Sunday, January 8, 2012

அமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.


பத்து வருடங்களுக்கு முன் முதல் தடவை அமெரிக்கா சென்றிருந்த போது பென்சில்வேனியாவில் உள்ள மிக பெரிய பூங்கா ஒன்றுக்கு எனது அமெரிக்க நண்பருடன் சுற்றி பார்க்க சென்றிருந்தேன். அப்போது புகைப்படம் எடுப்பதற்காக எனது கை பையை அங்கே போட்டிருந்த மேஜை மீது வைத்து விட்டு சற்று எட்டி சென்றேன். அப்போது எனது அமெரிக்க நண்பர் என்னை அழைத்து, என்ன பையை இப்படி வைத்து விட்டு சென்று விட்டாய். யாராவது எடுத்து சென்றால் என்ன செய்வாய் என? அதற்க்கு நான், இது அமெரிக்கா யார் திருட போகிறார்கள் என பதில் அளித்தேன். அதற்க்கு அவர், கெட்டவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் கூட. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்று.

அதன் பிறகும் ஓரளவு தான் நான் அலர்ட் ஆக இருப்பேனே தவிர அமெரிக்கா என்றால் சற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகம் தான் எங்களுக்கு. ஆனால், தற்போது நடந்து வரும் சம்பவங்கள் உண்மையிலேயே எங்களுக்கு பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், என் மகளின் ஸ்கூட்டர் (ஸ்கூட்டர் என்றால் நம்மூர் ஸ்கூட்டர் இல்லை. சிறிய ஹான்ட் பாருடன் கூடிய இரண்டு சக்கரங்கள் உடைய காலால் உந்தி செல்லும் சைக்கிள் போன்ற ஒரு வாகனம்) காணாமல் போய் விட்டது. எங்கள் அப்பார்ட்மென்ட் உள்ளேயே முதல் தளத்தில் உள்ள அவளின் தோழியின் வீட்டுக்கு செல்லும் முன் தரை தளத்தில் வைத்து விட்டு சென்றவள் திரும்பி ஒன்றிரண்டு நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் காணாமல் போய் விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அதன் பின் கடந்த சில மாதங்களாக பகல் வேலைகளிலேயே ஓரிரண்டு வீடுகளில் உள்ளே புகுந்து (பக்க வாட்டு ஜன்னல் கதவுகளை திறந்து கொண்டு) லாப் டாப், நகை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் திருடி சென்று இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தமிழ் பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினார்கள். அப்போது நம் மக்கள் நகை எல்லாம் போட்டுக் கொண்டு அபார்ட்மெண்டை வளைய வந்ததை பார்த்து விட்டோ என்னவோ அப்பெண்ணின் வீட்டிலும் புகுந்து சுமார் 10,000 டாலர் மதிப்புள்ள நகைகளை அபேஸ் செய்து விட்டார்கள்.

போலீசில் புகார் கொடுத்தும் ஒன்றும் பலனில்லை. இங்குதான் சந்தேகப்பட்டால் கூட நம்மூர் பாணியில் ஒருவரை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முடியாதே. அதனால் சந்தேகம் என்று கை காட்டிய நபர்களை கூட சற்று விசாரித்து விட்டு எவிடன்ஸ் இல்லை என்று விட்டு விட்டார்கள்.

இவ்வாறு திருட்டு நடை பெற்ற அனைத்து வீடுகளும் இந்தியர்களுடையது. அதற்க்கு ஒரே காரணம், இந்தியர்கள் என்றால் நகைகள் அதிகம் வைத்திருப்பார்கள் என்றும் அதுவும் 22 காரட் நகைகளாக இருக்கும் (அமெரிக்கர்கள் போடுவதெல்லாம் 12 காரட் 16 காரட் என்று நம்மூர் கவரிங் நகைகள் போல் தான்) என்று திருடர்களுக்கு நன்கு தெரியும். இதில் சுலபமாக திருடிக் கொண்டு போக ஏதுவாக கை அடக்கம் உள்ள மெட்டல் டிடக்டர் கருவி ஒன்றையும் கையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். நாம் எங்கு தான் ஒழித்து வைத்தாலும் ஒன்றும் பிரோஜனமில்லை.

ஆதலால் அமெரிக்கா தானே என இனி அசால்ட்டாக இருந்து விடாதீர்கள் நண்பர்களே. உலகம் மாறிவிட்டது...அமெரிக்காவிலும் ஆட்டையை போட கிளம்பி விட்டார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


share on:facebook

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

உலகம் மாறிவிட்டது...அமெரிக்காவிலும் ஆட்டையை போட கிளம்பி விட்டார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி..

Anonymous said...

பிரிவோம்.. சந்திப்போம் - சிறுகதை http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-post_08.html

துளசி கோபால் said...

கார்பன் பேப்பரில் நகையைச் சுற்றி வீட்டில் ஒளித்து வைத்தால் மெட்டல் டிடெக்ட்டரால் கண்டு பிடிக்க முடியாது என்று தகவல் கிடைத்துள்ளது. அரிசிக்குள் வைக்கிறார்கள் என்று திருடர்களுக்கும் இப்போது தெரிந்து விட்டது. பேசாமல் பேங்க் லாக்கரில் வைப்பது நல்லது.

Post a Comment