Thursday, January 19, 2012

இட்லிவடையும் நானும்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒருவர் இட்லிவடை ப்ளாக் பற்றி சொல்லி படிக்க சொன்னார். அப்போது தான் முதன் முதலில் ப்ளாக் என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியும். அதுவரை செய்தித் தாள்களையும் வார  ஏடுகளை மட்டுமே படித்து படித்து போரடித்த வேளையில் முழு சுதந்திரத்தோடு ப்ளாகில் எழுதப்படும் பதிவுகளை படிக்க ஆரம்பித்தது  சுவாரசியமாக இருந்தது. அதிலும் இட்லிவடையில் அப்போது வந்த பதிவுகள் நக்கலும் கேலியும் நிறைந்ததாக இருக்கும்.

பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் கண்ணில் பட்ட எல்லா பிளாகுகளையும் படித்து வந்தேன். பிளாகுகள் அனைத்திலும் பல்வேறு சுவாரசியங்கள்  உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வகை. பிறகு நாமும் பிளாக் எழுதினால் என்னவென்று தோன்றியது. ஆரம்பத்தில் ஒரு பதிவை எழுதி அதை பத்து  தடவை படித்து பார்த்து மீண்டும் மீண்டும் திருத்தி கடைசியில் வெளியிட  அரை நாள் ஆகிப்போகும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. விஷயம்  இருந்தால் கட கடவென்று எழுதி தள்ளி விட முடிகிறது.

ரொம்ப நாள் இந்த ஹிட் கவுன்ட், ராங்கிங் பற்றியெல்லாம் கவலைப்  பட்டதில்லை(இப்பவும் ஓரளவு அப்படிதான்). இருந்தாலும் எப்படி தலைப்பு வைத்தால் அதிக பேர் படிப்பார்கள் (அல்லது அட்லீஸ்ட் க்ளிக் செய்வார்கள் - அது போதுமே கவுன்ட் எகிற!) என்று ஓரளவு கணிக்க முடிகிறது. என்  பிளாக்கை பொறுத்தவரையில் அமெரிக்க செய்திகள், IT சம்பத்தப் பட்ட செய்திகள் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன.

எனக்கு இன்னும் ஆச்சர்யமான விஷயம் சில பிளாகர்களுக்கு கிடைக்கும்  ஹிட்டும், அவர்கள் பதிவுக்கு போடப்படும் பின்னூட்டங்களும் தான். நமக்கு  ஒரு வாரத்தில்/மாதத்தில் கிடைக்கும் ஹிட்டுகளும், பின்னூட்டங்களும் ஒரு சிலரின் பதிவுகளுக்கு ஒரே நாளில் கிடைத்து விடும். இதற்க்கெல்லாம்  காரணம் ஒன்றும் பெரிசில்லை. கல்யாணத்தில் மொய் வைப்பது போல்தான்.  நாம எவ்வளவு அடுத்த கல்யாணத்திற்கு வைக்கிறமோ அதை வைத்து தான் நமக்கு திரும்ப கிடைக்கும். நான் படிக்கும் பிளாக்குகளை விரல் வைத்து  எண்ணி விடலாம். அப்படியே படித்தாலும் நேரமின்மை காரணமாக தொடர்ந்து  அடுத்தவர் பதிவுகளுக்கு பின்னோட்டம் போட முடியவில்லை.    

இருப்பினும், இப்போது பிளாக் படிப்பதற்கும், பதிவு போடுவதற்கும் தொடர்ந்து நேரம் ஒதுக்குகிறேன். காரணம், நமக்கு மகிழ்ச்சி தரும் சில விசயங்களை நம்மால் பல காரணங்களால் செய்ய முடிவதில்லை. ஆனால் பிளாக் எழுதுவதற்கு நமக்கு தேவை அரை மணியோ ஒரு மணி நேரமோ. அதில் நமக்கு ஒரு திருப்தி கிடைகிறது. இதில் யாருக்கும் எந்த  கஷ்டமும்  இல்லை(ஒரு வேலை நம் பதிவை பற்றி தெரியாமல் படிப்பவர்களுக்கு இருக்கலாம்). அந்த வகையில் பிளாகர்களுக்கு இந்த வசதியை இலவசமாக தரும் கூகுல் ஆண்டவரையும் இன்ன பிற இலவச வலைதளங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

மேலும் ஆதிமனிதன், அடுத்த வீட்டுக்காரன் என எப்படி பெயர் வைத்து எழுதினாலும், பிடிக்குதோ சில  சமயம் பிடிக்கலையோ நம் பதிவுகளை படிக்கும் எண்ணற்ற பதிவர்களுக்கும்  இப்பதிவின் மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

    

share on:facebook

4 comments:

sury siva said...

