Monday, November 21, 2011

அமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.


பொதுவாகவே வெளியூரோ அல்லது வெளி மாநிலத்திற்கோ நாம் செல்லும்  முன் அவ்வூரை பற்றி ஆவலுடன் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவிற்குள்  பயணம் மேற்கொள்ளும் போதே இது மிக அத்தியாவிசமான ஒன்று. நூறு  இருநூறு மைல்களுக்கு  அப்பால் சென்றாலே மொழி வேறு, கலாச்சாரம் வேறு. உணவும் உடைகள்  கூட வேறுபடும். இதனால் பயன்களும் உண்டு,  பிரச்சனைகளும்  உண்டு.  அப்படி இருக்கையில் இரு கண்டங்கள்  தாண்டி  ஆங்கிலம் ஒன்றையே  துணையாக கொண்டு அமெரிக்கா  போன்ற  நாடுகளுக்கு முதல் முறை  செல்லும்  போது அந்நாட்டின் கலாச்சாரம், உணவு, உடைகளை பற்றி நாம் தெரிந்து (பயணத்திற்கு முன்பே) கொள்வது  நமக்கு பல வகைகளில் உதவும். ஏதோ என்னால் ஆன சிறு முயற்சி... சிலருக்கு அது பலன்  அளிக்குமானால் கூட அதுவே  எனக்கு பெரு மகிழ்ச்சி.

# அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் "Queue Discipline" என்று சொல்ல  கூடிய வரிசை நெறிமுறையை கடை பிடிப்பது மிக அவசியம். எங்கு  சென்றாலும் இதை கடை பிடிப்பது அவசியம். எல்லோரும் வரிசையில்  நிற்கும் போதும் நீங்கள் மட்டும் இடையில் புகுந்தால், ஒன்று எல்லோரும்  உங்களை  சத்தம் போட்டு உள்ளே விட மாட்டார்கள். இது கூட  பரவாயில்லை. சில இடங்களில்  யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் உங்களை  பார்க்கும் பார்வை இருக்கிறதே. நாக்கை  பிடிங்கிக்கொண்டு சாகலாம் போல்  இருக்கும். வரிசையின் நடுவே  செல்பவர்களை புழுவை போல் பார்ப்பார்கள்.  எல்லாவற்றையும் விட  முக்கியமானது வரிசை என்றால் நூறு பேர் இருக்க  வேண்டும் என்றில்லை.  ஒருவர் உங்களுக்கு முன் நின்றால் கூட அது வரிசைதான். அவர் காரியம்  முடிந்து நகன்ற பிறகு தான் நீங்கள் முன்னால் செல்ல வேண்டும். அது  ஒன்றுக்கும் உதவாத அரை நொடி கேள்வியாக இருந்தால் கூட*.

# அடுத்ததாக "Courtesy". ஒரு நிறுவனத்திற்கு உள்ளே செல்லும் போதோ, இல்லை எந்த ஒரு இடத்திலும் கதவை திறந்து கொண்டு உள்ளே போகும் போது அடுத்து யாராவது வந்தால் அவருக்காக கதவை பிடித்து கொண்டு  நிற்க வேண்டும். ஆம். அதுதான் நாம் கடை பிடிக்க வேண்டிய மரியாதை.  இன்னும் சொல்ல போனால், நமக்கு பின்னால் ஒருவர் வந்தால், அவருக்காக கதவை திறந்து விட்டு அவர் உள்ளே சென்ற பிறகு தான் நாம் செல்ல வேண்டும். சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் கூட வரிசையாக மக்கள் உள்ளே செல்லும் போது அடுத்து பின்னால் வருபவர் மேல் கதவு சென்று அறைந்து விட கூடாது என்பதற்காக ஒவ்வொருவரம் கதவை தங்கள் கையால்  தாங்கி தாங்கி செல்வர். பாதுகாப்பு நிறைந்த கட்டடங்களுக்கு  மட்டும் இது பொருந்தாது**.

# "Please, Thanks". இது தான் நீங்கள் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தையாக இருக்கும். ஆம், எதற்கு எடுத்தாலும் நாம் பிளீஸ் என்றும் தாங்க்ஸ் என்றும் சொல்ல  வேண்டும். ஒரு பேருந்தில் ஏறி டிக்கெட் எடுக்க வேண்டும்   என்றால்  கூட நடத்துனரிடம் ஒன் டவுன் டவுன் "ப்ளீஸ்" என்று தான் கேக்க வேண்டும்.  பேருந்தை விட்டு இறங்கும் போது மறக்காமல் ஓட்டுனருக்கு  "தாங்க்ஸ்"  சொல்ல  வேண்டும்***.

* நான் முதல் முறை அமெரிக்கா சென்ற போது "Queue Discipline" தெரியாமல்  பெற்ற அனுபவம்.

** Courtesy - இங்கு கடைபிடித்த மரியாதையை எனது இந்திய அலுவலகத்தில் கடைபிடித்ததால் கிடைத்த "சம்மன்".

*** "பிளீஸ்" சொல்லாததால் இங்கிலாந்தில் எனக்கு கிடைத்த அனுபவம்.  இவையெல்லாம் அடுத்த பதிவில். 

இன்னும் பல சுவராசியங்கள் அடுத்த பதிவில்... 

share on:facebook

9 comments:

நிகழ்காலத்தில்... said...

சுவாரசியமான அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்.,

வாழ்த்துகள்..

Balu said...

1 If someone horn's then its an insult.
2 Unknown people may smile at you
3 When ever your start interacting, they will ask how are you?, how can i help you?

இராஜராஜேஸ்வரி said...

very informative..

Avargal Unmaigal said...

///அமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.///

நீங்கள் சொன்னது முதன் முறையாக செல்பவர்களுக்கு மட்டுமல்ல பல்லாண்டு காலமாக வாழ்ந்து தன்னை மாற்றி கொள்ளாத தமிழர்களுக்கும் தான் நண்பரே

Madhavan Srinivasagopalan said...

// நமக்கு பின்னால் ஒருவர் வந்தால், அவருக்காக கதவை திறந்து விட்டு அவர் உள்ளே சென்ற பிறகு தான் நாம் செல்ல வேண்டும். //

இதுக்குத்தான் முந்திரிகொட்டை மாதிரி முன்னால ஓடக்(போகக்) கூடாது

// அடுத்து பின்னால் வருபவர் மேல் கதவு சென்று அறைந்து விட கூடாது என்பதற்காக //

இதுக்குத்தான் ஆட்டமேடிக் ஷட்டர் வைக்கக் கூடாது..

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி "நிகழ்காலத்தில்".

Thanks for visiting Balu. Yes you are right. Will come in following blogs.

ஆதி மனிதன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

நன்றி அவர்கள் உண்மைகள்.
//...பல்லாண்டு காலமாக வாழ்ந்து தன்னை மாற்றி கொள்ளாத தமிழர்களுக்கும் தான் நண்பரே//

நான் அப்படி சொல்ல வரவில்லை. பொதுவாக புதிதாக வருபவர்களுக்காக சொன்னேன்.

ஆதி மனிதன் said...

//இதுக்குத்தான் ஆட்டமேடிக் ஷட்டர் வைக்கக் கூடாது//

Thanks Mathavan. You are right. The same thing came to my mind also.

Anonymous said...

அப்புறம் அப்துல் கலாம் மாதிரி பேன்ட் சூ எல்லாம் கலட்ட சொல்வார்களா

Post a Comment