சமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் "வால் கிரீன்சில்" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்கான 'கமிசோல்' என்று சொல்லப் படும் உள்ளாடையின் விளம்பரத்தை பார்த்தேன். 'மாத்தி யோசி' என்று சொல்வார்களே அது இது தான் போல. சில நேரங்களில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த கலர், டிசைன் என்று எல்லாம் தேர்வு செய்த பின் மேலாடையை அணிந்து பார்த்தால் அதில் கழுத்துக்கு கீழே பெரிய அளவில் மார்பக பகுதிகள் தெரியும் வகையில் மிகவும் லோ நெக்க்காக இருக்கும். அதை விரும்பாத பெரும்பாலான பெண்கள் அவர்களுக்கு உடை பிடித்திருந்தும் வேண்டா வெறுப்பாக வந்து விடுவார்கள்.
ஆனால், படத்தில் உள்ளது போல் ஒன்றிரண்டு வண்ணங்களில் 'கமிசோல்கள்' பெண்கள் வாங்கி வைத்துக் கொண்டால் போதும். எவ்வளவு லோ நெக்காக இருந்தாலும், மேலாடை அவர்களுக்கு பிடித்திருந்தால் இம்மாதிரி கமிசோல்களை உபயோகித்து அழகான உடைகளை கவர்ச்சி இன்றி அதே நேரத்தில் அடுத்தவர்களை கவரும் வகையில் உடைகளை அணியலாம்.
இந்தியாவில் இம்மாதிரி 'கமிசோல்ஸ்' கிடைக்கிறதா என்று எனக்கு தெரியாது. இல்லை என்றாலும் கூட இம்மாதிரி இரண்டு மூன்று வண்ணங்களில் பெண்களே தைத்து வைத்துக் கொண்டால் அவர்களுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.
இம்மாதிரி வேறு சில 'மாத்தி யோசி' பொருட்களை பற்றி வேறு ஒரு பதிவில்...
வேறு சில 'மாத்தி யோசி' சமாச்சாரங்கள் கீழே...
மாத்தி யோசி - 1
மாத்தி யோசி - 2
share on:facebook
4 comments:
இந்தியாவில் ஆண்கள் உள்ஆடை நிறுவனம் ஜாக்கி இப்போ பெண்களுக்கும் உள்ளாடை தயாரிக்கிறாங்க. கெமிசோல் கருப்பு & வெள்ளைன்னு ரெண்டு நிறங்களில் கிடைக்குது.
மெலிசா இருக்கும் (ஸல்வார்)கமீஸ்களுக்கு லைனிங் போட்டுத் தைப்பதற்கு பதிலா இதை உள்ளே போட்டுக்கலாம். வசதியாத்தான் இருக்கு,
சார்.. இதெல்லாம் ரொம்பப் பழசு.. இங்க பெண்கள் அத யூஸ் பண்ண ஆரம்பிச்சு ரொம்ப நாளாகுது..
எங்கூர்லயும் உபயோகத்துக்கு வந்து ரொம்ப நாளாகுது, அமோக வரவேற்பு இங்கே.
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி துளசி.
அப்படிங்களா மாதவன். எனக்கு தெரியாதுங்கோ...
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அமைதி சாரல்.
Post a Comment