Wednesday, October 19, 2011

தைரியலட்சுமி செல்வி ஜெயலலிதா


ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர், இருபத்திநான்கு மணி நேரமும் கருப்பு பூனை பாதுகாப்புடன் உலா வருபவர். அவர், பக்கத்து மாநிலத்தில் நடக்கும் ஒரு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆவதற்கு பாதுகாப்பு இல்லை என நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளிக்க கோருகிறார். என்ன கொடுமை  சரவணா இது?

கர்நாடகா மாநிலம் அப்படி ஒன்றும் தீவிரவாதிகளோ நக்சலைட்டுகளோ நிறைந்த மாநிலம் அல்ல. அதே போல் இவருக்கும் தற்போது எந்த ஒரு தீவிரவாத கும்பலின் அச்சுறுத்தலும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. இப்படியெல்லாம் சொல்வதற்கு ஒரே காரணம் நாட்களை கடத்தி வழக்கையே ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு தவிர வேறு ஒன்றும் இல்லை.

இத்தனைக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதி மன்ற வளாகத்தையே மாற்றி விட்டார்கள். அது தவிர, விமான நிலையத்திலிருந்து நீதி மன்றத்திற்கு செல்ல தனி பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனம் வேறு. இவையெல்லாம் மீறி அப்படி என்ன பாதுகாப்பு இவருக்கு வேண்டும் என தெரியவில்லை. இல்லை கர்நாடக மாநில அரசையும், காவல் துறையையும் வேறு ஒரு மாநில முதல் அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்க கூட துப்பு இல்லை என கூற வருகிறார்களா?

இந்த A.K. 47 , கருப்பு பூனை பாதுகாப்பெல்லாம் இந்திய அரசியல்  வாதிகளுக்கு மட்டும் தான். அமெரிக்க ஜனாதிபதியோ போகும் வழியில்  உள்ள சாலையோர ரெஸ்டாரன்ட்டில் இறங்கி மக்களோடு மக்களாக பர்கர்  வாங்கி சாப்பிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதிக்கு இல்லாத அச்சுறுத்தலா  நம்மூர் மாநில முதல் அமைச்சருக்கு இருந்து விட போகிறது? இன்னும் சொல்லப்போனால் நம்மூரை போல் பொழுதுக்கும் A.K. 47 துப்பாக்கிகளோடும், கருப்பு பூனை பாதுகாப்போடும் எந்த ஒரு நாட்டு அமைச்சர்களோ, முதல்வர்களோ, பிரதமர், ஜனாதிபதிகளையோ நான் பார்த்ததில்லை.

இதில் இன்னொரு காரணம் வேறு நீதி மன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது, புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட நீதிமன்ற  வளாகத்தில், புதிதாக பெயின்ட் அடித்திருப்பதாகவும், அது முதல்வருக்கு  ஒத்துக்கொள்ளாது எனவும் அதனால் இரு வாரங்களுக்கு விசாரணையை  தள்ளிப்போட வேண்டுமாம். இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறார்களோ?

சரி, நாளையே ஒரு வெள்ளம், விபத்து என ஏதாவது (அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது) ஒரு அவசர நிலை ஏற்பட்டால் இப்போது கூறியது போல் 96 மணிநேர அவகாசம் எடுத்துக்கொண்டு தான் ஒரு மாநில முதல்வர்  பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்ப்பாரா?

நல்ல வேலை இவை எல்லாவற்றையும் நிராகரித்த நீதி மன்றங்கள் நாளைக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறபித்துள்ளது. பொதுவாக இம்மாதிரி விசயங்களில் நீதி மன்றங்கள் சற்று கடுமையாகவே உத்தரவு பிறப்பிக்கும். ஆனால் அப்படி ஒன்றும் இந்த உத்தரவில் தெரியவில்லை.  அதற்கு மேல் நாம் கூறக்கூடாது. பிறகு அது நீதிமன்ற அவமதிப்பாக  போய்விடும். அதனால் ஜூட்....

கடைசியா வந்த செய்தி : ஒரு வழியாக முதல்வர் நீதிமன்றத்தில் ஆஜர் என்று.share on:facebook

Monday, October 17, 2011

பங்கு சந்தை ஊழலும் அமெரிக்க நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பும்.


உலக பணக்காரர்களில் ஒருவரும் ஹெக்டே பன்ட் நிறுவனருமான  இலங்கை தமிழர் திரு. ராஜரத்னத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று  பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது.

