உலகில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் தான் மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனங்களும் நிறைந்திருக்கும் என பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அமேரிக்கா போன்ற மேலை நாடுகளில் இன்னமும் ஹாலோவீன் (halloween) போன்ற கொண்டாட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அவையே சிறிது சிறிதாக மாறி அவரவர்களுக்கு பிடித்தமான ஆடைகளை அணிந்து கொள்வதும் வழக்கமாகி போனது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான உடைகளை அன்று அணிந்து கொண்டு பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வார்கள். பிறந்த ஒரு மாத குழந்தைகளுக்கு கூட கார்டூன் காரெக்டர்கள் போல் அழகழகான உடை அணிந்து அழகு பார்ப்பார்கள். அதே நேரத்தில் சிலர், பார்க்கவே முடியாத அளவிற்கு கோரமாக முகமூடி அணிந்தும் (எலும்புகூடு போல்), உடல் முழுதும் ரத்தம் வழிவது போலவும் உடை அணிபவர்களும் இருப்பர்.
அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு குழந்தையும் நான் டாக்டர் ஆக வேண்டும் நான் பைலட்டாக வேண்டும் என்று அவர்களை போலவே உடை அணிந்து அவர்கள் ஆசை (மற்றும் பெற்றோர்களின் ஆசையையும்) தீர்த்துக்கொள்வார்கள். ஹாலோவீன் பரேடு என்று பள்ளிகளில் ஹாலோவீன் வேடமிட்ட அனைத்து குழந்தைகளும் வரிசையாக ஊர்வலம் போவதை பார்ப்பது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
அதே போல் பெரும்பாலான வீடுகளில் பேய் வீடுகளுக்குரிய டெகரேஷன் செய்திருப்பார்கள். வீட்டை சுற்றி சிலந்தி வலை போல் பஞ்சு நூலால் சுற்றி ஆங்காகே பொம்பை வவ்வால், சிலந்தி ஆகியவையும், சில வீடுகளில் எலும்பு கூடுகள், பேய் பொம்மைகள் போன்றவற்றையும் நிறுத்தி வைத்து பயமூடுவார்கள்.
அதே போல் பெரும்பாலான வீடுகளில் பேய் வீடுகளுக்குரிய டெகரேஷன் செய்திருப்பார்கள். வீட்டை சுற்றி சிலந்தி வலை போல் பஞ்சு நூலால் சுற்றி ஆங்காகே பொம்பை வவ்வால், சிலந்தி ஆகியவையும், சில வீடுகளில் எலும்பு கூடுகள், பேய் பொம்மைகள் போன்றவற்றையும் நிறுத்தி வைத்து பயமூடுவார்கள்.
கொசுறு செய்தி: நாங்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் தற்போது பெரிய அளவில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஆதலால் இந்த வருடம் ஹாலோவீன் தினத்தன்று இந்திய குழந்தைகளின் ஆதிக்கம் நிறைய இருந்தது. வீட்டுக்கு வீடு கும்பலாக இந்திய குழந்தைகள் பல்வேறு வேடமிட்டு மிட்டாய்கள் வாங்க சென்றார்கள். என் குழந்தைகள் மட்டுமே சுமார் 7-8 பவுண்டுகள் சாக்லேட்டுகள் அள்ளிக்கொண்டு வந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ஆமா, நம்மூர்ல பேய் விரட்ட இன்னும் விளக்கமாறும், (போலி) சாமியார்கள் தான் இருக்கிறதா?
ஆமா, நம்மூர்ல பேய் விரட்ட இன்னும் விளக்கமாறும், (போலி) சாமியார்கள் தான் இருக்கிறதா?
share on:facebook
6 comments:
இந்த பேய் கதை எல்லா நாட்டிலும் இருக்கிறததா..
சுவாரஸ்யமான தகவல்..
நல்ல பதிவு. ஹாலோவீன் பற்றி ஆங்கில படங்களில் பார்த்ததோடு சரி. இங்கு(தில்லியில்) இந்த கார்த்திகை மாதத்தில் பேய்கள் நடமாட்டம் அதிகம் இருக்குமென்றும் அதனால் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்குமாறும் என் வீட்டுப் பணி உதவியாளர் கூறுகிறார்!!!
இந்த மேட்டர் நல்லா இருக்கே...
நன்றி சௌந்தர்
நன்றி பிரபா
dr.tj vadivukkarasi said...
//இங்கு(தில்லியில்) இந்த கார்த்திகை மாதத்தில் பேய்கள் நடமாட்டம் அதிகம் இருக்குமென்றும் அதனால் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்குமாறும் என் வீட்டுப் பணி உதவியாளர் கூறுகிறார்!!! //
ஹ்ம்ம்... தில்லியில் அரசியல்வாதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதை தான் சொல்கிறீர்களோ?
படிக்கவே ஜாலியா இருக்கே.காதலர் தின கொண்டாட்டத்திற்கு பதில் இந்த கொண்டாட்டம் இந்தியா வந்தால் நல்லாயிருக்கும்.
Post a Comment