Thursday, April 28, 2011

911 - அமெரிக்காவின் மூன்றெழுத்து மந்திரம்.


911 :

அமெரிக்காவில் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு முதல் நாள் டாடி  மம்மி சொல்லி கொடுக்கிறார்களோ இல்லையோ அவசர உதவிக்கு 911 எப்படி கால் பண்ண வேண்டும் என தொலை பேசி வடிவத்தில் உள்ள எண்களில் 9 1  1 எண்களை மட்டும் வட்டம் போட்டு காண்பித்து  விடுவார்கள். அந்த அளவிற்கு அவசர உதவி இங்கு தேவைப்படுவது மட்டுமில்லாமல் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது.

911 - ஒரு முறை நீங்கள் அழைத்து விட்டால் போதும். அமெரிக்காவின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் உங்களுக்கு  அடுத்த சில நிமிடங்களில் உதவி வந்து சேர்ந்து விடும். உதவி உங்களுக்கு வந்து சேரும் வரையில் ஒருவர் உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு உங்களை வழி நடத்திக்கொண்டே இருப்பார். பிரசவ வலி என்றால், குழந்தை பிறக்கும் நேரம் என்றால் ஒரு வேலை குழந்தை  பிறந்து விட்டால் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு  அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இங்கு Officers என்று சொல்லக்கூடிய அனைத்து காவல் துறையினர்க்கும் பிரசவம்  பார்ப்பது முதல், அனைத்து விதமான முதல் உதவி பயிற்சிகளும் முறையான  அளிக்கப்பட்டிருக்கும்.

பிரசவ வலி முதல் எந்த ஒரு அவசர தேவைக்கும் நீங்கள் 911  ஐ அழைக்கலாம். உங்கள் தொடர்பு துண்டித்து விட்டால் கூட உங்களை  மீண்டும் அழைத்தோ அல்லது உங்கள் இருப்பிடத்தை தேடியோ (எல்லாம்  சாட்டிலைட்/கம்பூட்டர் உதவி கொண்டு) உங்களை வந்து அடைந்து  விடுவார்கள். நீங்கள் மீண்டும் அழைத்து வேண்டாம் என்று கூறினால் கூட உங்களை நேரில் வந்து பார்த்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து விட்டுத்தான் செல்வார்கள் (நீங்கள் மிரட்டப்பட்டு இருப்பீர்களோ  என்ற சந்தேகத்தில்). அதே  நேரத்தில்  911 தவறாக பயன்படுத்தினால்  சிறை தண்டனை வரை உங்களுக்கு  தண்டனையாக கிடைக்கலாம்.

911 சேவை என்பது பொதுவாக காவல்துறை, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவை என்று அனைத்தும் வரிசையாக வந்து சேரும்(பிரச்சனையை பொறுத்து). 911 வாகனங்கள் சைரனுடன் வந்தால் சாலையில் செல்லும் எல்லா வாகனங்களும் ஓரமாக ஒதுங்கி வண்டியை நிறுத்தி விட வேண்டும். இருபுற சாலைகளில் நடுவே பாதுகாப்பு தடுப்பு இல்லை என்றால் எதிர் புற சாலையில் உள்ள வாகனங்களும் ஒதுங்கி நிற்க வேண்டும். பெரும்பான்மையான நேரங்களில் சாலைகளில்  உள்ள  சிக்னல்களின் கண்ட்ரோல்  911 சேவை வாகன ஒட்டிகளிடமே  இருக்கும்.  சிக்னலை நெருங்கும் முன்பே அதை  சிவப்பாக்கி இவர்கள் மட்டும் சென்றுவிடுவார்கள். அல்லது எதிர்புற சாலையில் செல்ல கூட இவர்களுக்கு உரிமை உண்டு.

911, இதை கூறும்போதே நம்மை அறியாமல் நம்மிடம் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்ளும். காரணம், இங்கு ஒவ்வொரு தடவையும் சாலையில் அவசர உதவி வாகனத்தையோ அல்லது சைரன் போட்டுக்கொண்டு காவல் துறை வாகனங்கள் செல்லும் போதோ வானமே கீழே இறங்கி வந்தாற்போல் எழுப்பப்படும் சைரன் ஒலியும்/ஒளியும் அதற்கு மற்ற வாகனங்கள் மகுடிக்கு பணியும் பம்பை போல் வழி விட்டு ஒதுங்கி நிற்பதும்...அடுத்த முறை நீங்கள் வாகனம் ஓட்டும் போது சைரன் ஒலி கேட்டால் போதும் உங்களை அறியாமல் நீங்களே வண்டியை ஓரம் கட்டி விடுவீர்கள்.


911 சேவை (செய்தி) தொடரும்...

படம் நன்றி: bcffa.org

 

share on:facebook

3 comments:

Madhavan Srinivasagopalan said...

so far I know 9-11 as
9 - september month
11 - 11th day

அமுதா கிருஷ்ணா said...

நிறைய ஆங்கில படங்களில் இந்த எண்ணின் அற்புதத்தை பார்த்து உள்ளேன்.

ananthako said...

அமெரிக்காவில் காவலர்கள் காவல் தெய்வங்கள்.நான் வயதானவன் சாலையைக் கடக்கும் வரை காவலர் ஊர்தி நின்று செல்கிறது. ஏ! கிழட்டு ஜன்மம். வீட்டுல சொல்லிட்டு வந்துட்டாயா?நின்று போ என்ற காவலர் பேச்சைக்கேட்ட எனக்கு ஆச்சரியம். சாலையில் போக்குவரத்தே இல்லை. தேச பக்தி அதிகம். மனிதர்களை மனிதர்களாக நடத்தும் பண்பு.
ananthako.blogspot.com.tamil
anandagomu.blogspot.com hindi.

Post a Comment