Tuesday, May 10, 2011

உயர் கல்வி கற்க உதவிக்கரம் கேட்கும் ஏழை மாணவி - முடிந்தால் உதவுங்களேன்.

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,200க்கு 1,136 மதிப்பெண் பெற்றிருந்தாலும், படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார், மாணவி ரேமகாவதி. இவரது கல்விக்குஉதவினால், கம்ப்யூட்டர் இன்ஜியராவேன் என கூறினார்.


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவியர் பெற்றோருடனும், பள்ளிகளில் சக தோழிகளுடனும் சந்தோஷத்தை உற்சா கமாக பகிர்ந்து கொண்டனர். ஆனால், அதிக மதிப்பெண் பெற்றும், 10 நாட்களுக்கு முன் தந்தை இறந்த சோகத்தில், சம்பாதித்தால் தான் குடும்பத்தையே காப்பாற்ற முடியும் என்ற நிலையில்; பள்ளியை மறந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே, தேர்வு முடிவை அறிந்து, சக தொழிலாளர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட மாணவியும், திருப்பூரில் உள்ளார் என்பதை அறிந்து, எம்.எஸ்., நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரேமகாவதியை சந்தித்தோம்.

சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, தந்தை இல்லையே என அழுதபடி, அவர் கூறியதாவது: திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையம் பவானி நகர் முதலாவது வீதி 3/1 விஜயா இல்லத்தில் வசித்து வருகிறோம். அப்பா மனோகர்; அம்மா ரோஜா; பனியன் நிறுவனத் தில் தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், மேட்டாங்காடு நகராட்சி பள்ளியில் ஆரம்ப கல்வி முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண் பெற்றேன். அடுத்து படிக்க வசதியில்லாமல் இருந்த நிலையில், கோபி கம்பன் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் சொந்த செலவில் படிக்க வைப்பதாக கூறி அழைத்துச் சென்றனர்.சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன். பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது. எனது தந்தை மனோகர், இருதய நோயால் பாதிக்கப் பட்டு, மருத்துவத்துக்கு வழியில்லாமல் கடந்த 10 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

பிளஸ் 1 படிக்கும் தம்பி மோகன், குறைந்த சம்பாத்தியம் உள்ள தாய் என இருந்த எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக எனது தாயின் சகோதரர் ஜோதிராமன் உள்ளார். அவர் வீட்டில் தற்போது வசிக்கிறோம். அப்பாவும் இறந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்ற சம்பாதித்தாக வேண்டும் என்ற நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறேன்.தமிழ் பாடத்தில் 189, ஆங்கிலத்தில் 179, இயற்பியல் 199, வேதியியல் 196, கம்ப்யூட்டர் சயின்ஸ் 192, கணித பாடத்தில் 181 என 1,136 மதிப்பெண் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனால், சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தந்தை இல்லை; தொடர்ந்து படிக்க வசதியும் இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது விருப்பம், என்றார்.

இவர் வேலை செய்யும் பனியன் கம்பெனி உரிமையாளர் பிரைம் மோகன்குமார், தன்னால் இயன்ற உதவி அளிப்பதாக கூறியுள்ளார். உதவும் எண்ணம் உள்ள இதயங்கள், தொடர்பு கொள்ள 93442 - 00281.

நன்றி: Dinamalar.com
//என்னால் முடிந்த உதவியை செய்து விட்டு உங்களுடன் மீண்டும் பகிர்கிறேன் - ஆதிமனிதன்//

share on:facebook

Friday, May 6, 2011

தமிழன் ஏங்கும் இலவசம்


நம்ம ஊர்ல கவுன்சிலரே ஏன் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் கூட டாட்டா சுமோவில் போகிறார் என்றால் அந்த பணம் வசதி எல்லாம் எங்கே இருந்து வந்தது. எல்லாம் நாம் கட்டும் வரிப்பணத்தில் ஊழல் செய்தும் நாம் கொடுக்கும் லஞ்ச பணமும் தான். அதனால் தான் வருவாய் இன்றி தவிக்கும் மாநகராட்சிகளும் பஞ்சாயத்து போர்டுகளும் தரமான கல்வியை கொடுக்க வசதிகள் இன்றி தவிக்கின்றன.