விஷயம் இது தான். ஹெக்டே பன்ட் நிறுவனர் ராஜரத்தினம் insider trading எனப்படும் பங்கு வர்த்தக முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக  சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்.  இது பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.       

இதுவரை அமெரிக்க வரலாற்றில் இம்மாதிரி பங்கு வர்த்தக முறைகேடுகளுக்காக வழங்கப்பட்ட அதிகபச்ச தண்டனை இதுதான். இதற்கு முன் இதே போல் ஒருவருக்கு பத்து வருடங்கள்  வழங்கப்பட்டுள்ளது.  ராஜரத்தினத்துக்கு அதிக பச்சமாக இருபத்தி நான்கு வருடங்கள் சிறை தண்டனை வழங்குமாறு அரசுத்தரப்பு வக்கீல் கேட்டுக்கொண்ட போதும், நீதிபதி குறைவாகவே தண்டனை வழங்கி உள்ளார். அதற்க்கான காரணங்கள் இதோ.

திரு. ராஜரத்தினம் அவர்கள் பல்வேறு சமூக உதவிகள் செய்துவந்ததும், செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை  கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்,  மற்றும் இயற்க்கை பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு காலங்களில் பெரும் அளவில் இவர் உதவிக்கரம் நீட்டியதும் சமூக நன்மைக்காக இவர் தொடர்ந்து சேவை செய்து வந்ததும் தான். அத்தோடு, இவரின் உடல் கோளாறுகள் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இவருக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டதாக நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல், தண்டனை குறைத்ததற்காக சுமார்
10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமும், முறைகேடுகளில்  ஈட்டிய சுமார் 53.8 டாலர்களையும் அரசுக்கு திருப்பி செலுத்த தீர்ப்பு அளித்துள்ளார்கள். 

குறைந்தபச்ச தண்டனையாக சுமார் ஆறு வருடங்கள் மட்டுமே  தண்டனையாக வழங்க இவருடைய வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்ட போதும், அதை மறுத்து விட்ட நீதிபதிகள், நவம்பர் 28 ம் தேதி வரை  அவருடைய 10 மில்லியன் பங்களாவை விட்டு  எங்கும் போககூடாது 
எனவும் பிறகு  அவர் குறிப்பிட்ட ஜெயிலுக்கு சென்று தன்னை  ஒப்படைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.  
IBM, Google போன்ற மிக பெரிய நிறுவனங்களில் தான் உருவாக்கி வைத்திருந்த தகவல் பெரும் நபர்கள், மற்றும் தன்னுடைய நண்பர்கள், மூலம் சுமார் 57 மில்லியன் டாலர்கள் பங்கு வர்த்தக முறைகேடு மூலம் சம்பாதித்திருக்கிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.3  பில்லியன் டாலர்கள்(ஆறாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல்).
என்ன இருந்து என்ன பயன். கூடிய விரைவில் சிறையில் அதுவும் பத்து  வருடங்களுக்கு மேல்...ஆசைக்கு அளவில்லை என்றால் இப்படியெல்லாம்  அனுபவிக்க வேண்டியது தான்.   

share on:facebook

Monday, October 10, 2011

குருட்டு மந்திரி, செவிட்டு அதிகாரி, ஊமை பிரதமர்

அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு நாள் மும்பைக்கு வருகை தந்ததிற்காக சாலையோரம் இருந்த ஐநூறுக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை மொட்டை அடித்தார்கள். பத்துக்கும் மேற்ப்பட்ட போர் விமானங்களும்,  இருநூறுக்கும் மேற்பட்ட கடற்படை காவல் படகுகளும், கப்பல்களும் அவரின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டன.

இங்கே தமிழக மீனவர்கள் தினந்தோறும் பிழைப்புக்காக  கூப்பிடும் தூரத்தில் உள்ள கச்சத்தீவிற்கு மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை இராணுவத்தாலும், இலங்கை மீனவர்களாலும் தாக்கப்பட்டும், அவர்களின் பொருட்கள் சூறையாடப்பட்டும் வருகின்றன. இது பற்றி தமிழக அரசோ, மத்திய அரசோ கண்டு கொள்வதே இல்லை.

