Monday, January 30, 2012

கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.


அமெரிக்காவில் உங்களை மிகவும் கவர்ந்த மூன்று விஷயங்கள் எது என்று என்னிடம் கேட்டால் அதில் அங்குள்ள சுத்தம், கண்ணியம், கட்டுமான வசதி இவற்றை விட அமெரிக்க போலீஸ் துறையும் அமெரிக்க போலீசாருமே என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்வேன்.அமெரிக்க போலீசாருக்கு பன்முக பயிற்சி அளிக்கப் படுவதுடன், அவர்களின் உடல் மற்றும் மன தகுதிகள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு அதற்கு தங்குந்தவாறு அவர்களுக்கு பணி ஒதுக்கப் படுகிறது. 

பொதுவாக பணியில் இருக்கும் போது அவர்கள் ஷாப்பிங் போன்றவற்றில்  ஈடு பட மாட்டார்கள். அப்படியே ஓட்டல் மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோருக்கு  வந்தால் கூட வரிசையில் தான் வருவார்கள். இந்த ஐயா வறாரு, ஐயாவுக்கு  மொதல கொடுத்து அனுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மட்டுமின்றி  பொது இடங்களில் அவர்களை பார்த்தால் பள்ளி கூட குழந்தைகள் கடைக்கு சென்றால் தயங்கி நிற்பதை போல் தயங்கி வெட்கத்துடன் தான் நிற்பார்கள். தாங்கள் போலீஸ் என்பதால் பொது மக்கள் தங்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து விடுவார்களோ அல்லது அவர்களுக்கு தங்களால் ஏதும் தர்மசங்கடம் ஏற்பட்டு விடுமோ என்பதுதான் அவர்களின் தயக்கத்திற்கு காரணம் என்பது  நான் புரிந்து வைத்துள்ளது.

அதே போல் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் படுகிறது. குழந்தை வதை  புகாருக்கும், போதை பொருள் பற்றிய புகாருக்கும் அவர்கள் எவ்வாறு  வித்தியாசமாக அணுக வேண்டும் என்று சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எப்படி பட்ட குற்றசாட்டாக இருந்தாலும் குற்றம் சட்டப்பட்டவர்  போலீசாருடன் ஒத்துழைத்தால் அவர்கள் மேல் விரலை கூட வைக்க  மாட்டார்கள். டிராபிக் வயலேஷன் போன்ற குற்ற சாட்டுகளுக்கு அபராதம்  போட்டு விட்டு "டிக்கெட்" கொடுக்கும் போது "Have a nice day" என்று கூற மறக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், விசாரணையின் போது, குற்றம்  சாட்டப் பட்டவர் போலீசிடம் சிகரட்டோ அல்லது காபியோ கேட்டு வாங்கி  குடிப்பார்கள். அதே போல் இங்கு போலீசாரிடம் பொது மக்கள் தாங்களே  வழிய போய் தான் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் கோர்டில் வந்து சாட்சி  சொல்ல தயார் என்றும் கூறுவதை பார்த்திருக்கிறேன்.     

லஞ்சம். அப்படி என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியாது. அப்படியே நீங்கள் தர முயன்றால் உங்களுக்கு உடனே "காப்பு" தான். ஒருவரை விசாரிக்க செல்லும் முன் எப்போதும் அவர்களிடம் உள்ள "ரெக்கார்டரை"  ஆன் செய்து விட்டு தான் பேச ஆரம்பிப்பார்கள். அது  மட்டுமில்லாமல், இங்கு போலீசாரிடம் பொய் சொல்வது மிக பெரிய குற்றம். அதே போல் இங்கு போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தையும் நீங்கள் நீதி மன்றத்தில்  மாற்றவோ மறுக்கவோ முடியாது. 

உடலில் குண்டு துளைக்காத உடை அணியாமல் பணிக்கு இவர்கள் செல்லுவது கிடையாது. அதே போல் நடந்து செல்லும் போதும், விசாரித்துக் கொண்டிருக்கும் போதும் அடிக்கடி தாங்கள் ரிவால்வரை தொட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு எப்போதும் முன்ஜாக்கிரதையுடன் செயல்படுவார்கள். போலீசாரின் உயிர் அமெரிக்க அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது. அவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் யாரையும் முன்  அனுமதி கேட்க வேண்டியதில்லை. டப் டப் டப் தான். அதே போல் ஒரு  போலீசாருக்கு காயம் ஏற்படுத்துவது என்பது, இமாலய குற்றம்.   

இப்போது சொல்லுங்கள். அமெரிக்க போலீஸ் நம் மனதை கொள்ளை கொள்கிறார்களா இல்லையா?

இன்னும் வரும்...

அமெரிக்க போலீஸ் பற்றிய மற்ற பதிவுகள்: 

911 - அமெரிக்காவின் மூன்றெழுத்து மந்திரம்.

இதுதாண்டா போலீஸ்...

share on:facebook

8 comments:

Sankar Gurusamy said...

நம்ம நாட்டில் இப்படியெல்லாம் இருந்தால் நன்றாகவே இருக்கும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

கிரி said...

சுவாரசியமாக இருக்கிறது.. அதே போல பொறாமையாகவும் இருக்கிறது அங்குள்ள சிஸ்டம் நினைத்து.

கோவை நேரம் said...

நல்ல வேளை...நம்ம நாட்டு போலிஸ் இப்படி இல்லை ......

Avargal Unmaigal said...

//பொதுவாக பணியில் இருக்கும் போது அவர்கள் ஷாப்பிங் போன்றவற்றில் ஈடு பட மாட்டார்கள்//

நீங்கள் அமெரிக்க போலீஸை அளவுக்கு அதிகமாக புகழ்வது போலிருக்கிறது அல்லது நீங்க அமெரிக்கவிற்கு புது ஆளாக இருக்க வேண்டும். நான் வேலை செய்யும் இடத்திற்கு அவர்கள் யூனிபார்மிலேயே வந்து எங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உண்டா என்று அதிகாரமாக கேட்பவர்களை நான் பலமுறை கண்டதுண்டு ஒரு வேளை நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் நீங்கள் சொன்னபடி இருக்கலாம் ஆனால் நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் அப்படி கிடையாது என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்

ஆதி மனிதன் said...

நன்றி சங்கர்.

நன்றி கிரி: பொறமை மட்டும் தான் பட முடியும் நம்மால்!

ஆதி மனிதன் said...

நன்றி கோவை நேரம்: // நல்ல வேளை...நம்ம நாட்டு போலிஸ் இப்படி இல்லை ......//

நீங்க எத சொல்றீங்க?

ஆதி மனிதன் said...

நன்றி அவர்கள் உண்மைகள்: நீங்கள் கூறிய எல்லாவற்றையும் மறுப்பதாக நினைக்க வேண்டாம். எனக்கு தெரிந்து இங்குள்ள போலீசார் அதிகார தோரணையில் அதுவும் பொது மக்களிடமோ/கடைகளிலோ பேசி நான் பார்த்தது கிடையாது. கெட்டவர்களே இங்கு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் மிகவும் குறைந்த சதவிகிதமே.

பி.கு. நீண்ட நாட்களாக நான் அமெரிக்காவில் இருக்கிறேன். நியூ ஜெர்சியிலும் இருந்திருக்கிறேன்.

Anonymous said...

I live in the US for 20 years. I agree with aathi manithan.

Post a Comment