நான் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறேன் (குறுகிய மற்றும் நீண்ட காலம் அங்கு தனியாகவும்/குடும்பத்துடன் வாழ்ந்தும் இருக்கிறேன்). அங்கு நான் கண்ட அதிசயங்களை! ஒரு பதிவாக போட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அமெரிக்காவை பற்றி பலர் தவறான கருத்தை கொண்டிருப்பது எனக்கு தெரியும். அதில் சில உண்மைகளும் உண்டு. என்னை பொறுத்தவரையில் உலகில் எல்லா இடத்திலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. நல்லவைகளை முதலில் பார்ப்போமே?
அதிசயம் - I.
1. போக்குவரத்து/வாகன ஓட்டும் முறைகள்:
உலகத்தில் எனக்கு தெரிந்து லஞ்சமே வாங்காத போலிஸ் என்றால் அது அமெரிக்காவில்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒருவேளை யாராவது ஒருத்தர் அப்படி லஞ்சம் வாங்கினால் அது லட்சத்தில் ஒருவராக இருந்தாலே அது அதிசயம் தான். அதுபோல் இங்கு போக்குவரத்து/சட்டம் ஒழுங்கு என காவலர்களை பிரிப்பதில்லை. எல்லோருமே COPS தான். அவரே திருடனையும் பிடிப்பார். அவரே போக்குவரத்து பிரச்சனைகளையும் கையாள்வார்.
2. வாகனம் ஓட்டுனர் உரிமை:
நம்ம ஊரில் பத்தாவது பாஸ் பண்ணுவது எப்படி முக்கியமோ அது போல் அமெரிக்காவில் 18 வயது ஆனவுடன் ஓட்டுனர் உரிமை (License) எடுப்பது என்பது மிக முக்கியமான ஒன்று ஆகும். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இங்கு யாரும் யாரையும் சார்ந்து (depend) ஆகி வாழ முடியாது. மாணவர்கள் பொதுவாக வெளி ஊர்/வெளி மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் சேரும் போது அவர்களுக்கு கார் ஓட்ட தெரிவது நிச்சயம் தேவையான ஒன்று.
3.Department of Motor vehicles(DMV = நம்மூர் RTO office):
அடுத்து ஓட்டுனர் உரிமை (License) பெறும் நடைமுறை. நம்மூர் போல் இங்கு காசு கொடுத்தால் RTO அலுவலகம் போகாமலே ஓட்டுனர் உரிமை பெற்று விட முடியாது. முறையாக ஓட்டுனர் பயிற்சி புத்தகத்தை (Driver's handbook) படிக்காமல் எழுத்து தேர்வு எழுத சென்றால் பத்து வருடம் அமெரிக்காவில் கார் ஓட்டியவர் கூட தோல்வி அடைய வாய்ப்புண்டு. முதலில் எழுத்து தேர்வில் தேர்வாகிவிட்டால் பின் வாகனம் ஓடும் தேர்வு (road test) நடைபெறும். இங்கும் முறையாக RTO பக்கத்தில் உட்கார்ந்து இருக்க அவர் எதிர்பார்ப்பதுபோல் முறையாகவும் பாதுகாப்பாகவும் வண்டியை ஒட்டி காண்பித்தால் மட்டுமே நீங்கள் தேர்வு பெற முடியும். இல்லையென்றால் நீங்கள் ஒபாமாவின் மகளாக இருந்தால் கூட வாழ்க்கையில் லைசென்சே எடுக்கமுடியாது.
4. சாலை விதிகள்:
சாலை விதிகளை கடைபிடிப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள உலகில் யாரும் இல்லை. இந்தியாவில் சைக்கிள் ஓட்ட தெரியாதவர்கள் கூட இங்கு கார் ஓட்ட முடியும். கார் ஓட்டுவது இங்கு அவ்வளவு எளிது. அதே சமயம் சாலை விதிகளை ஒருவர் கடை பிடிக்கவில்லை என்றாலும் மிகப் பெரிய விபத்துக்கள் நடக்க வாய்ப்புண்டு.
