Tuesday, December 13, 2011

படித்தவுடன் இலவச பயிற்சி, அரசு வேலை - ஆம் தமிழகத்தில் தான்.


அரசு சேவை இல்லம் பற்றிய சென்ற பதிவின் தொடர்ச்சி...

இன்று அரசாங்க வேலை கிடைப்பதே அறிதாகி போய்விட்ட ஒன்று. அப்படி இருக்கையில், படித்து முடித்தவுடன், இலவச பயிற்சி மற்றும் அரசு வேலையென்றால் அது அரசு "சேவை இல்லத்தில்" படித்தவர்களுக்கு மட்டும் தான். இதற்கென்று ஒரு அரசு ஆணையே உள்ளதாக தெரிகிறது. அதாவது "சேவை இல்ல" சீல் உள்ள ட்ரைனிங் சர்டிபிகேட்/பள்ளி சான்றிதல் இருந்தால் அவர்களுக்கே அரசு வேலையில் முன் உரிமை.

சேவை இல்லத்தில் படித்தவர்களுக்கு அரசு வேளையில் சேர வயது வரம்பே கிடையாது. ஐம்பத்தி ஏழு வயதில் அரசு வேளையில் சேர்ந்து ஐம்பத்து எட்டு வயதில் பனி ஓய்வு பெறலாம்.

சென்ற பதிவில் கூறியிருந்தது போல், சேவை இல்லத்தில் சேர பதினெட்டு வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதற்க்கு காரணம், இப்பள்ளியே ஆதரவற்ற இளம் பெண்கள் நல்வாழ்வு பெறுவதற்கு தான். பெரும்பாலும் இங்கு சேர்பவர்கள் இளம் வயதிலேயே கணவனை இழந்தவர்களோ, அல்லது கணவனால் கை விடபட்டவர்களோ ஆவார்கள். அதனாலேயே ஐந்தாம்  வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும், இப்பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். இப்பெண்களுக்கு  குழந்தைகள் இருந்தால் ஆண் குழந்தை என்றால் மூன்று வயது வரையிலும்,  பெண் குழந்தை என்றால் ஐந்து வயது வரையிலும்  தாயுடனே தங்கி கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, சேவை இல்லத்தில் படித்த பெண்களுக்கு என்றே ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கடலூர் போன்ற மாவட்டங்களில் செயல்படுகிறது. பயிற்சி முழுவதும் இலவசம்.

அரசு சேவை இல்லம் மூலம் இன்னும் பல நல்ல வசதிகளை ஆதரவற்ற  ஏழை பெண்கள் பெற்றுக் கொள்ள தமிழக அரசின் சமூக நலத்துறையை அணுகலாம். என்னுடைய தாயார் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர்/  சூப்பிரண்டண்ட் ஆக பணியாற்றியதாலும் இப்பள்ளியை பற்றி பொது மக்களுக்கு அதிகம் தெரியாத காரணமும் இப்பதிவை எழுத தூண்டியது.

சேவை இல்லம் பற்றி எனக்கு தெரிந்த இன்னொரு பெருமை, இம்மாதிரி  அதரவற்ற பெண்களாக இப்பள்ளியில் சேர்ந்து என் தாயிடம் படித்த இரு மாணவிகள் முது நிலை பட்டம் பெற்று   இப்பள்ளியிலேயே ஆசிரியர்களாக பணியாற்றுவதுதான்.


share on:facebook

6 comments:

Nathimoolam said...

எவ்வாறு தங்களைத்தொடர்புகொள்வது என்றுகூறினால் மிகவும் பயன்பெறுவதில் நானுமொருவன்.
நதிமூலம்

Anonymous said...

Continue post like this.

ரைட்டர் நட்சத்திரா said...

நல்ல தகவல்

ஆதி மனிதன் said...

நன்றி Nathimoolam" தங்கள் கேள்விகளை என்னுடைய ஜி மெயிலுக்கு அனுப்புங்கள். இல்லையென்றால் நீங்கள் தமிழக அரசின் சமூக நலத்துறையை அணுகலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிச்சயம் ஒரு அலுவலகம் இருக்கும்.

வாங்க அனானி. ஒவ்வொரு முறையும் வரும் அனானியாக தான் நீங்கள் இருக்க வேண்டும். நன்றி மீண்டும் வருக.

ஆதி மனிதன் said...

நன்றி கார்த்தி கேயனி. அது என்ன கார்த்தி கேயனி? கார்த்திகேயனி இல்லையா?

CS. Mohan Kumar said...

Really Useful post

Post a Comment