முல்லை பெரியாறு பிரச்சனையையோ, கூடங்குளம் அணு உலை சிக்கலையோ தீர்த்து வைக்கும் இடத்தில் நாம் இல்லை. ஆனால், நிச்சயம் கீழ் கண்டவற்றில் சிலவற்றை நம்மால் நிச்சயம் நிறை வேற்ற முடியும். 2012 இல் அதை முயற்சிப்போமே...
# பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.
# ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதை தவிர்க்கலாம்.
# இரவு நேரங்களில் காரில் வெகு தூர பயணங்களை (self driving) தவிர்க்கலாம்.
# மாதம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்கலாம்/வாசிக்கலாம்.
# ரோட்டில் போகும் போதும், வரும் போதும் குப்பைகளை எறிவதை தவிர்க்கலாம்.
# வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு ஏழை குழந்தையின் படிப்பிற்கு முடிந்ததை உதவலாம்.
# பெற்றோர்களை விட்டு வெளி ஊர்களில் வாழ்பவர்கள் அவர்களுக்கு பணம் அனுப்புவதை மட்டும் கடமை என எண்ணி விடாமல் அவ்வப்போது சென்று அவர்களுடன் ஓரிரு நாட்கள் தங்கி இருந்து கவனித்துக் கொள்ளலாம்.
# குழந்தைகளுக்கு உடற் பயிற்சியாக அமையக்கூடிய பழைய விளையாட்டுக்களை சொல்லிக் கொடுக்கலாம்.
# நாமும் தினமும் ஒரு முறையாவது ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் உடற் பயிற்சி/நடை பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளலாம்.
# சேமிப்பு. இதுவும் அவசியம். அதே நேரத்தில், வாய்ப்பும் வசதியும் இருந்தால் நாலு இடங்களுக்கு சென்று வருவது மனதையும் அறிவையும் விசாலமாக்கும். முயற்சிக்கலாமே.
share on:facebook
3 comments:
நல்ல விஷயங்களா சொல்லிருக்கீங்க. நல்லது நன்றி
உண்மை. பெற்றோர்கள் பற்றிச் சொல்லியிருப்பது வதைக்கிறது.. ஹ்ம்ம்ம்.
(அது சரி.. பிரச்னை இருக்குற இடத்துல இருந்தா தீர்த்து வச்சுருவீங்களா? :)
சிறப்பான சிந்தனைகள்.. முயற்சித்தால் நிச்சயம் முடியும்.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
Post a Comment