ஒரு சிறிய எடுத்துக்காட்டு:
நாலு ரோடுகள் சந்திக்கும் சாலையில் சிக்னல் இல்லையென்றால் நான்கு புறமும் STOP சைன் போர்டுகள் இருக்கும். யாராக இருந்தாலும் அந்த போர்டுக்கு முன்னாள் வாகனத்தை கண்டிப்பாக நிறுத்தி தான் பிறகு செல்ல வேண்டும். யார் முதலில் வந்தார்களோ (எந்த பக்கமாக இருந்தாலும்) அவர்கள் தான் (first come first go) முதலில் சாலையை கடக்கலாம். இரவு பன்னிரண்டு மணிக்கு ஆள் அரவமே இல்லையென்றாலும் இந்த மாதிரி ஒரு சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு தான் பிறகு எடுப்பார்கள்.
5. அவசர கால சேவை:
அடுத்து அவசர கால சேவை வண்டிகள்: இங்கு ambulance சேவை பாராட்டத்தக்க ஒன்று. நீங்கள் போனை எடுத்து அவசர அழைப்பு என்னை 911 அழுத்தினால் போதும். போன் மூலமாக 5 வயது சிறுவன் கூட அம்மாவுக்கு பிரசவம் பார்க்கும் அளவுக்கு அவனுக்கு உயிர் காக்கும் வழிமுறைகளை கூட கூறிக்கொண்டே அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வீட்டுக்கு முன் ஆம்புலன்சை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அதே போல் ஒரு ஆம்புலன்ஸ் ரோட்டில் சைரன் அடித்துக்கொண்டு போனால் யாராக இருந்தாலும் அதற்க்கு வழி விட வேண்டும். இல்லை என்றல் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும். நம்மூர் மாதிரி யானை கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட கோழிக்குஞ்சு போல மற்ற வாகனங்களிடம்
வழி கேட்டு கெஞ்சாது.
நல்லவைகள் தொடரும்...
share on:facebook
7 comments:
ஆதி aka ... நானே ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்றும் என்று நினைப்பேன். Yield on கிரீன் உட்பட - எவ்வளவு அற்புதமான கான்செப்ட் அது. ஆனாலும் இங்கே சொதப்பல் கொஞ்சம் இருக்கு. அல்லது நம்மை 25 Miles, ஸ்பீடில் நேக்கி தள்ளும் கயவர்கள் என்று.
நீங்கள் எழுதிய சிலவற்றுக்கு இந்திய முறையை எழுதினால் காமெடி படம் வேண்டாம் !
Welcome back Aadhi..
//நாலு ரோடுகள் சந்திக்கும் சாலையில் சிக்னல் இல்லையென்றால் நான்கு புறமும் STOP சைன் போர்டுகள் இருக்கும். //
Wondering is really such a 'signal-less' junction..!
நல்லவற்றைக் கற்றுக் கொண்டு நாமும் மாறவேண்டும். அருமையான பதிவு.
WE CAN CHANGE AMERICANS AS GOOD HUMAN EASILY.... cant our indians like that....
Madhavan
There is even 3-way and 2-way stopping. You got to see it working. Even with good car flow, it works like a machine and it is as Aadhi wrote first in first out (or go)
I remember getting out my car and shouting at someone near Ashok pillar to 100 feet road near old Pallava Hospital / Jawahar Vidyalaya junction for some one who was just honking when it was not free left.
They respect rules and life - most of the time!
வந்து கருத்து சொன்ன மக்க எல்லோருக்கும் என் நன்றி.
வழக்கம் போல நேரமில்லைன்னு சொல்ல புடிக்கல.
முடிஞ்சவரைக்கும் தலைய காட்ட முயற்சி செய்கிறேன்.
Post a Comment