Tuesday, February 9, 2010
சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி.
மும்பையில் ஆட்டோ ஓட்ட கண்டிப்பாக மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சென்னையில் ஆட்டோ ஓட்டும் நண்பர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை. மீட்டருக்கு மேல் கேட்காமலும், சூடு வைக்காமலும் நீங்கள் ஒரிய மொழி என்ன? உலகத்தில் யாருக்குமே புரியாத மொழி பேசினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனா ஆட்டோ மீட்டர் போட்டு அத சூடு வைக்காம நீங்க ஒட்டுனாலே உங்களுக்கு "சிறந்த தமிழன்" பட்டம் தரவே நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.
நீங்க தயாரா ஆட்டோ அன்னாச்சிகளே! இனி...
சென்னை என்றாலே இந்தியாவின் பிற மாநிலத்தவர்களுக்கு அலறல் ஏற்படுத்தும் ஒரே விஷயம் நம்மூர் ஆட்டோ கட்டணம் தான். கூவம் கூடுதல் பாயிண்ட். ஆனா இப்பல்லாம் அதுக்கு அதிக எபக்ட் இல்ல. எல்லாதான் அப்பாட்மன்ட்டா மாறிடுச்சே. நம்ம சென்ட்ரல் ஸ்டேசனிலிருந்து எக்மோருக்கு போக ஒரு மணிநேரம் சுற்றி 300 ரூபாய் வசூலித்ததாக என் ஹைதரபாத் நண்பர் ஒருவர் என் கையில் சத்தியம் அடிக்காத குறையாக கூறியபோது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
சமீபத்தில் வேலை நிமித்தமாக இரு முறை குறுகிய இடைவெளியில் மும்பை செல்ல நேர்ந்தது. தற்போது விமான பயணம் என்பது எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பதை பிறகு பார்போம். அதற்கு முன் நான் இங்கே குறிப்பிட விரும்புவது மும்பையில் எனக்கு பிடித்த சில பொது கலாசாரம் மட்டும் ஆட்டோ ஒடுனர்களை பற்றி.
கடந்த மாத துவக்கத்தில் நான் மும்பை சென்று இறங்கிய போது நான் செல்ல வேண்டிய இடத்தின் முகவரி மட்டுமே என்னிடம் இருந்தது. தமிழனாய் பிறந்ததினால் இந்தியும் தெரியாது. விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தவுடன் Auto Bay (ஆட்டோக்கள் வரிசையாக வந்து நிற்கும் இடம்) நோக்கி சென்றேன். வரிசையாக ஆட்டோக்கள் வந்து கொண்டிருக்க பயணிகள் போலீசோ செக்கூரிடியோ யாரும் இல்லாமல் தாங்களாகவே ஒரு வரிசை அமைத்து அதில் நிற்க ஆரம்பித்தார்கள்.
மும்பையில் எனக்கு பிடித்த ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் பொதுவாக மக்கள் ஒரு கட்டுக்கோப்புடன் இருப்பார்கள். பேருந்து நிறுத்தங்களில் சிறுது கூட்டம் கூடி விட்டால் போதும் உடனே ஒரு வரிசையை தாங்களே ஏற்படுத்தி கொள்வார்கள். நம்ம ஊர் மாதிரி உடலில் பலம் உள்ளவன் முண்டி அடித்து முன்னே செல்ல முடியாது.
அதே போல் பொதுமக்களை பார்த்து ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் பயப்படுகிறார்கள். ஒரு பிரச்னை என்றால் மக்கள் உடனே கூடி விடுகிறார்கள். ஒரு பயணிக்கும் ஆட்டோ ஒட்டுனர்க்கும் தகராறு என்றால் உடனே மற்ற பயணிகளும் நமக்காக நியாயம் கேட்க வருகிறார்கள். நம் ஊரில் ஆட்டோ ஓட்டுனர்கள் என்றால் ஒரு ரவுடி போல் தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள். இதற்கு யார் முழு பொறுப்பு என தெரியவில்லை. ஆனால் சினிமாவுக்கும் சில தவறான ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நிச்சயம் அதில் பங்கு உண்டு.
