Monday, November 28, 2011

Black Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்களும்


"Thanks giving day" - அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் இறுதி வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு விழா. பல நூறு ஆண்டுகளுக்கு முன்  அமெரிக்கா வந்தேறிய குடியேறிகளுக்கு (சிகப்பு இந்தியர்கள் தான்  அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள்), விவசாயம் செய்யவும், வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ளவும் கற்று கொடுத்த சிகப்பிந்தியர்களுக்கு நன்றி  தெரிவிக்கும் வகையில் உருவாக்க பட்ட நாள் தான் தேங்க்ஸ் கிவிங் டே. இது ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நாலாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படும். 


நம்மூரில் பிள்ளையார் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்வது போல், இங்கு தேங்க்ஸ் கிவிங் டே அன்று வான்கோழி விருந்து வழக்கம். முழு வான்கோழியை அப்படியே குடைந்து, அதனுள் மசாலா வகையறாக்களை   திணித்து, ஓவனில் வேக வைத்த பிறகு அப்படியே கேக்கை கட் செய்வது  போல் துண்டு  துண்டாக வெட்டி எடுத்து சாப்பிடுவார்கள். இது தான் தேங்க்ஸ்  கிவிங்  டேயின் மெயின்  மெனு. மற்றபடி ட்ரிங்க்ஸ், டி.வி., பூட் பால் கேம்ஸ்  என  அன்று பல வீடுகளில் உற்சாகம் களைகட்டும்.

இதை எல்லாம் விட பெரிய கொண்டாட்டம், ஷாப்பிங் தான். ஆம், தேங்க்ஸ் கிவிங் டேவிற்கு அடுத்த நாள் (தேங்க்ஸ் கிவிங் டே அன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும்).  "Black Friday" என்று  அழைப்பார்கள். அன்று நம்மூர் ஆடித்தள்ளுபடியை விட பல மடங்கு மேலான தள்ளுபடியில் எல்லா பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கும். குறிப்பாக  எலெக்ட்ரானிக் சாதனங்கள். 100 டாலர் பெறுமானமான பொருளை 50 டாலருக்கு தந்து, அதை  நாம் வாங்க போக, மேலும்  200 டாலர்களுக்கு வேறு பொருட்களை வாங்கி  வந்து விடுவோம். இது தான் வியாபார உத்தி.

சில பொருட்கள் அடிமாட்டு விலைக்கு கிடைக்கும். அப்பொருள்களை வாங்க முதலில் வரும் 10 அல்லது 50 பேருக்கு மட்டும் கூப்பன் தருவார்கள். இதை வாங்க நடுங்கும் குளிரில் முதல் நாள் மாலையே சென்று வரிசையில் நிற்பார்கள். பொதுவாக கடை நள்ளிரவு 12 மணிக்கோ  அல்லது விடியற்காலையோ திறக்கப்படும்.

கடந்த சில வருடங்களாக ஆன்லைன் விற்பனையும் சூடு பிறக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் நானும் இந்த மாதிரி முதல் நாள் மாலையே சென்று, நடுங்கும் குளிரில் காத்திருந்து நல்ல நல்ல பொருட்களை  அடிமாட்டு விலைக்கு வாங்கியதுண்டு. தற்போது அந்த ஸ்பிரிட் குறைந்துவிட்டது. இருந்தும் இந்த ஆண்டு இரவு முழுதும் ஷாப்பிங் செய்ததில் என் பர்சு இளைத்தது என்பதை விட வீடு நிறைந்தது என்றே சொல்லலாம். குழந்தைகளுக்கு எல்லாம் அப்படி ஒரு சந்தோசம். இருக்காதா பின்னே?

ஆமா அப்படி என்ன பொருள் வாங்கினீங்க என்று கேப்பவர்கள் காத்திருக்கவும்...


share on:facebook

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

வாங்கிய பொருட்களை ஃபோட்டோவுடன் பகிர்ந்து கொ”ல்ல”வும்...இந்த டேயினை பற்றி செய்தி அறிந்து கொண்டேன்.

sriram said...

ஆதிமனிதன்:
தள்ளுபடி விற்பனை தேங்க்ஸ்கிவிங்க்கு அடுத்தநாளான ப்ளாக் ஃப்ரைடே தானே?
Thanks Giving : நவம்பரின் நாலாவது வியாழன் - அன்று அனைத்து கடைகளுக்கும் விடுமுறை
Black Friday : Thanks Giving க்கு அடுத்த நாள்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Philosophy Prabhakaran said...

எனக்கு இப்ப வான்கோழி வறுவல் வேணும்...

ஆதி மனிதன் said...

நன்றி அமுதா: கண்டிப்பாக பகிர்கிறேன். ஆமா? அது என்ன பகிர்ந்து "கொ”ல்ல”வும்" ?

நன்றி பிரபா: //எனக்கு இப்ப வான்கோழி வறுவல் வேணும்... //

அதுக்கு நீங்கள் சென்னையில் இருந்தால் எங்களை விட நல்ல வறுவலை சாப்பிடலாம். அங்கு தான் நிறைய வான்கோழி பிரியாணி கடைகள் இருக்கிறதே!

ஆதி மனிதன் said...

நன்றி ஸ்ரீராம்: பல மாதங்களுக்கு (வருடங்களுக்கு!) பின் வருகை தந்ததற்கும் தவறை சுட்டி காட்டியதற்கும் நன்றி. தவறை திருத்தி விட்டேன். அதோடு தேங்க்ஸ் கிவிங் டே பற்றிய மேலும் சிறு விபரங்களை சேர்த்துள்ளேன்.

Post a Comment