தலைப்பை பார்த்து கன்னட சகோதர சகோதிரிகள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சொத்து குவிப்பு வழக்கில் நூறு முறைக்கு மேல் வாய்தா வாங்கி இருக்கும் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா தற்போது தொடர்ந்து ஆஜர் ஆவதிலிருந்து தப்பிக்க புதிய வழி ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளார். அதாவது இவர் விசாரணைக்காக பெங்களூரு செல்வதால், இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டால் பெங்களூரு பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்களாம். அதனால் இவர் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல.
அப்ப தினமும் இவர் தலைமை செயலகம் செல்வதற்காக போயஸ் கார்டனிலிருந்து தலைமை செயலகம் வரை நிறுத்தப்படும் போக்குவரத்தால் சென்னை மக்கள் கொளுத்தும் வெயிலில் நடு வழியில் நிறுத்தி வைக்கப்படுவது அவர்களுக்கு சுகமான அனுபவத்தை தருகிறதா?
குற்ரம் சுமத்தப்பட்டவராக கோர்ட்டு விசாரணைக்கு செல்லும் இவரின் காரில் தேசிய கொடி பறப்பதும், வழி நெடுக காவலுக்கு நிற்கும் காவல் துறை உயர் அதிகாரிகள் மிலிடரி சல்யூட் அடிப்பதும் எந்த வகையில் சட்டப்படி சரி என்று தெரியவில்லை. இவ்வாறு செய்வது இவருக்கு எதிராக வாதாட போகும் வக்கீல், மற்றும் இவருக்கு எதிராக சாட்சியம் சொல்லப்போகும் சாட்சிகள் ஆகியோரை மறைமுகமாக பயமுறுத்துவது போலாகாதா.
என்னை பொறுத்தவரை தமிழக முதல்வர் மீது குற்றம் மட்டும் தான் சுமத்தப்பட்டிருக்கிறது. இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் குற்றமற்றவராக தான் கருத வேண்டும். அப்படி இருக்கையில், இவர் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தான் ஆட்சி செய்யும் நாட்டு மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அல்லவா திகழவேண்டும்?
என்னமோ போங்க. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. புரட்சி தலைவிக்கு ஏதாவது ஒரு நல்ல பட்டம் சொல்லுங்கள் கொடுத்து விடுவோம்.
share on:facebook
4 comments:
ஆயிரம் இருந்தாலும் அவங்க....
அதை நான் சொல்லிங்க...
நடிகை...
@Philosophy Prabhakaran said...
//நடிகை...//
சூப்பர் சரியான பட்டம். நன்றி பிரபா.
@கவிதை வீதி... // சௌந்தர் // said...
//ஆயிரம் இருந்தாலும் அவங்க....
அதை நான் சொல்லிங்க... //
ஹி ஹீ ?!?!?!
Post a Comment