இதையெல்லாம் நினைத்து நான் ஆச்சிரியாப்பட்டுக் கொண்டிருக்கும்போதே வரிசையில் எனது முறை வந்தது. எங்கு செல்ல வேண்டும் என்று கூட என்னிடம் ஆட்டோ டிரைவர் கேட்கவில்லை. ஏறி உக்கார்ந்தவுடன் மீட்டர் போட்ட பின்தான் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார், அந்த ஆட்டோ டிரைவர். இடத்தின் பெயரை மட்டும் கூறினேன். வண்டி சல்லென பறந்தது.
பொதுவாக மும்பையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளை ஏமாற்றுவதில்லை. 99% சதவிகிதம் மீட்டர் போட்டு தான் ஓட்டுகிறார்கள். அதேபோல் மீட்டரை சூடு வைப்பது என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரிவதில்லை.
அதேபோல் உள்ளூர் ஆளா, வெளியூர் ஆளா என்று என்று தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் பேரம் பேசுவதில்லை. ஏறி உட்கார்ந்தவுடன் மீட்டர் போட்டு விடுகிறார்கள். அதே போல் மினிமம் சார்ஜே மட்டுமே ஆகியிருந்தாலும் கூட மறு பேச்சு பேசாமல் அதையே வாங்கிக்கொள்கிறார்கள். "போட்டு கொடுங்க சார்" சமாசாரத்தை அங்கு காண்பது அரிது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் மும்பை சென்றிந்தபோது இன்னுமொரு ஆச்சிரியத்தை கண்டேன். மீட்டர் இருபது ரூபா காண்பித்தது என்றால் நாம் இருபது ரூபாயை எடுத்து நீட்டினால் ஆட்டோ டிரைவர் தன சட்டை பையை துளாவுவார். அதாவது நாம் மீட்டர் சார்ஜாக எவ்வளவு கொடுத்தாலும் நமக்கு அவர்கள் ஒரு ரூபாயை திருப்பி கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்பொழுது அப்பழக்கத்தை பார்க்க முடியவில்லை.
இத்தனைக்கும் மும்பையில் எப்பொழுதும் ஆட்டோவிற்கு கிராக்கிதான். சென்னையில் நீங்கள் பேருந்து நிலையத்திலிருந்தோ புகைவண்டி நிலையத்திலிருந்தோ இறங்கினால் உடனே உங்களை ஒரு நாலைந்து ஆட்டோ ஓட்டுனர்கள் சூழ்ந்து கொண்டு எங்க சார் போவனும், எங்க சார் போவனும் என்று மொய்த்து விடுவார்கள். ஆனால் மும்பையில் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கு கிராக்கிதான். அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை(குறிப்பாக வேலைக்கு செல்லும்/திரும்பும் நேரங்களில்).
சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் நேரத்திற்கு தகுந்தாற்போல் ஒரு ரேட் சொல்லுவார்கள். காலை என்றால் கால நேரம் சார், மதியம் என்றால் மதியான வெயிலு சார், மாலை நேரத்தில், என்ன ட்ராபிக் பாரு சார், இரவு நேரத்தில் ராத்திரி நேரம் சார்னு வகை வகையா காரணம் கூறுவார்கள்.
ஆனால் மும்பையில் இரவு நேரமானாலும் அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் கேட்பதில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாக ஒரு அட்டவணை வைத்து இருக்கிறார்கள். அதில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்கிறார்கள். உள்ளூர் வெளியூர் ஆட்கள் பார்த்து ஏமாற்றுவதில்லை.
இதல்லாம் பார்த்தாவது திருந்துங்கப்பா. மீண்டும் ஒருமுறை...
சென்னையில் ஆட்டோ ஓட்டும் நண்பர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை. மீட்டருக்கு மேல் கேட்காமலும், சூடு வைக்காமலும் நீங்கள் ஒரிய மொழி என்ன உலகத்தில் யாருக்குமே புரியாத மொழி பேசினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனா ஆட்டோ மீட்டர் போட்டு அத சூடு வைக்காம நீங்க ஒட்டுனாலே உங்களுக்கு "சிறந்த தமிழன்" பட்டம் தரவே நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.
கைவிட்டுடாதிங்க ஆட்டோ அன்னாச்சிகளே!
