Friday, February 24, 2012

வங்கி கொள்ளையர்களும், என்கவுண்டர் ஓட்டைகளும்...

சமீபத்தில் நடை பெற்ற வங்கி கொள்ளையர் என்கவுண்டர் பற்றி பலர் எழுதி விட்டார்கள். என்னைப் பொறுத்த வரை இம்மாதிரி கொள்ளையர்களை இப்படி தான் போட்டு தள்ள வேண்டும் என்று சாதாரணமாக கூற முடியவில்லை. ஏனென்றால், இந்த என்கவுண்டரால் மக்களுக்கு பெரிய அளவு ஒன்றும் பயனில்லை என்பதே என் கருத்து. சரி இப்போது என்கவுண்டர் ஓட்டைகளை பார்ப்போம்.

கொள்ளையர் தங்கி இருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்த பிறகு ஓரிரு நாள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக கண்காணித்து சரியான நேரத்தில் மடக்கிப் பிடித்திருந்தால், அது சாமர்த்தியம். எல்லோராலும் பாராட்டப் பட்டிருக்கும். அட, அட்லீஸ்ட் ஒருவரையாவது வளைத்து பிடித்திருந்தால் பாராட்டி இருக்கலாம். எல்லோரையும் ஒரே இரவில், ஒரு மணி நேரத்தில் போட்டுத் தள்ளுவதில் என்ன பெரிய சாமர்த்தியம் இருக்கிறது?

மேலும், கொள்ளையர்கள் அனைவரும் வட நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். அதாவது, போலீசார் வெளியிலிருந்து என்ன கத்தி இருந்தாலும் மொழி புரியாமல் பயத்தில் உள்ளேயே அவர்கள் இருந்திருக்கலாம் அல்லவா? மேலும் அவர்கள் வீட்டின் உள்ளே தானே இருந்தார்கள். சுற்றி வளைத்து சற்று நேரம் எடுத்து அவர்களிடம் பேசி வெளியே கொண்டு வந்திருந்தால் அவர்களை பற்றியும் அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களை பற்றியும் இன்னும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

இதோ பத்திரிக்கைகளில் எழுப்பப்பட்ட சில கேள்விகள்...

# கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், வெளி கதவு உடைக்கப் பட்டதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்கிறார்கள்..

# ஜன்னலுக்கு பின்புறம் உள்ள சுவரில் இரண்டே இடத்தில் மட்டும் துப்பாக்கி  குண்டுகள் துளைத்த தடயங்கள் உள்ளன. அதுவும் ஒரே உயரத்தில். ஜன்னல்  கிரிலில் துப்பாக்கி குண்டு பட்டதற்கான எந்த தடயமும் இல்லை. அதாவது,  மிக சிறந்த/தேர்ந்த துப்பாக்கி சுடும் அனுபவம் உள்ளவர்கள் கூட அப்படி  குறி  தவறாமல், ஒரே அளவோடு சுட முடியாது. போலீசார் மற்றும்  கொள்ளையர்கள் அந்த அளவு துப்பாக்கி சுடும் அனுபவம் உள்ளவர்களா?

# ஜன்னல் கிரிலுக்கும் சுவருக்கும் இடையில் இருந்த டி.வி. ஒரு சேதமும் இல்லாமல் இருக்கிறது. இத்தனை துப்பாக்கி குண்டுகளுக்கு இடையில்.

# தரை முழுதும் ரத்தக் கரைகள் இருந்தும், சுவற்றிலோ வேறு எங்குமோ ரத்தக் கரைகளை காண முடியவில்லை. அப்படி என்றால் ஒரே இடத்தில் எல்லோரும் சுட்டுக் கொல்லப் பட்டு இருக்கிறார்கள்.

வங்கியில் கொள்ளை அடிக்கப் பட்ட பணத்தை கை பற்றி இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள். அதற்குள் எப்படி அந்த பணம் வங்கியில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டதுதான் என்று முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ வழக்கம் போல இந்த என்கவுன்டரிலும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கப் போவதில்லை.

சிலர் சொல்கிறார்கள். நீங்கள் பதிக்கப் பட்டிருந்தால் தான் உங்களுக்கு தெரியும் என்று. அதை தான் நானும் கேட்கிறேன். ஒரு வேலை இவர்களில் ஒருவர் நிரபராதியாக இருப்பின் அவ்வாறு பாதிக்கப் பட்டவர் நம் குடும்பத்தில் ஒருவராக இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் என்பது தான் என் கேள்வி?

கெட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். தீயவர்கள் ஒழிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், அப்பாவிகள் பலிகாடாக ஆக கூடாது. தீயவர்களுடன் தொடர்பில் உள்ள மற்றவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும். அது தான் என் கருத்து. அதற்க்கு இந்த என்கவுண்டர்கள் பலனளிக்காது.

