாங்க வேலை போல காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை தான் தங்கள் கிளினிக்குகளை திறந்து வைத்து இருப்பார்கள். அதற்கும் முன் கூட்டியே பதிவு செய்திருந்தால் மட்டுமே மருத்துவரை பார்க்க முடியும். சனி ஞாயிறு ஒரு டாக்டர் கூட வேலைக்கு வரமாட்டார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஏதும் சாதாரண மருத்துவ சிகிர்ச்சை தேவை என்றால் கூட Emergency Care தான் செல்ல வேண்டும். இங்கு சென்றால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சோதனை செய்த பிறகே மருத்துவம் பார்ப்பார்கள்.
அதே போல் உரிய மருத்துவ காப்பீடு இல்லை என்றால் அவர்கள் தரும் பில்லுக்கு பணம் கட்ட நாம் ஆயுள் காலமெல்லாம் சம்பாதிக்க வேண்டும். உதாரணமாக சாதாரண தலைவலி ஜூரம் என்று ஒரு முறை டாக்டரிடம் சென்று வந்தாலே (ஒரு சில டெஸ்ட்டுகள் மற்றும் டாக்டர் பீஸாக மட்டும்) 400 - 500 டாலர்கள் பில் வந்து விடும்.
அமெரிக்கர்கள் பலரும் நல்ல திடகாத்திரமாக இருப்பது போல் தோன்றினாலும் தினமும் பத்துக்கும் மேற்ப்பட்ட மாத்திரைகளை சாபிட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களால் எந்த ஒரு வலியையும், கஷ்டத்தையும் தாங்க முடியாது. அதே போல் நமக்கும் அது வராமல் இருக்க, இது வராமல் இருக்க என்று மருந்து மாத்திரைகளை எழுதித்தள்ளிவிடுவார்கள்.
குழந்தைகள் இருந்தால் கேக்கவே வேண்டாம். சனி ஞாயிறு டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். திங்கள் மூதல் வெள்ளி வரை காலை முதல் மாலை வரைதான் டாக்டர்களை பார்க்க முடியும். அப்படியானால் ஒவ்வொரு முறையும் டாக்டரை பார்க்க Dr Appointment என்று அலுவலகத்தில் பர்மிஷன் போட்டு தான் போய் வர வேண்டும். இவர்கள் பேசும் ஆங்கிலம் சில சமயம் புரியாதலால் வீட்டு அம்மணிகளும் தனியே குழந்தைகளை டாக்டர்களிடம் கூட்டி போய் வர தயங்குவார்கள்.
நோய் நொடி இல்லாதவரை அமெரிக்காவில் தொந்தரவு இல்லை. மற்றபடி அடிக்கடி டாக்டரிடம் போய் வருவதென்பது இங்கு மிக பெரிய சிரமம்.
share on:facebook
13 comments:
ஓஹோ.. இவ்ளோ விஷயம் இருக்கா..
"சொர்கமே என்றாலும்.. அது நம்மூரப் போல வருமா,
எந்நாடு என்றாலும், அது நம் நாட்டுக்கீடாகுமா ?
நன்றாக உரக்க சொன்னீர்கள். இந்தியாவில், டாக்டராக வாழ்வதென்றால்..(நியாயமாக) துறவறம் வாங்கினாலொழிய முடியாது. பணம்,சாப்பாடு, குடும்பம்,நண்பர்கள்,தூக்கம், தாகம், சில சமயம் குளியல், விடுப்பு, சில நேரம் படிப்பு..என்று அனைத்தையும் 35 வயது வரை துறந்தாலே, proffessional efficiency வருகிறது. super speciality செய்த யாரையும் கேட்டு பாருங்கள்.மனித உரிமைக்குள் வராத இனம் நாங்களாகத் தான் இருக்க வேண்டும். எங்களில் எல்லோரும் அப்படி இல்லை எனினும், ஒரு துறையில் வல்லுனராகுவது இங்கு கடினம்.நானும் மேல்படிப்பிற்கு தயார் செய்ய சில காலங்களாக விடுப்பில் தான் உள்ளேன். வாரத்திற்கு 98 மணி நேர வேலை அது.தூங்கவே நேரம் இல்லாத போது படிப்பது எங்கே? .அமெரிக்காவில் இருந்திருந்தால் இந்நேரம் மேல்படிப்பு முடிந்து, establish ஆகி இருக்கலாம் போல!!! ஏதோ என் கஷ்டத்தை சொன்னேன். ஆனால் உங்கள் பாடும் புரிகிறது.
நன்றி மாதவன். தெரியாமலா நம்ம ராஜா சார் பாடி வச்சிருக்காங்க.
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி டாக்டர்.
மருத்துவர் தொழிலில் மட்டும் இல்லை. இங்கு எந்த தொழில் பார்த்தாலும் அதற்கென்று ஒரு நேரம் வைத்துக்கொண்டு அதே நேரத்தில் தங்கள் சொந்த வாழ்க்கையில்/நேரத்திற்கு எந்த குந்தகமும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள். கனவு தேசத்தின் கசப்பான பக்கங்களை சொல்ல தயங்குகிறோம் .
நல்ல பதிவு. வாழ்த்துக்கள். கனவு தேசத்தின் கசப்பான பக்கங்களை சொல்ல தயங்குகிறோம் .
நல்ல பதிவு. இது போல, இங்குள்ள இன்சூரன்ஸ் கொள்ளை, இம்மிக்ரேஷன் தொல்லை போன்றவற்றை அடுத்து சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..
இங்கும் டாக்டர்கள் வாழ்க்கை முப்பத்தைந்து வயது வரை வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. எந்த வித ஸ்பெஷாலிட்டி இல்லாமலேயே ஒன்பது வருடம் குறைந்த பட்சம் பட்டம் பெற படிக்க வேண்டியிருக்கிறது. சில ஸ்பெஷாலிட்டிகளுக்கு அதற்க்கு அப்புறம் பத்து வருடம் வரை படிக்க வேண்டி இருக்கிறது. ஏறக்குறைய முப்பத்தைந்து வயதில் தான் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். இந்த படிப்பினால் ஏகப்பட்ட கடனும் வாங்க வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் இரண்டு லட்சம் டாலர் கடனுடன் தான் படித்து முடித்து வெளியே வருகிறார்கள்.
என்ன சொல்வது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதா.. டாக்டர்களுக்கு முப்பந்தைத்து வயது வரை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் என்பதா..
நன்றி பாலா, அனானி.
நன்றி பந்து. கண்டிப்பாக இன்னும் நிறைய வரும். அடிக்கடி வாருங்கள்.
அமெரிக்காவிலும் பல விஷயங்கள் நமக்கு எரிச்சல் ஊட்டும்.
அந்த நேரங்களில் எப்படா நாம் இந்தியா திரும்பி போவோம் என்ற ஏக்கம் வந்து விடும்.
Why didn't you mention about weekend care centers ?
They made everything easy in complicated way.
Post a Comment