நம்மூர்ல ஆட்டோ அவஸ்தையை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. நீங்களும் அனுபவிச்சதா நினைசீங்கனா அதுக்கு பரிகாரமா ஒரு வோட்ட போட்டுடுங்க. நன்றி.
share on:facebook
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
//நம்மூர்ல ஆட்டோ அவஸ்தையை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. //
True.
இருங்க. இருங்க....மெட்ராஸ் ஆட்டோ வரப்போவுது...
சென்ட்ரல் ஸ்டேசனிலிருந்து எக்மோருக்கு போக ஒரு மணிநேரம் சுற்றி 300 ரூபாய் வசூலித்ததாக என் ஹைதரபாத் நண்பர் ஒருவர் என் கையில் சத்தியம் அடிக்காத குறையாக கூறியபோது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.//
பரவாயில்லையே.. என்னோட நன்பரின் உறவினர் செண்ட்ரலிலிருந்து, எதிரே உள்ள ஜி.எச்..க்கு 150 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் வந்தார்..:))
//காலை என்றால் கால நேரம் சார், மதியம் என்றால் மதியான வெயிலு சார், மாலை நேரத்தில், என்ன ட்ராபிக் பாரு சார், இரவு நேரத்தில் ராத்திரி நேரம் சார்னு வகை வகையா காரணம் கூறுவார்கள்.//
Very true.. no wonder how 'people' come to power by throwing 'freebees' & make people(different from fore-said 'people') to expect money to exercise their right (voting).
It's the 'attitude' & that should chance.
Nice article..
//கண்ணகி said... மெட்ராஸ் ஆட்டோ வரப்போவுது...//
எனக்கென்னமோ கண்ணகிக்கு நெறைய ஆட்டோ ஒடுதோனு தோணுது. நீங்க ஆட்டோ அனுப்பாம இருந்தா சரி.
வருகைக்கு நன்றி ரோபின்(தமிழில் Robin - ஐ சரியாக எழுதி இருக்கேனா?)
//ஷங்கர்.. said... பரவாயில்லையே.. என்னோட நன்பரின் உறவினர் செண்ட்ரலிலிருந்து, எதிரே உள்ள ஜி.எச்..க்கு 150 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் வந்தார்..:))//
செண்ட்ரலிலிருந்து சாந்தோம் சென்றிருந்தால் அவரின் நிலைமை என்னவாகி இருக்கும் ?
ஆட்டோ மீட்டர் போட்டு அத சூடு வைக்காம நீங்க ஒட்டுனாலே உங்களுக்கு "சிறந்த தமிழன்" பட்டம் தரவே நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.
.............பட்டத்தை அப்புறம் கொடுங்க. முதலில் கண்டு பிடிச்சதும், அந்த ஆட்டோ நம்பர் தாங்க.
There are multiple reasons for the current sad situation in Chennai--- Corruption being the most important one. Many autos are rented on daily basis to the drivers, so the driver thinks about maximizing his share, with minimum efforts of course!. If the autos are owned by public servants and party people, who will control them?. But the most important and incurable reason is GREED.
Rs:400/ மீனம்பாக்கம் டூ தாம்பரம் செல்ல என்னிடம் ஆட்டோ ஓட்டுனர் கேட்ட தொகை.
//maddy73 said... It's the 'attitude' & that should chance.//
When and how?
// Chitra said... பட்டத்தை அப்புறம் கொடுங்க. முதலில் கண்டு பிடிச்சதும், அந்த ஆட்டோ நம்பர் தாங்க.//
நானும் பல வருசமா அந்த ஆட்டோவதான் தேடிக்கிட்டு இருக்கேன். கண்டுபிடிக்க முடியல.
//Azhagan said... But the most important and incurable reason is GREED.//
Yes you are right and thanks for visiting.
//சைவகொத்துப்பரோட்டா said...
Rs:400/ மீனம்பாக்கம் டூ தாம்பரம் செல்ல என்னிடம் ஆட்டோ ஓட்டுனர் கேட்ட தொகை.//
இவங்கள எல்லாம் கொத்தி போட வேண்டும்.
நல்ல ஆட்டோக்காரர்களைப்பார்க்க மும்பை வரை செல்ல வேண்டியதில்லை, கோழிக்கோட்டுக்குப்போனால் போதும் :-)
ஆஹா ஆஹா அருமை.