என்கவுண்டர் பற்றி விசாரிக்கும் நீதிபதி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...


share on:facebook

15 comments:

CS. Mohan Kumar said...

Agree with your views.

சு.பரணி கண்ணன் said...

you are correct....

Astro வெங்கடேஷ் said...

உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.

Astro வெங்கடேஷ் said...

உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.

vicky said...

THANGAL KARUTHUKALAI NANUM VAZHIMOZHIKIREN

இந்தியக்குடிமகன் said...

உங்கள் கருத்துக்கள் அருமை..
இதில் போலீசாரின் சாதனை ஒன்றும் இல்லை. ஒரு நபரின் படத்தை வெளியிட்டு அவன் உடன் இருக்கும் (அப்பாவிகளாக கூட இருக்கலாம்) நபர்களையும் கொன்றது போலீஸ் நாய்களின் அரக்கத்தனத்தை மக்களுக்கு உணர்த்துகிறது. ஒருவரையும் உயிருடன் பிடிக்க துப்புயில்லை. ஆனால் சென்றதோ 4 கமாண்டோவும், 14 போலீஸ்களும்..

ஆதி மனிதன் said...

நன்றி மோகன்.

நன்றி பரணி கண்ணன்.

நன்றி அகமக்கடல்.

ஆதி மனிதன் said...

நன்றி விக்கி.

நன்றி இந்தியக்குடிமகன்.

ஆதி மனிதன் said...

பெரும்பாலனோர் வங்கி கொள்ளையரை என்கவுண்டர் செய்ததை ஆதரித்து எழுதி இருந்தனர். இம்மாதிரி பொது மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பலை நிச்சயம் நாம் வரவேற்க போவதில்லை. ஆனால், அதே நேரத்தில் போலீசார் சற்று புத்திசாலிதனமாக நடந்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து. ஐந்து பேரை இரவு நேரத்தில் குருவி சுடுவது போல் சுடுவது ஒன்றும் பெரிய பாராட்டுக் குரிய காரியம் இல்லை என்பதே மீண்டும் என் கருத்து.

இந்த பதிவுக்கு பெரும்பாலனோர் மாற்றுக் கருத்து தெரிவிப்பார்கள் என்றே முதலில் எண்ணி இருந்தேன்.

mohamed khaiyum said...

தாங்கள் கேட்ட கேள்விகள் அணி அடித்து போல் உள்ளது.பொதுவாக கேள்வி கேட்பது மிகவும் எளிது. பதில் அளிப்பது மிகவும் கடினம்.உங்கள் தளத்தின் பெயர் ஆதிமனிதன் ஆகையினால் தான் இவ்வாறு கேள்வி, இன்னும் நவினகால மனிதாக நிங்கள் வளர்ந்தால் உங்கள் கேள்விகளுக்கு நிங்களே பதில் அளிப்பீர். விரைவாக வளர வேண்டும்

sathish said...

அப்பாவிகள் பலிகாடாக ஆக கூடாது

Madhavan Srinivasagopalan said...

http://www.dinamalar.com/News_detail.asp?Id=413706

ஆதி மனிதன் said...

//தாங்கள் கேட்ட கேள்விகள் அணி அடித்து போல் உள்ளது.//
நன்றி முஹமது.

முதல் வரி என் கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது. ஆனால், அதன் பிறகு வரும் வரிகள் நான் இன்னும் வளர வேண்டும் என கூறி உள்ளீர்கள். உண்மையை சொல்லப் போனால், நாமெல்லாம் ஆதி மனிதர்களாகவே இருந்திருந்தால் இந்த கொள்ளைகள், என்கவுண்டர்கள் எல்லாம் இருந்திருக்கவே இருக்காது.

ஆதி மனிதன் said...

நன்றி சதீஸ்.

நன்றி மாதவன். ஹ்ம்ம்...நானும் பார்த்தேன் இந்த செய்தி தொகுப்பை. இதே போல் தினமலர் பத்திரிகை அலுவலகத்தில் ஒரு கைது நடந்திருந்தால் ஐயோ குய்யோ என பத்திரிகை சுதந்திரம் பறி போய் விட்டதாக குதித்திருப்பார்கள். போலீஸ் அராஜகம் என அரற்றி இருப்பார்கள். காது வலியும், வயிற்று வலியும் அவரவர்களுக்கு வந்தால் தான் தெரியும்.

Sankar Gurusamy said...

என்கவுண்டர் செய்வது இப்போது ஒரு பரபரப்புகான வழி ஆகி விட்டது. மற்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப ஒரு உக்தியாகவும் இது இருக்கலாம். ஒண்ணுமே புரியல..

பகிர்வுக்கு மிக்க நன்றி...

http://anubhudhi.blogspot.in/

Post a Comment