M.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ஒரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறான் என எல்லா தமிழ் சினிமாவிலும் கேட்டு கேட்டு புளித்து (பொறாமை) போன வசனத்தையே மாற்றி அமைத்த படிப்பு. இப்போது எல்லா சினிமாவிலும் தங்கள் பையனை பற்றி பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், என் பையன் M.C.A முடிச்சிட்டு அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் என்று சொல்ல வைத்த படிப்பு. ஆம், அந்த படிப்பை என்னை சார்ந்த அனைவரின் உதவினாலும் பர்ஸ்ட் பாட்ச்சில் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்த படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
படித்து முடித்ததும் வேலைக்கு சேரும் எண்ணம் எனக்கு அப்போது ஏற்படவில்லை. மாறாக சொந்தமாக IT சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனியே Center ஒன்று தொடங்கினேன். அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் சொந்த தொழில் போரடிக்க தொடங்கி விட்டது. சரி, வெளியில் செல்லலாம் என முடிவு செய்து ஒரு நல்ல கம்பெனியில் ப்ரோக்ராமராக என் IT பயணத்தை தொடங்கினேன்.
பிப்ரவரி மாதம், 1999. அன்றைய காலகட்டத்தில் IT துறையில் இந்தியாவில் டாப் ஐந்து கம்பனிகளில் ஒன்று நான் வேலை பார்த்த நிறுவனம். சேர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. திடீரென்று ஒரு நாள், எங்கள் கம்பனியின் ஜெனரல் மானேஜரிடமிருந்து ஒரு போன் கால். உடனே தன் அறைக்கு வந்து தன்னை பார்க்கும்படி. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் அறையில் நான்.
சம்பிராதய விசாரிப்புகளுக்கு பின், என்னிடம் எங்கள் GM கேட்ட கேள்வி,
உங்களை ஆன்சைட் (onsite) அனுப்ப முடிவு செய்திருக்கின்றோம், உங்களுக்கு விருப்பமா? என்று. கரும்பு தின்ன கூலியா? அமெரிக்கா போக IT காரனுக்கு கசக்குமா? உடனே "எஸ்" சொன்னேன். கூடவே, நீங்கள் ஆன்சைட் போகும் விஷயம் உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். இப்போதைக்கு யாரிடமும் சொல்லாதீர்கள் என கண்டிப்பான அறிவுரை வேறு. சரி சார். சரி சார் என்று தலையாட்டிவிட்டு மீண்டும் என் தளத்திற்க்கு திரும்பினேன். மனம் முழுதும் சந்தோசத்துடன். இருக்காதா பின்னே! முனிவர்களுக்கு முக்தி போல், IT காரனுக்கு அமெரிக்கா இல்லையா?
என் இடத்தை நெருங்கியதும் தான் தாமதம், சுற்றி இருந்த அனைவரும் வந்து கை கொடுத்தனர். அது மட்டுமில்லாமல் அப்புறம் எப்ப போறீங்க? எந்த பிளைட் என்று அடுக்கடுக்காக கேள்விகள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. GM அமெரிக்கா செல்வதை அடுத்தவர்களிடம் சொல்லாதே என்று கூறி இருக்கிறார், இங்கு என்னவென்றால், வந்ததும் எப்ப அமெரிக்கா கிளம்புற என கேட்கிறார்கள். அப்போது தான் தெரிந்தது எல்லோருக்கும் தெரிந்ததை ரகசியம் என்றால் அதற்க்கு பெயர் தான் "கார்பரேட் சீக்கிரட்" என்று.
அடுத்த ஒரு வாரத்தில் வீசா ஸ்டாம்பிங் எல்லாம் முடிந்து, மார்ச் 8 ஆம் தேதி அமெரிக்கா பயணம். ஷாப்பிங் எல்லாம் பண்ணியாயிற்று. வீட்டில் அம்மா அப்பா அண்ணன் மாமா மாமி நெருங்கிய குடும்ப நண்பர் என பட்டாளமே திரண்டு வந்திருந்தது, என்னை வழியனுப்ப. அப்போது தான் அந்த செய்தி சன் டி.வி "Flash news" வாயிலாக என்னுடைய அமெரிக்க பயணத்திற்கு ஆப்பாக வந்தது. அது என்ன செய்தி?
செய்திகள் தொடரும்...
share on:facebook
9 comments:
நல்ல ஆரம்பம்.. தொடருங்கள்... தொடர்கிறேன்
நல்லா எழுதியிருக்கீங்க...
சிவபார்க்கவி
http://sivaparkavi.wordpress.com/
MCA என்பது சூப்பர் படிப்பா ?? ஆர்ட்ஸ் காலேஜ் முடித்தவர்கள் computer engineering வர ஒரு குறுக்கு வழி அவ்வளவுதான்.engineer background இல்லாத படிப்பு MCA.
அச்சச்சோ...
அடேங்கப்பா சஸ்பென்சொட நிறுத்துறீங்க !
நன்றி சூர்யஜீவா.
நன்றி சிவபார்கவி.
Anonymous said...
//MCA என்பது சூப்பர் படிப்பா ?? ஆர்ட்ஸ் காலேஜ் முடித்தவர்கள் computer engineering வர ஒரு குறுக்கு வழி அவ்வளவுதான்.engineer background இல்லாத படிப்பு MCA.//
ஆர்ட்ஸ் காலேஜ் முடித்தவர்கள் எஞ்சினியர்கள் ஆக கூடாது என்று ஒன்றும் சட்டம் இல்லையே...மேலும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமராக எந்த ஒரு குறிப்பிட்ட படிப்பும் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நல்ல கணித/ இயற்பியல் அறிவு இருந்தாலே போதும். சாப்ட்வேர் ஹார்ட்வேர் இரண்டுக்கும்.
நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி மோகன்.
@anony,
அப்போ இஞ்சினியரிங் மட்டும் என்ன சூப்பர் படிப்பா? இன்று தமிழகத்தில் தெருவிற்கு நாலு இஞ்சினியரிங் கல்லூரி இருக்கிறது. குறைந்த பட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண் வாங்கினாலே போதும். எளிதாக ஏதோ ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கும்.
IISC யில் நான்கு வருட BS படிப்பை சென்ற ஆண்டில் இருந்து தொடங்கி இருக்கிறார்கள். இஞ்சினியரிங் background இல்லாத படிப்பு தான் அது. இன்று தமிழகத்தில் உள்ள எவ்வளவு இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களால் அதில் இடம் வாங்க முடியும்.
எல்லா படிப்பும் நல்ல படிப்பு தான். உயர்ந்தது தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை.
Post a Comment