Tuesday, December 20, 2011

அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்?

அமெரிக்கா போவதற்கு முன் எத நல்லா செக் பண்றீங்களோ இல்லையோ, உங்க பற்களை நல்லா செக் பண்ணிக்குங்க. ஒரு பல்லு கோளாறா போயி கலட்டி மாட்டனுமுன்னா அதுக்கு ஆகுற பீசுக்கு நீங்க இந்தியாவுக்கு டிக்கெட் எடுத்துட்டு வந்து நம்ம ஊரு சனமெல்லாம் பாத்துப்புட்டு ஆயிரம் ரெண்டாயிரம் செலவு செய்து நம்ம பல்லையும் சரி பண்ணிபுட்டு போயிடலாம். அந்த அளவிற்கு பல் மருத்துவம் இங்கு காஸ்ட்லி.

அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்களுள் நிச்சயம் "டென்டிஸ்ட்" களும் அடக்கம். ஒரு முறை டென்டிஸ்ட்யிடம் சென்று வந்தால் குறைந்தது ஐநூறு ஆயிரம் டாலர்களுக்கு பில் நிச்சயம். ஓரளவு நல்ல இன்சூரன்ஸ் இல்லையோ அவ்வளவுதான்.

அதற்க்கு காரணம், அமெரிக்கர்கள் தங்கள் பற்களுக்கு தரும்  முக்கியவத்துவம் தான். பற்களை தங்கள் இருதயம் போல் பார்த்துக் கொள்வார்கள். வருடத்திற்கு ஒரு முறை தங்கள் தாய் தந்தையரை போய் பார்க்கிறார்களோ இல்லையோ, இரு முறை கண்டிப்பாக "டென்டிஸ்ட்டை" போய் பார்த்து விடுவார்கள். அதே போல் ஒவ்வொருவரின் பற்களும் பற்பசை விளம்பரத்தில் வரும் மாடல்கள் போல்தான் பளிச்சென்று இருக்கும். மேலும், அடுத்தவர்கள் பேசும் போது வரும் வாடை தான் அமெரிக்கர்கள் வெறுக்கும் முதல் விஷயம். அதனாலேயே இங்கு எல்லோரும் பற்களை சுத்தமாகவும் வாடை இன்றியும் வைத்துக் கொள்வார்கள்.

பொதுவாகவே பல் மருத்துவம் இங்கு சற்று அதிக செலவாகும் விஷயம். நல்ல இன்சூரன்ஸ் வைத்திருப்பவர்கள் கூட பல் மருத்துவத்திற்கு தங்கள் கையிலிருந்து குறைந்தது 10-20 சதவிகிதம் செலவு செய்ய நேரிடும். இருந்தாலும் முதல் செக்-அப் மற்றும் சின்ன சின்ன வைத்தியங்கள் பொதுவாக இன்சூரன்சில் கவர் ஆகி விடும்.

முதல் தடவை "டென்டிஸ்ட்டிடம்" சென்றால் அனைத்து பற்களையும் முதலில் கண்டிப்பாக எக்ஸ்ரே எடுப்பார்கள். கிட்ட தட்ட பதினைந்து பதினாறு சிறு சிறு எக்ஸ்ரேக்கள். எடுத்து முடிப்பதற்குள் போதும் என்று ஆகி விடும். அடுத்ததாக பற்களை கிளீன் செய்வார்கள். இங்கு வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக பற்களை கிளீன் செய்வார்கள். இந்த கிளீனிங் ப்ராசஸ் தான் சற்று கொடுமையானது. அதிலும் நாம் இதற்க்கு முன் கிளீன் செய்ததே இல்லை என்றால் அவ்வளவுதான். ஒரு மணி நேரத்திற்கு மேலாக கையில் ஒரு கம்பியை வைத்துக்கொண்டு பற்களில் உள்ள அனைத்து கரைகளையும் (பிளேக்) கரைத்து எடுத்து விடுவார்கள்.

