நம்மில் பல பேர் என்ன வசதி இருந்தாலும் "என்னப்பா வாழ்க்கை" என்று அலுத்துக்கொள்வார்கள். அந்த வகையில் அமெரிக்கர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவே பிறந்தவர்கள்.
மழை கொட்டினாலும், வெயில் அடித்தாலும், ஸ்நோ பொழிந்தாலும் அவை அனைத்தையும் அனுபவிப்பார்கள். நம்மூரில் மார்கழி குளிருக்கே (80-85 டிகிரி) இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவோம். இங்கு நான் இருந்த மினசோட்டா மகானத்தில் 0-20 டிகிரி குளுரில் ஊரில் உள்ள அனைத்து கால்வாய்/ஏரிகளும் உறைந்து போயிருக்கும். அவ்வாறு உறைந்து போய் இருக்கும் ஏரியின் (
4 -5 அடிக்கு ஐய்சாக உறைந்திருக்கும்) மேல் காரில் சென்று டிரில்லிங் இயந்திரத்தால் உறைந்து போய் இருக்கும் ஐஸ்சை துளையிட்டு அந்த நடுங்கும் குளிரில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு மீன் பிடிப்பார்கள்.
இதை பற்றி என் அமெரிக்க நண்பர்களிடம் கிண்டலாக, "ஏன்பா, இப்படி குளிரில் உக்கார்ந்து மீன் பிடிப்பதற்கு, ஐந்து டாலர் கொடுத்தால் ஒரு கிலோ மீன் வாங்கி சாப்பிடலாமே என கேட்டால்?", அதில் என்ன சுகம் இருக்கு? இப்படி குளிரில் உக்கார்ந்து மீன் பிடித்து அதை வாட்டி சாப்பிட்டால் தான் சுகம் என்பார்கள். அந்த அளவிற்கு இயற்கையை அனுபவித்து அதில் சுகம் காண்பார்கள்.
அதுமட்டுமில்லை, கொட்டும் ஸ்நோவிலும் பல்வேறு பனிசறுக்கு விளையாட்டுகளில் (அது அபாயம் மிகுந்ததாக இருந்தால் கூட) தங்கள் பொழுதை கழிப்பார்கள். ஐந்து நிமிடம் தண்ணீரில் கை வைத்தாலே உடம்புக்கு ஆகாது என நம் குழந்தைகளை அனுமதிக்க மாட்டோம். ஆனால் பிறந்து சில மாதங்களே ஆனா குழந்தைகளை கூட ஸ்நோவில் போட்டு உருட்டி விளையாடுவார்கள்.
வெயில் காலம் வந்துவிட்டால் போதும். சனி ஞாயிற்று கிழமைகளில் ஒருவர் கூட வீட்டில் இருக்க மாட்டார்கள். புட்பால், சாக்கர் மைதானங்கள் நிறைந்து விடும். ஒவ்வொருவரும் நாற்காலி, ஸ்நாக்ஸ், ட்ரிங்க்ஸ் என்று குடும்ப சகிதம் வந்து வெயிலையும் ஆட்டத்தையும் கண்டு கழிப்பார்கள்.
இது எல்லாவற்றையும் விட முக்கியம், பொழுதுக்கும் T.V. க்கு முன் உட்கார்ந்து பொழுதை கழிக்க மாட்டார்கள். பொதுவாக விடுமுறை/பண்டிகை நாட்களில் "அமெரிக்க தொலைக்காட்சிகளில் முதல்முறையாக" என்று T.V. க்கு முன்பாக உட்கார்ந்து பொழுதை கழிக்காமல் பெரும்பாலும், எங்காவது பெரிய டீம்கள் விளையாடும் புட்பால் போட்டியோ, பேஸ் பால் போட்டியோ காண சென்று விடுவார்கள்.
அடுத்த பதிவில் மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை, மற்றும் பார்பிகியூ பற்றிய செய்திகள்...

share on:facebook
5 comments:
அடுத்த பதிவில் மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை, மற்றும் பார்பிகியூ பற்றிய செய்திகள்... /
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
hm.. I believe we also have our own natural enjoyment.. but only very less number of people do/prefer it.
நைஸ். தொடருங்கள்
நண்பா அமெரிக்காவில் இருந்து கொண்டு எப்படி இந்திய நன் பகலுக்கு பதிவுகள் ரிலீஸ் செய்றீங்க ? அப்போ உங்களுக்கு நள்ளிரவாச்சே??
நன்றி இராஜராஜேஸ்வரி.
நன்றி மாதவன.
//,but only very less number of people do/prefer it. //
சரியாக சொன்னீர்கள்.
நன்றி மோகன். கண்டிப்பாக தொடர்கிறேன்.
//நண்பா அமெரிக்காவில் இருந்து கொண்டு எப்படி இந்திய நன் பகலுக்கு பதிவுகள் ரிலீஸ் செய்றீங்க ? அப்போ உங்களுக்கு நள்ளிரவாச்சே?? //
அப்போதுதான் நேரம் கிடைக்கிறது. நாம் ஒன்று எழுதி அதை அடுத்தவர்கள் வாசிப்பது தெரியும் போது கிடைக்கும் திருப்தி, சுகம்...அது தானே பெரிய பெரிய எழுத்தாளர்களை கூட மயக்குகிறது.
Post a Comment