விடுதலை புலிகள் ஆதிக்கம் இருந்தவரை எல்லா பழியையும் அவர்கள் மேல் போட்டார்கள். தமிழக மீனவர்களையும் விடுதலை புலிகளையும் இனம் காண முடியவில்லை. தமிழக மீனவர்கள் விடுதலை புலிகளுக்கு பொருட்கள் கடத்துகிறார்கள் என கூறிக்கொண்டு சுட்டுத்தள்ளினார்கள்.  இப்போது அவர்களுக்கு காரணம் சொல்ல ஏதுமில்லை. இருந்தும் சுடுகிறார்கள். கேள்வி கேக்க யாரும் இல்லை என்ற காரணத்தால்.  நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஒன்றாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போதே இப்படி தாக்கப்படுகிறார்களே. இலங்கையில் யாரும் இல்லாத அனாதைகளாக வாழும் தமிழர்கள் நிலை என்னவாக இருக்கும்? 

நக்சலைட்டுகள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பொது மக்களுக்கு ஆயுதம்  வழங்குகிறது அரசே. அது போல் தமிழக மீனவர்களுக்கும் ஆயுதம் வழங்கினால் ஒரு வேலை இம்மாதிரி மீனவர்கள் தாக்கப்படுவது நிற்குமோ?  இல்லை, கட்சத்தீவும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் ஒரு சில கிலோ  மீட்டர்கள்  சுற்றளவு தான். அப்படி இருக்கையில் அதன் அருகே இந்திய கடலோர காவல்  படை  படகுகள் ஒன்றிரண்டை அங்கு சுற்றி வர செய்தாலே  போதும். இந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கண்டு விடலாம். இந்தியாவை பொறுத்தவரை இலங்கை ஒரு சுண்டைக்காய் தான். எல்லா விசயத்திலும். இருந்தும் என்ன காரணத்தால் யாரும் ஏதும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்பது ஒரு புதிராகவே உள்ளது.

இதே குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டால் சும்மா இருந்து விடுமா மத்திய மாநில அரசுகள்? சண் டி.வி. மற்ற தமிழக  சானல்கள் தவிர எந்த ஒரு வட நாட்டு செய்தி சானல்களும் இது பற்றி வாய்  திறப்பதே இல்லை. இது இன்னொரு கொடுமை. 

இன்றைய  காலத்தில் தமிழக மீனவர்கள் ஒரு வீடியோ கேமராவில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடக்கும் போது அதை பதிவு செய்து பத்திரிக்கைகளுக்கு கொடுத்தால் அது நல்லதொரு பயனை தரும். இல்லை எது எதற்கோ ஸ்டிங் ஆப்பரேஷன் செய்து எல்லாவற்றையும்  அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் ஒரு முறை இம்மாதிரி ஒரு ஆப்பரேஷன் செய்து மக்களுக்கு உண்மைகளை வெளி கொண்டு  வந்தால் நன்றாக இருக்கும். நடக்குமா என் ஆசை?

இது எதுவுமே தேவை இல்லை. ஆமாம், தலைப்பு என்ன? 

குருட்டு  மந்திரி, செவிட்டு அதிகாரிகள், ஊமை பிரதமர். இவர்கள் தங்கள்  கண்கள், காதுகள் மற்றும் வாயை திறந்தால் போதும். செய்வார்களா?

கடைசியாக கேட்ட செய்தி: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடப்பதை  பற்றி பேச்சு வார்த்தை நடத்த இந்திய வெளியுறவு அதிகாரிகள் இலங்கையில் இருக்கும் போதே மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்.

share on:facebook

Wednesday, October 5, 2011

நாய் வாழ்க்கை

"சரியான நாய் பொழப்புடா". மிக மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இப்படி தான் தங்களை தானே கூறிக்கொள்வார்கள். அனால் இதெல்லாம் அமேரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு பொருந்தாது. ஏனெனில், அங்கு வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் அவ்வளவு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றன.

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு தனி நாய் வீடுகள் கட்டியது போக இப்போது நாய்களுக்கு காப்பீடு எடுப்பது முதல், அதன்  உரிமையாளர்  இறந்து விட்டால் அதற்கு மீதி காலம் வரை உணவிடவும் பராமரிக்கவும்  உயில் எழுதுவது வரை நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்,  மேலை நாடுகளில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் கலாசாரம். தான் பெற்ற பிள்ளைகளானாலும்/தன்னை பெற்ற பெற்றோர் ஆனாலும் ஒரு குறிப்பிட்ட  வயதிற்கு பிறகு அடுத்தவரை அண்டி வாழாத வாழ்க்கை முறையினால்  பெரும்பாலும் ஒரு கட்டத்தில் அவர்கள் தனிமையில் விடப்படுகிறார்கள்.