அமெரிக்காவில் பப்ளிக் ஸ்கூல் என்று சொல்லக்கூடிய அரசு பள்ளிகள் பெரும்பாலும் உலகத்தரத்தில் இருக்கும். அங்கு நூலகமோ, உணவகமோ  கம்ப்யூட்டர் வசதிகளோ இல்லாத பள்ளிகளே இல்லை எனலாம். இதே வசதிகளை  நம் நகராட்சிகளும் செய்து தர நம் நாடு ஒன்றும் பணக்கார நாடாய் இருக்க  வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் ஒழுங்காக வரி  கட்டி  அதை ஊழலின்றி  முறையாக செலவு  செய்தாலே குறைந்தது  சென்னை போன்ற பெரு நகரங்களில் நல்ல  கல்வியை அரசு வழங்கலாம்.  குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவன  ஊழியர்கள் கட்டும் ப்ரோபசனல்  டாக்ஸ் போன்றவை அங்குள்ள நகராட்சிகளுக்கு தான் போகின்றன.

இங்குள்ள பப்ளிக் ஸ்கூல்கள் நல்லபடியாக இயங்குவதற்கு காரணம், அந்தஸ்து வசதி நிலைகள் தாண்டி ஒரு குறிப்பிட்ட நகரத்தில் வசிக்கும்  மக்கள் அனைவரின் குழந்தைகளும் அங்குள்ள அரசு பள்ளிகளிலேயே  படிப்பதுதான். இங்கு தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள் மிகவும் குறைவு(வசதி இருந்தும் கூட).

அமெரிக்காவில் உள்ள எந்த நகரமாகினும் அங்குள்ள கம்யுனிட்டி என்று  சொல்லப்படுகின்ற அங்குள்ள லோக்கல் மக்களின் எல்லா குழந்தைகளும்  அருகில் உள்ள பப்ளிக் ஸ்கூலில் படிப்பதால் அவர்கள் கட்டும் வரிகள்  எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை அவர்களே நிர்ணயிப்பது  மட்டுமில்லாமல் அதை முறையாக கண்காணிக்கவும் செய்கிறார்கள். 

தெரியாதவர்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும். அவ்வளவு வசதிகள்  வழங்கியும் அமெரிக்க பப்ளிக் ஸ்கூலில் எங்கும் கட்டணம் என்று ஒரு டாலர் கூட வசூலிப்பதில்லை.  விண்ணப்பபடிவத்திற்கு கூட. 

புத்தககங்கள் எழுதுவதற்கு நோட்டு  (பெரும்பாலும்) கூட பள்ளிகளிலேயே  வழங்குகிறார்கள். அந்த வகையில்  ஒரு சென்ட்(பைசா) கூட  செலவழிக்காமல் ஒரு குழந்தைக்கு  12 ஆண்டுகள்  தரமான கல்வியை கொடுக்க முடிகிறதென்றால் அதை விட ஒரு  பெரிய சுமை குறைவு   பெற்றோர்களுக்கு வேறு எதுவாக இருக்க முடியும். இந்தியாவில் சாதாரண பள்ளிகளுக்கு கூட வருடத்திற்கு  அரை லட்சத்தை கட்டணமாக  கட்ட வேண்டிய சூழ்நிலையில் பொழைக்க வந்த  இடத்தில் பள்ளி கல்வி  செலவை அறவே இல்லாத சூழ்நிலையை தந்திருக்கும்  அமெரிக்க அரசுக்கும்  அவர்களின் முறையான உள்ளூர் சட்ட திட்டங்களுக்கும் ஒரு சல்யூட்.        

நமக்கு தற்போது கிடைத்து வரும் ஆடம்பர இலவசங்களும், வோட்டுக்கு நோட்டு கலாச்சாரமும் நிற்கும் வரை தரமான கல்வி போன்ற அத்தியாச இலவசங்கள் நமக்கு கிடைப்பது சிரமமே.

 

share on:facebook

Thursday, May 5, 2011

ஹீரோ - வில்லன் - டைரக்டர் காமெடி கூட்டணி.


சே, தேர்தல் முடிந்தாலும் இந்த "கூட்டணி" ஞாபகம் வந்து தொலைக்கிறது. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த காமெடி...

என்னதான் காமெடியாக தெரிந்தாலும், ஹீரோ வில்லன் சான்ஸ் கேட்டு வரும் இருவரின் முகத்திலும் தெரியும் தன்னம்பிக்கையும், அதற்காக அவர்கள் தங்களையே மறந்தவர்களாக தங்கள் கனவு கதாபாத்திரமாக மாறிவிட்ட அவர்களின் விடா முயற்சியும் என்னால் காமெடியையும்  தாண்டி இதை ஒரு தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக தான்  பார்க்க முடிகிறது.




share on:facebook