Saturday, January 7, 2012

அரசு மருத்துவமனைகள் லஞ்சம் அற்ற பகுதிகள் - அறிவிக்க தயாரா?


சமீபத்தில் தூத்துக்குடியில் ஒரு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததே. அதை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது. இழப்பு எல்லோருக்கும் ஒன்று தான். அதே சமயம் அதை கண்டித்து மாநிலம் முழுதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டமும் பேச்சுக்களும் தான் கண்டிக்கதக்கது ஆகும்.

நாட்டில் கொலை கொள்ளைகளே  நடப்பதில்லையா? இதே ஒரு போலீஸ்காரர் பணியில் கொலை செய்யப்பட்டால் எல்லா போலீசாரும் போராட்டத்தில் இறங்க முடியுமா. டாக்டர் தொழில் ஒன்றும் அப்படி உயிருக்கு பாத்துகாப்பு அற்ற தொழில் அல்லவே?

அப்படியே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அடையாள வேலை நிறுத்தமோ மாநிலம் முழுதும் ஒரு அமைதி பேரணியோ நடத்தி இருக்கலாம். அதற்காக ஒரு நாள் முழுக்க நாங்கள் வேலை பார்க்க மாட்டோம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய மாட்டோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. இதில் இவர்கள் எல்லாம் மெத்த படித்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

கோயம்பேடு காய் கறி மார்க்கெட் வியாபாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் அதிக பட்சம் அங்கு உள்ள காய்கறிகள் அழுகி போகும். அல்லது தமிழக மக்கள் ஒரு நாள் சாம்பார் ரசம் செய்ய முடியாமல் வெறும் தயிறு ஊற்றி சாப்பிடும் நிலைமை வரலாம். ஆனால் மருத்துவர்கள் தொழில் அப்படி இல்லையே. நகரத்தை விடுங்கள். கிராம புறங்களில் பத்து கிலோ மீட்டர் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவ மனைகளை நம்பி வந்து எத்தனை நோயாளிகள் அன்று ஒரு நாள் மருத்துவர்கள் இன்றி சிரமத்துக்கு ஆளானார்கள்.

இதில் மருத்துவர்கள் நல அமைப்பின் மாநில தலைவர் ஒருவர் "நாங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முடியும்" என வீராப்பு பேச்சு வேறு. கொலைகாரனுக்கும் சிகிர்ச்சை அளிக்க வேண்டிய உன்னத கடமை உள்ள மருத்துவர்களின் பேச்சை பாருங்கள்.

கடைசியாக ஒன்று. மருத்துவ மனைகள் அனைத்தும் பாத்து காக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறீர்களே? அதே போல் அரசு மருத்துவ மனைகள் அனைத்தும் லஞ்சம் அற்ற பகுதிகளாக அறிவிக்க முடியுமா உங்களால்? குழந்தை ஆனா பெண்ணா என சொல்வதிலிருந்து, பெற்றெடுத்த தாயிடம் குழந்தையை காண்பிப்பதில் தொடங்கி பிரேத பரிசோதனை வரை எல்லாவற்றுக்கும் காசை காண்பிக்காமல் அரசு மருத்துவ மனைகளில் ஒன்றும் நடக்காது. இந்த லட்சணத்தில் வீராப்பு பேச்சு வேறு.

காஷ்மீரிலும், பாக்கிஸ்தான் எல்லையிலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் நாட்டை காக்க எல்லையில் தினமும் ராணுவ பணியில் நம் வீரர்கள் உள்ளார்களே. அவர்களுக்கு தான் அரசு உத்திரவாதம் தர வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் புல்லட் புரூப் ஜாக்கெட் முதல் தரமானவை என்று. அவர்களை எல்லாம் வந்து உங்களுக்கு காவல் வைக்க முடியாது.

திருந்துங்கள் மருத்துவர்களே.    

share on:facebook

6 comments:

யாழ்.பாஸ்கரன் said...

திருந்துங்கள் மருத்துவர்களே ??????????

Madhavan Srinivasagopalan said...

நீங்களாவது and/or நீங்களும்.. திருந்துங்கள் மருத்துவர்களே ??????????

Anonymous said...

சென்னை நகரில் இருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷிலிஷ்ட் மருத்துவரும் ரூபாய் 300 முதல் ரூபாய் 400 வரை
கன்சல்டேஷன் பீஸ் வாங்குகிறார்கள்.

ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்சம் 30 முதல் 50 நபர்களைப்பார்க்கிறார்கள். ஒரு நாள் வரவு ரூபாய் 100000 முதல் 150000 வரை.
மாதம் 25 நாட்கள் மட்டுமே என்று வைத்துக்கொண்டாலும் 2 1/2 முதல் 3 1/2 லட்சம். வருடத்திற்கு 25 முதல் 40 லட்சம்
எந்த அளவுக்கு இன்கம் டாக்ஸ் கட்டுகிறார்கள் !!

DHANS said...

//ஒரு நாள் முழுக்க நாங்கள் வேலை பார்க்க மாட்டோம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய மாட்டோம் // இது தவறு அவசர சிகிச்சை பிரிவு மற்றுமுள் நோயாளிகள் பிரிவு எப்பவும் போல நடைபெற்றது

//இவர்கள் எல்லாம் மெத்த படித்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.// அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது போராடிய நீங்கள் மெத்த படித்தவர் இல்லையா? , பந்த் அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து தேவையல்லாத பந்தை ஆதரிப்பது மட்டும் மெத்த படித்த நம்மை போல் இருப்பவர்க்கு அழகா?