// எனக்கு இன்னும் ஆச்சர்யமான விஷயம் சில பிளாகர்களுக்கு கிடைக்கும் ஹிட்டும், அவர்கள் பதிவுக்கு போடப்படும் பின்னூட்டங்களும் தான். நமக்கு ஒரு வாரத்தில்/மாதத்தில் கிடைக்கும் ஹிட்டுகளும், பின்னூட்டங்களும் ஒரு சிலரின் பதிவுகளுக்கு ஒரே நாளில் கிடைத்து விடும். இதற்க்கெல்லாம் காரணம் ஒன்றும் பெரிசில்லை//

கடந்த ஆறு வருடங்கட்கு மேலாக பல்வேறு பொருள்களில் நான் பதிவாக்கம் செய்துகொண்டிருக்கிறேன்.
என் வலைப்பதிவுகளைப்படிக்கும் அன்பர்க்ள் எண்ணிக்கை ( ஒன்றிரண்டு பதிவுகளைத் தவிர ) அதிகம் இல்லை.

இந்த ஹிட்ஸ் எத்தனைக்கு பல காரணங்கள் இருப்பினும் எனக்குத் தெரிந்த சில காரணங்கள்.

1. வருபவர் எண்ணிக்கைக்கும் வலைப்பதிவுகளின் பொருட்செறிவுக்கும் அதிக தொடர்பு இல்லை.
2. ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிடும் ரெஸிப்ரோகல் முறை உண்டு.
3. அரசியல், அதுவும் அடிதடி அடாவடி அரசியல், சினிமா, ஜாதிகள் சண்டை, செக்ஸ், ஜோசியம் இவை பற்றி எழுதும் பதிவுகளுக்கு ஃபாலோயர்ஸும் அதிகம். ஹிட்ஸும் அதிகம். தமிழர் சமுதாயம் தற்சமயம் செல்லும் நிலைதனை
இது பிரதிபலிக்கிறது என்றால் மிகையாகாது.
4. இதற்கு அடுத்தபடியாக ஆன்மீக பதிவுகளும், நாத்திகம் பேசும் பதிவுகளும். இருக்கின்றன.

ஆகவே, உங்கள் பதிவுக்கு வருபவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் வேண்டாம். வட நாட்டுக்கவி துளசிதாஸர்
ராம சரித மானஸ் என்னும் மஹா காவியத்தை எழுதியவர், இதை எதற்காக எழுதுகிறேன் என்று குறிப்பிடும்
போது இதை என் மனத்திற்கு சுகமளிப்பதற்காக எனக்கூறினாராம். வள்ளுவனும் கம்பனும் தன்னை இத்தனை
பேர் படிப்பார்கள் என்று எதிர்பார்த்து எழுதவில்லை.

என்.கணேசன் அவர்களது கட்டுரைகளையும்,, மற்றும் தங்கமணி அவர்களின் கவிதை மழைகளை எத்துணை பேர் படிக்கின்றனர் !!

நல்ல இலக்கியத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு. அது உடன் தெரியவில்லை என்றாலும் காலப்போக்கில்
பரிணமிக்கும்.

ஆகவே, மன்ம் தளர்ச்சியடையாது எழுதுங்கள்.

சுப்பு ரத்தினம்.

Vetirmagal said...

இவ்வளவு நன்றாக எழுதும் உங்களுக்கு இந்த சந்தேகங்கள் பொருந்தவில்லை.
நல்ல கருத்துகளை விரும்பும் பதிவர்கள் கட்டாயம் படிப்பார்கள்.

நீங்களே இந்த மாதிரி நினைத்தால், எங்களைப் போன்றவர்களின் பதிவிகளை யாருமே படிக்காத்து குறித்து நான் என்ன நினைப்பது?;-)

ஆதி மனிதன் said...

வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி சூரி.

பதிவுகள் போடுவது நம் மன திருப்திக்காக தான். நிச்சயம் ஹிட்டுக்கு இல்லை. உண்மையை சொல்லப் போனால் நான் குறைவான ஹிட்டுக்கு ஆதங்கப்படவில்லை. ஒரு செய்திக்காக தெரிவித்தேன். அவ்வளவு தான். தொடர்ந்து வருக. பின்னூட்டமும் இடுக. நன்றி.

ஆதி மனிதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெற்றிமகளே.

// இவ்வளவு நன்றாக எழுதும் உங்களுக்கு இந்த சந்தேகங்கள் பொருந்தவில்லை. //

அப்படியா? நீங்க சொன்ன சரிதான்.


நன்றி ரத்னவேல்.

Post a Comment