அவ்வாறு தனிமையில் வாழும்போது அவர்களுக்கு உள்ள ஒரே துணை  இம்மாதிரி செல்லப் பிராணிகள் தான். அது மட்டுமில்லை. இங்கு உள்ள   குழந்தைகளை கூட  நாய்களுடன் சர்வ சாதாரணமாக கொஞ்ச  விடுவார்கள்.  நாயின்  வாயிலிருந்து வரும் எச்சில் குழந்தைகளின் மீது படுவதை கூட அவர்கள் தடுப்பதில்லை. அதற்கு காரணம், இங்குள்ள எல்லா செல்ல  பிராணிகளுக்கும் முறையாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் பொதுவாக எல்லா பிராணிகளுக்கும் முறையாக  பயிற்சி கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. எனது பக்கத்து வீட்டு பாட்டியின் பூனைக்கு இருதய ஆப்பரேஷன் கூட செய்துள்ளார்கள்.

முறையாக பயிற்சி கொடுத்து வளர்க்கப்படுவதால் தேவை இல்லாமல் குறைப்பதும், பார்பவர்களை எல்லாம் கடிப்பது என்பதெல்ல்லாம் இங்கு  அதிகமாக காண முடியாது. சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நாய்களும் வளர்க்கப்படும். அதே போல் பூனைகளும். வளர்ந்த குழந்தைகள் கூட சில சமயங்களில் சொல்வதை கேக்க மாட்டார்கள். அனால் இந்த நாய்களும் பூனைகளும் பள்ளி குழந்தைகளை போல் சொல்வதை எல்லாம் கேட்கும். காருக்குள் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தலையை மட்டும்  வெளியில் நீட்டிக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு போவதாகட்டும்,  பூனைகள் அமைதியாக வீட்டின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு  போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பதாகட்டும் பார்பதற்கு மிகவும்  வேடிக்கையாக இருக்கும்(இங்கு லோக்கல் விமானங்களில் மூடிய கூடைகளில் வைத்து தங்கள் செல்ல பிராணிகளை(நாய்களை கூட) தங்கள் கூடவே எடுத்துச்செல்வதையும் நான் பார்த்திருக்கிறேன்). 

என்ன தான் அமெரிக்கர்களாக இருந்தாலும், தங்கள் நாய்களை வாக்கிங் அழைத்துச்செல்லும் போது கையிலேயே ஒரு பிளாஸ்டிக் பையையும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஆம், நாய் ஆய் போனால் அதை உடனே சாலைகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்குத்தான்  பிளாஸ்டிக் பைகள். இல்லையெனில் அபராதமோ/தண்டனையோ நிச்சயம். நாய் ஆய் அவ்வளவு கெடுதலாம்.

பூனைக்குட்டி சைஸ் முதல் மெகா சைஸ் புல்டாக், டாபர்மன் வரை அத்தனை வகை நாய்களையும் இங்கு பார்க்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால் பெற்ற பிள்ளைகள் போல நாய்களை இங்கு பார்த்துக்கொள்வார்கள். 

share on:facebook

Sunday, October 2, 2011

வெளிநாட்டில் இழந்தது ?

சமீபத்தில் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக மதிய உணவை உண்டு கொண்டிருந்த போது இந்த குறிப்பிட்ட வீடியோ பதிவை பார்க்க நேர்ந்தது. தொண்டை குழிக்குள் சோறு இறங்கவில்லை. பேசியவர் கைத்தட்டலுக்காக பேசினாரா என தெரியவில்லை. ஆனால், அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்குள் முள்ளாய் குத்தியது. பலருக்கும் குத்தி இருக்கும் என நினைக்கிறேன். ஹ்ம்ம்...
share on:facebook

Saturday, October 1, 2011

100,00000,00000,00000,00000 அட இது என்ன ஊழல்?

மகாயுகம். அட, இது ஒன்னும் ஒரு புது ஊழலின் பெயர் இல்லீங்க. பண்டைய  காலத்தில் உபயோகத்தில் இருந்த, உலகில் இன்றும் மிக பெரிய எண்ணாக  கருதப்படும் ஒரு  எண்ணிக்கை. அதுதான் 100,00000,00000,00000,௦௦௦௦௦.   
share on:facebook