அடுத்து பற்கள் சற்று பலம் இல்லாமல் இருந்தால் கூட ரூட் கனால் செய்ய வேண்டும் என்று கிரெடிட் கார்ட் அப்ளிகேஷனையும் சேர்த்து கொடுத்து விடுவார்கள். காமெடிக்காக சொல்லவில்லை. இங்கு பாங்க்கை தவிர கிரெடிட் கார்டு அப்ளிகேஷன் வைத்திருக்கும் ஒரே இடம் "டென்டிஸ்ட்" அலுவலகத்தில் தான்.

சரி போதும், இன்று தான் நானும் டென்டிஸ்டிடம் சென்று பற்களை சுத்தம் செய்து வந்தேன். டயர்டாக இருக்கு. வரேன்.


கொசுறு: இங்கிலாந்திலும் அப்படிதான். பல்லுக்கு அதிக முக்கியவத்துவம் கொடுப்பார்கள். பல் வலிக்கு நீங்கள் அவசர கால உதவி ஆம்புலன்சையும் சட்டபடி கூப்பிடலாம்.


share on:facebook

12 comments:

Sankar Gurusamy said...

நல்ல தகவல்.. வெளிநாட்டினருக்கு பொதுவாகவே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகம்.. அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

கொசுறு: இங்கிலாந்திலும் அப்படிதான். பல்லுக்கு அதிக முக்கியவத்துவம் கொடுப்பார்கள். பல் வலிக்கு நீங்கள் அவசர கால உதவி ஆம்புலன்சையும் சட்டபடி கூப்பிடலாம்.

ரொம்ப ஓவரா பல்லைக் காட்டற மாதிரி இருக்கே!

suryajeeva said...

உண்மையில் இங்கு இருக்கும் பல் மருத்துவர்களுக்கும் இதே போல் பணம் பிடுங்க ஆசை தான்.. ஆனால் ஒரு தடவை மட்டும் தான் பிடுங்க முடியும்.. அதற்குப் பிறகு கூட்டம் வராது என்று பல்லை கடித்து கொண்டு பல் வைத்தியம் செய்கிறார்கள்...

அமுதா கிருஷ்ணா said...

அந்த விழிப்புணர்ச்சி எப்போ இந்தியா வருமோ.பீடா,பாக்கு என்று போட்டு கறை நிறைந்த பற்கள் தான் நம் ஊரில் அதிகம்.

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி.

ஆதி மனிதன் said...

நன்றி சங்கர்.

நன்றி இராஜராஜேஸ்வரி.

ஆதி மனிதன் said...

நன்றி சூர்யா ஜீவா. இங்கும் அப்படி தான். பொதுவாக இங்குள்ள பல் மருத்துவர்கள் மட்டும், நாம் கட்ட வேண்டிய co-pay எனப்படும் குறைந்த அளவு கட்டணத்தை கூட வேண்டாம் என கூறிவிடுவார்கள். எல்லாம் இன்சூரன்சில் பணத்தை கறக்கத்தான்.

ஆதி மனிதன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா. சரியாக சொன்னீர்கள்.

நன்றி ரத்னவேல்.

Vetrimagal said...

This trend is getting familiar now, in Indian cities, and with youngsters. There are too many dentists practicing in all corners of the city , may be the reason.

Apart from that, We Indians do have solid healthy teeth.(may not be clean). I think, in the West, their teeth are not so strong as ours, and that leads to many complications. that is one of the reasons people are required to visit the Dentists often.

துளசி கோபால் said...

எங்கூரிலும் இப்படித்தான். சொத்தை(யை)ப் பிடுங்கப்போனால் சொத்தையே பிடுங்கிருவாங்க!

ஜோதிஜி திருப்பூர் said...

மூன்று பதிவுகளையும் ஒன்றுசேர படித்தேன். மூன்று பதிவின் முடிவிலும் தொடர்பு இல்லாமல் இருந்தது திரும்ப திரும்ப இந்த பதிவுக்கு வந்து படிக்க முடிந்தது. ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் இணைப்பு கொடுங்க. அடுத்து வர்றவங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும். தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டேன்,

ஆதி மனிதன் said...

@ஜோதிஜி திருப்பூர் said...
//தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டேன்//

நன்றி ஜோதிஜி.

Post a Comment