//அன்று ஒரு நாள் மருத்துவர்கள் இன்றி சிரமத்துக்கு ஆளானார்கள்// சிறிது சிரமத்துக்கு ஆளானர்கள் என்பதால் பேசுகிறீர்கள் அரசாங்க டாக்டர்கள் பணியில் இருக்கும் எல்லோருக்கும் இருக்கும் சிரமத்தை பற்றி ஏன் தெரிந்துகொள்ளக்கூட மறுக்கிறீர்கள்? இருக்கும் மருத்துவர் என்னிக்கையைப்போருத்து வரதுக்கு ஒருமுறையோ அல்லது வாரத்தில் இரண்டு முறையோ தொடர்ந்து இருபத்து நான்கு மணிநேரம் பணிசெய்ய நிர்பந்திப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

//அரசு மருத்துவ மனைகள் அனைத்தும் லஞ்சம் அற்ற பகுதிகளாக அறிவிக்க முடியுமா உங்களால்/அரசு மருத்துதுவமனையில் நீங்கள் என்றாவது மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்து இருக்கீங்களா? இல்லை என்றாவது மருத்துவர் லஞ்சம் வாங்குவதை பார்த்து இருக்கீங்களா? லஞ்சம் வாங்குவது எல்லோரும் stretcher தூக்குவோர், துப்புரவு செய்வோல் , சில சமயம் செவிலியர் மற்றும் உணவு கொடுப்போர். இவர்களை கட்டுபடுத்து அதிகாரம் பனி செய்யும் மருத்துவருக்கு கிடையாது. யாரவது மருத்துவர் பேரை சொல்லி லஞ்சம் கேட்டல் நேரடியாக மருத்துவரை கேளுங்கள் அப்போது உண்மை தெரியும்.

//குழந்தை ஆனா பெண்ணா என சொல்வதிலிருந்து, பெற்றெடுத்த தாயிடம் குழந்தையை காண்பிப்பதில் தொடங்கி பிரேத பரிசோதனை வரை எல்லாவற்றுக்கும் காசை காண்பிக்காமல் அரசு மருத்துவ மனைகளில் ஒன்றும் நடக்காது// இந்த வேலைகள் எல்லாம் மருத்துவர்கள் செய்வது இல்லை, எனக்கு தெரிந்து மருத்துவர்கள் இவ்வாறு செய்து சம்பாதிக்கும் கீழ் நிலைக்கு செல்லவில்லை.

தங்களால் முடிந்தால் ஒரு வாரம் அரசாங்க மருத்துவமனையில் மருத்துவருடன் இருந்து அவர் வேலையை கவனியுங்கள் பின்னர் சொல்லுங்க குறைகளை. விருப்பமிருந்தால் சொல்லவும் நான் ஏற்பாடு செய்கிறேன்.

அரசு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் அனைவருக்கும் உத்திரவாதம் கொடுப்பதுதான் கடமை அதில் ஒரு சாரர் பாதிக்கப்படும்போது அதைக்கேட்பதில் தவறு இல்லை. வெளிநாட்டில் அமர்ந்து கணினியுடன் வேலை செய்யும் நம்மில் பலருக்கு மருத்துவர் என்றால் கொள்ளை அடிப்பவர் என்ற ஒரு நினைப்பு இருக்கிறது அதற்கு காரணம் நான் ஒரு காய்ச்சல் என்றால் உடனே பெரிய மருத்துவமனைக்கோ சென்று உடனே பார்க்க வென்றும் நமதுவீடுக்கு இருக்கில் கிளினிக் இருந்தாலும் கூட. மருத்துவர் திருந்தும் முன்னாமலும் திருந்த வேண்டும்.

ஒரு மருத்துவரி மேற்படிப்பு படித்து முடித்து வந்து சம்பாதிக்க ஆகும் காலம் எவ்வளவு என்று தெரியுமா உங்களுக்கு? இருபத்தி இரண்டு வயதில் முப்பதாயிரம் சம்பாதிக்கும் நாம் மருத்துவர்கள் முப்பதாவது வயதில் தான் அந்த தொகைக்கு அருகில் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். பெட்ரோல் ஏறிவிட்டது, மளிகை ஏறிவிட்டது பிராந்தி சிகரெட் கூட விலை ஏறிவிட்டது ஆனால் உடம்பு சரி இல்லை என்றால் மட்டும்தரமான சிகிச்சை பத்து வருடம் முன் இருந்த அதே தொகைக்கு கிடைக்க வேண்டும்.

அரசாங்க மருத்துவ கல்லூரியிலேயே முதல் வருடம் கட்டணம் ஒரு லட்சத்துக்கும் மேல இதற்க்கு மேல புத்தகம் விடுதி போக்குவரத்து என நிறைய.

DHANS said...

தங்கள் வீட்டில் யாரவது ஒருவரை மருத்துவம் படிக்க வைத்து வாழ்க்கையில் செட்டில் ஆக சொல்லுங்கள் பின்னர் தெரியும்.

DHANS said...

http://www.payanangal.in/ ithil ulla pathivugalai padiyungal.

Post a Comment