Tuesday, January 17, 2012

கேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை?

சமீபத்தில் இத்தாலி அருகே கடலில் மூழ்கிய சொகுசு கப்பலின் காப்டன் பிரான்செஸ்கோ வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார். அவர் மீது கப்பல் பயணிகளை காப்பாற்றாமல் கப்பலை விட்டு வெளியேறியது, பலர் இறக்க  காரணமானது என கடுமையான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளது.

கடந்த வாரம் விபத்துக்கு உள்ளான சொகுசு கப்பலின் காப்டன் கப்பலில் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக கப்பலிலிருந்து வெளியேற்ற படுவதற்கு முன் கப்பலின் காப்டன் என்ற முறையில் கப்பலை விட்டு வெளியேறி விட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தாலிய சட்டப்படி இக்குற்றத்திற்கு 11 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விபத்து பற்றி முதலில் செய்தி அறிந்த இத்தாலிய காவல் துறை கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்ததும், கடலோர காவல் படை கப்பலின் காப்டனை தொடர்பு கொண்டு பயணிகளின் பாத்து காப்பு பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், காப்டன் பிரான்செஸ்கோ அவர்களுக்கு முறையான பதில் அளிக்காமல் எல்லா பயணிகளும் பத்திரமாக வெளியேறும் வரை கப்பலை விட்டு வெளியேறக் கூடாது என்ற காவல் படையின் உத்தரவையும் மீறி பயணிகள் அனைவரையும் தண்ணீரில் தத்தளிக்க விட்டு அவர் மட்டும் கப்பலை விட்டு வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

காப்டன் பிரான்செஸ்கோவுக்கும் காவல் படைக்கும் இடையே நடந்த  உரையாடல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் காப்டன் பிரான்செஸ்கோவை உடனடியாக கப்பலுக்குள் சென்று அங்கு மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள், சிறியவர்கள் வயதானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரிவிக்குமாறு கேட்டதற்கு அவர், இங்கு ஒரே இருட்டாக இருக்கிறது. ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் வெளியே போகிறேன் என்று கூறி இருக்கிறார். அதற்க்கு காவல் படை அதிகாரி, நீங்கள் இப்போ வெளியே போய் உங்கள் வீட்டுக்கா போக போகிறீர்கள்?  உடனடியாக நீங்கள் கப்பலுக்குள் சென்று அங்குள்ள பயணிகளை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் வெளியே வந்தாலும் நாங்கள்  உங்களை உள்ள தள்ள வேண்டி இருக்கும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.  

இக்கப்பலில் பயணித்த 4200 பேரில் பெரும்பாலானோர் சிறு படகுகள் மூலமும், மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் காப்பாற்ற பட்டு உள்ளனர். இருப்பினும் இன்னும் 50 பேருக்கு மேல் காணவில்லை. 11 பேரின் உடல்கள் இதுவரை கடலில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. டைடானிக்  கப்பல் விபத்துக்குள்ளானது போலவே இச் சோகச் சம்பவமும் நடை பெற்று உள்ளது. 

பொதுவாக இவ்வாறு சொகுசு பயணம் போகும் பல மேலை நாட்டவர்களை  இவ்விபத்து பெரிதும் கிலியை கிளப்பி உள்ளது. இம்ம், இவ்விபத்தையும் அதில் பலியானோர் எண்ணிக்கையையும் நம்மூரில் ஏற்பட்ட விபத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இங்கு இழப்பு மிகவும் குறைவே. இருந்தும் விபத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனையை பொறுத்தே மீண்டும் அம்மாதிரி விபத்து எதிர் காலத்தில் நேராவண்ணம் தடுக்க இயலும் என்பதை இத்தாலி போன்ற அரசுகள்  நன்றாக அறிந்து வைத்துள்ளன என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

share on:facebook

8 comments:

Madhavan Srinivasagopalan said...

// இவ்விபத்தையும் அதில் பலியானோர் எண்ணிக்கையையும் நம்மூரில் ஏற்பட்ட விபத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இங்கு இழப்பு மிகவும் குறைவே. இருந்தும் விபத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனையை பொறுத்தே மீண்டும் அம்மாதிரி விபத்து எதிர் காலத்தில் நேராவண்ணம் தடுக்க இயலும் என்பதை இத்தாலி போன்ற அரசுகள் நன்றாக அறிந்து வைத்துள்ளன என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. //

Rightly pointed out.

மோகன் குமார் said...

நல்லா வைக்கிறீங்கையா தலைப்பு :))

சகாதேவன் said...

//கேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை?//
தலைப்பைப் பார்த்ததும் தமிழ்நாட்டில் இப்போ என்னென்னமோ நடக்குது.
கேப்டன் (விஜயகாந்த்) மீது என்ன நடவடிக்கை? என்ன ஆச்சு என்று பயம் வந்தது.
//விபத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனையை பொறுத்தே மீண்டும் அம்மாதிரி விபத்து எதிர் காலத்தில் நேராவண்ணம் தடுக்க இயலும்//
இத்தாலி அரசின் முடிவு பற்றிய நல்ல தகவல்.

சகாதேவன் said...

//கேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை?//
தலைப்பைப் பார்த்ததும் தமிழ்நாட்டில் இப்போ என்னென்னமோ நடக்குது.
கேப்டன் (விஜயகாந்த்) மீது என்ன நடவடிக்கை? என்ன ஆச்சு என்று பயம் வந்தது.
//விபத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனையை பொறுத்தே மீண்டும் அம்மாதிரி விபத்து எதிர் காலத்தில் நேராவண்ணம் தடுக்க இயலும்//
இத்தாலி அரசின் முடிவு பற்றிய நல்ல தகவல்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவம் கேப்டன், அவருபாட்டுக்கு அவரு உண்டு சரக்கு உண்டுன்னு இருக்காரு, அவர ஏனுங்க வம்புக்கு இழுக்குறீங்க?

ஆதி மனிதன் said...

நன்றி மாதவன். ஆமா, எப்ப டெரர் கும்மி விருதுகள் அறிவிக்க போகிறீர்கள்?

நன்றி மோகன். //நல்லா வைக்கிறீங்கையா தலைப்பு :)) //

அப்படியும் பெரிசா ஒன்னும் போணி ஆகல!

ஆதி மனிதன் said...

சகாதேவன் said... //கேப்டன் (விஜயகாந்த்) மீது என்ன நடவடிக்கை? என்ன ஆச்சு என்று பயம் வந்தது//

விஜயகாந்த் ரசிகரோ?

ஆதி மனிதன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... //பாவம் கேப்டன், அவருபாட்டுக்கு அவரு உண்டு சரக்கு உண்டுன்னு இருக்காரு,//

தண்ணீல மூழ்கிட்டா எப்பவுமே பிரச்சனைதான்.

Post a Comment