தமிழக முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது சில நல்ல திட்டங்களை கொண்டு வருவார். கடந்த முறை அவர் கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டம். அனைவராலும் பாராட்டப் பட்ட ஒன்று. சொல்லப் போனால் நகரம், கிராமம் என வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் உள்ள தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான கட்டடங்களில் இத் திட்டம் நடை முறைப் படுத்தப் பட்டது. அதற்க்கு முழு காரணம் செல்வி. ஜெயலலிதாவும், இத் திட்டத்தை செயல் படுத்த அவரின் அரசு கடை பிடித்த கடுமையான நடைமுறைகளும் தான்.
அடுத்ததாக தற்போது ஒரு மிக பெரிய மாற்றத்தை பள்ளி கல்வித்துறையில் கொண்டு வந்துள்ளார் (சமச்சீர் கல்வி மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றத்தை சொல்ல வில்லை!). மாறாக தற்போதைய கல்வி முறையில் ட்ரைமஸ்டர் என்று சொல்லக் கூடிய பருவ முறை தேர்வு முறை அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என்ற மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
தற்போது உள்ள தேர்வு முறையில் காலாண்டு தேர்வுக்கு படித்த பாடத்தையே அரை ஆண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கும் படிக்க வேண்டும். இதனால் எந்த உபயோகமும் இல்லை. மாறாக வருடம் முழுதும் அதே புத்தகத்தை சுமப்பதும், படித்து முடித்து தேர்வு எழுதிய பாடத்தையே மீண்டும் படிப்பதும் தான் மிச்சம். பருவ முறையில் ஒரு முறை படித்து தேர்வு எழுதி விட்டால் அடுத்த பருவ தேர்வுக்கு அந்த பாடத்தை மீண்டும் படிக்க வேண்டியதில்லை.
அது மட்டும் இன்றி, மூன்று பருவ தேர்வுகளின் மதிப்பெண்களையும் கூட்டி அதன் சராசரியை முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்ணாக கணக்கிடுகிறார்கள். இதனால், ஒரு நாள் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் இறுதி தேர்வு எழுத முடியவில்லை என்றால் கூட அதனால் அந்த ஆண்டு தேர்வில் தோல்வி என்ற கவலை இல்லை.
இந்த அறிவிப்பு எல்லா பெற்றோர்களையும் கல்வியாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் ஐயம் இல்லை. அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் இதன் முழு பலனையும் புரிந்து கொண்டால் அவர்களை விட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
என் குழந்தைகள் தற்போதே துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா சென்ற பின் தங்களுக்கு செமஸ்டர் முறை தேர்வுகள் என்று அறிந்தவுடன். இங்கு (அமெரிக்காவில்) உள்ள பள்ளி கல்வி முறையை முடிந்தபோது பகிர்கிறேன்.
share on:facebook
3 comments:
நடைமுறைக்கு வந்த பிறகே இது எந்தஅளவில் மாற்றத்தை தரும் என்று சொல்லகூடும்..
இருந்தாலும் இந்த முறை சிறந்தமுறையாகவே நினைக்க தோன்றுகிறது
மழை நீர் சேமிப்பு திட்டமே பெப்சி கோக கோலா நிறுவனங்களுக்கு ஆதரவானதா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்.. இந்த அறிவிப்பு.. நல்ல திட்டம் தான், ஆனால் திரை மறைவில் எதுவும் இல்லாமல் அம்மையார் எதுவும் செய்ய மாட்டாங்களே என்ற பதை பதிப்பு உதைத்துக் கொண்டு தான் இருக்கிறது
Already this is being practiced in Primary school, here in Andhra
Post a Comment