என்ன மக்களே. எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல போறேன். நம்ம ஊரு விஷயம் இல்லனாலும் பக்கத்து மாநிலத்து விஷயம். நம்ம ஊருக்கும் வரதுக்கு ரொம்ப நாள் ஆகாது. சேதி இது தான்.
ஏதோ ஒரு சினிமாவுல விவேக் கோயில் குருக்களா இருப்பாரு. டூ வீலர்ல போகும் போது ட்ராபிக் போலீஸ் ஒருத்தர் அவர நிறுத்தி லைசன்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என ஒவ்வொன்றாக கேட்க அவரும் ஒவ்வொன்றாக எடுத்து காட்டுவார். எல்லாம் இருந்தும் போலீஸ் அவரை விடாமல், உனக்கு எட்டு போட தெரியுமா? என கேட்டு எட்டு போட சொல்லுவார். நகைச்சுவைக்கா இதை காட்டினாலும் பல இடங்களில் போலீஸ் அந்த அளவிற்கு டூ வீலர் டிரைவர்களுக்கு தொடர்ந்து இம்சை கொடுத்து தான் வருகிறார்கள்.
இந்த கொடுமைக்கெல்லாம் விடிவாக ஹைதிராபாத் காவல் துறை ஒரு புதிய முறையை கொண்டு வந்து உள்ளது. அதாவது "நோ அப்ஜக்சன் சர்டிபிகடே" போல் டூ வீலர்களில் ஒட்டிக்கொள்ளும் மாதிரி ஒரு சிறப்பு ஸ்டிக்கரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்டிக்கரை வண்டியில் கண்ணில் படும் படி ஒட்டிவிட்டால் போதும். அனாவசியமாக லைசன்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என டிராபிக் போலீஸ் உங்களை தடுத்து நிறுத்தாது.
அதே நேரம், ஸ்டிக்கர் இருக்கும் காரணத்தால் அதிக வேகம், குடித்து விட்டு வண்டி ஓட்டுவது போன்ற மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக அவைகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது. ஸ்டிக்கர்கள் வழங்கும் முன் சம்பந்தப்பட்ட டூ வீலர்காரர்களிடம் எல்லா ஆவணங்களையும் பெற்று சரி பார்த்த பிறகு தான் காவல் துறை இச் ஸ்டிக்கர்களை வழங்க உள்ளது. மேலும் டூ வீலர்காரர்களுக்கு வாகன பாதுகாப்பு பற்றி சிறப்பு பயிற்சியும் வழங்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.
இதெல்லாம் சந்தோசமான விஷயம் தான். ஆனால், முக்கியமான ஒன்றை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஸ்டிக்கர் முறையை முதன் முதலாக அமுல் படுத்த போவது ஹைதராபத்தில் உள்ள மிக பெரிய IT பார்க்குகள் நிறைந்துள்ள ஹய் டெக் சிட்டியில் தான். தினமும் IT கம்பனிகளுக்கு செல்லும் டூ வீலர் காரர்கள் வாகன சோதனையில் சிக்குவதால் அவர்கள் வேலைக்கு செல்வது தாமதமாவதால் அதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ம், ஏழை சொல் அம்பலத்தில் ஏறுமா? IT காரர்கள் சொன்னால் எல்லாம் நடக்கிறது.
share on:facebook
3 comments:
சந்தோசமான விஷயம்
வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு நம்ம நாடு பற்றியே யோசிக்கும், எழுதும் நீர் நிஜமாவே ஆதி மனிதன் தான் !
IT மக்களுக்கு மட்டும் இந்த சலுகை என்பது கொஞ்சம் இடிக்க தான் செய்யுது
நன்றி இராஜராஜேஸ்வரி.
நன்றி மோகன். இன்னும் என்னை நீங்க நம்பவில்லை போலிருக்கு.
Post a Comment