தலைப்பை பார்த்து இது ஏதோ புது பிளாக் நேம்னு நினைச்சீங்கனா அது உங்க தப்பு. குப்பைதொட்டி.காம் - சென்னை கார்பரேசன் செய்ய வேண்டிய குப்பை அள்ளும்/பிரிக்கும் வேலையை ஒரு தனியார் நிறுவனம் ஹை டெக்காக செய்து வருகிறது. அதுவும் ஆன்லைனில். குறிப்பாக மக்காத குப்பையான பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்கள் சரியானபடி ரீசைக்ளிங் அல்லது உபயோகப் படுத்த படவில்லை என்றால் அதனால் சுற்றுப்புற சூழலுக்கு கேடு.
சுற்று புற சூழலை பாதுகாக்கும் நோக்கோடும் அதே சமயம் மக்காத குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரித்து அதற்குரிய விலையை கொடுப்பதின் மூலம் வாடிக்கையாளர்களையும் சந்தோசப் படுத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த திரு ஜோசப் ஜெகன் என்பவர். இவர்தான் சிலரோடு சேர்ந்து குப்பை தொட்டி.காம் என்ற ஆன்லைன் சேவையை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
சென்னை வாழ் மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான். முதலில் குப்பைத்தொட்டி.காமில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின் வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து வைத்துக் கொண்டால் மாதத்திற்கு ஒரு முறை குப்பைதொட்டி.காமில் இருந்து உங்களிடம் முன் கூட்டியே அனுமதி வாங்கிக்கொண்டு உங்கள் வீட்டிற்க்கே வந்து உங்கள் குப்பைகளை பெற்றுக் கொள்வார்கள். அதே நேரம் உங்களுக்கு குப்பைக்கான சன்மானமும் கிடைக்கும். குப்பையை பெற்றுக் கொண்டதற்கான ரசீதும் உங்களுக்கு ஈமெயிலிலும் அனுப்புகிறார்கள்.
எல்லோருக்கும் சுற்று புற சூழ்நிலை மேல் அக்கறை இருந்தாலும் இந்த அவசர உலகில் குப்பைகளை தரம் பிரித்து அதை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்க்க எல்லோருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆதலால் தான் இத்திட்டத்தை நாங்கள் தொடங்கினோம் என்கிறார். ஜெகன். ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்ட இந்த ஆன்லைன் சேவையில் இது வரை
500 பேருக்கு மேல் தங்களை பதிவு செய்துள்ளதவும் தெரிவித்துள்ள ஜெகன் அவர்கள், கூடிய விரைவில் பல வன்னங்களினால் ஆன மூடியுடன் கூடிய குப்பை பெட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு தரப் போவதாகவும் இது மக்காத குப்பைகளை தரம் பிரிக்க மேலும் உதவும் எனவும் தெரிவிக்கிறார்.
சென்னை மாநகராட்சியின் குப்பை தொட்டிகளில் மறு மதிப்புள்ள மக்காத குப்பை வகைகள் டன் கணக்கில் கொட்டப் பட்டு வீணாவதை பார்த்ததின் விளைவே இப்படி ஒரு சேவையை ஆரம்பிக்க வேண்டும் என தனக்கு தோன்றியதாக கூறும் திரு. ஜெகன், கூடிய விரைவில் பல மேற்கத்திய நாடுகளை போல் நம் நாடும் குப்பை பராமரிப்பில் சிறந்து விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்.
நீங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டுமா? அப்ப இங்க சொடுக்குங்க.
share on:facebook
5 comments:
இனி சென்னை சிங்காரமாயிடும்னு சொல்லுங்க!
நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.
"கரும்பு தின்னக் கூலியா?" என்பதுபோல குப்பையையும் எடுத்துக்கிட்டு காசும் தருவாங்களா ? இங்க மாசாமாசம் நாங்கள்ள காசும் கொடுத்து குப்பையையும் கொடுக்கறோம் ?
Chennai paththi US -sil irunthu ezhuthureenga. Nadathunga.
What an useful information this is!
Wish every city had some good youngsters like this!
Post a Comment