ஆனால் நீங்கள் எழுதுவதை படிக்க தெரிந்தாலும் திருந்தாத ஜென்மங்கள். நானும் அடிக்கடி மும்பை போவேன் 1996-2001 (நான் லண்டன் செல்லும் முன்), நீங்கள் சொல்லுவது எவ்வளவு நிஜம். ஆட்டோ அவ்வளவு நல்ல இருக்காது ஆனால், ரொம்ப நல்லவர்கள். நான் போனவரை சில்லறையையும் எடுத்துக்கொடுப்பார்கள். நானும் ரயில் நிலைய ஸ்டேஷன் பலகையில் ஹிந்தியை தார் கொட்டி அழித்த கும்பல் ! ஹிந்தி சுத்தம் ! ஆனாலும் ஏமாற்ற மாட்டார்கள். ஆனாலும் இப்போது அவர்களுக்கு பிராப்ளம் பால் தாக்கரே தான் !
சென்னை ஆட்டோ ஓட்டுனர் என்றால் நினவு வருவது. திருத்தணி / பழனி கோவில் வாத்தியார் முதல், முதல்வர் வரை காசை கேட்டு பிடுங்கும் கும்பல் - அவர்கள் வழியில் இவர்களும் !
சென்னையில் ஐ.பி.எம். இன் ஏதோவொரு ட்ரைனிங் விஷயமாக பெங்களூரில் இருந்து (அப்போது அங்கே இருந்தேன் - நான் ஸ்ரிங்கேரியில் செட்டில் ஆகா ஆசைபடுபவன் - கன்னடகாரர்கள் கொஞ்சம் சாது என்பது என் எண்ணம் !) எக்மோர் ஸ்டேஷன் வாசலில் இருந்து - பாண்டியன் ஹோட்டல் ஆட்டோவில் விட நூறு ருபாய் கேட்ட ஜென்மங்கள் !
போன வருடம் ஜெமினி அமெரிக்க துதரகத்தில் விசா முடிந்த வெளியே வந்த என்னை கிழ்பாக்கில் இருக்கும் தம்பி வீட்டில் விட 300 $ (டாலர்ஸ் !) கேட்ட பிச்சைக்கார ஜென்மங்கள் !!
இவர்களுக்கு தமிழ் மொழி வேண்டாம், நமக்கு அவர்கள் அளவு "கெட்ட வார்த்தை" தெரிந்தால் போதும். என்னுடைய பச்சையப்பன் கல்லூரி உபயோகத்தில் நானும் பேசி தான் சமாளிப்பேன். ஏதோ வயசான அல்லது ஊருக்கு புதிதாக வந்த ஆட்டோ ஓட்டுனராக இருந்தால் பரவாயில்லை.
ஸ்ரிங்கேரியில் செட்டில் ஆகவில்லை என்றால், சென்னை ஆட்டோ ஓட்டி "போயஸ் கார்டனில்" வீடு வாங்க ஆசை !!
இது எப்படி இருக்கு
- சாய்
//app_engine said... நல்ல ஆட்டோக்காரர்களைப்பார்க்க மும்பை வரை செல்ல வேண்டியதில்லை, கோழிக்கோட்டுக்குப்போனால் போதும் :-)//
வரவுக்கு நன்றி. எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா ஊர்களிலும் ஆட்டோ ஓட்டுனர்கள் நியாயமாகவே நடந்து கொள்கிறார்கள்.
//சாய்ராம் கோபாலன் said... ஜெமினி அமெரிக்க துதரகத்தில் விசா முடிந்த வெளியே வந்த என்னை கிழ்பாக்கில் இருக்கும் தம்பி வீட்டில் விட 300 $ (டாலர்ஸ் !) கேட்ட பிச்சைக்கார ஜென்மங்கள் !! //
இதுதான் பகல் கொள்ளை என்பதா? என்னிடமும் இது மாதிரி ஒரு சந்தர்பத்தில் கேட்டார்கள். நான் தூதரகத்தின் அருகில் ஆட்டோ எடுக்காமால் சிறிது தூரம் நடந்து வழியில் சென்ற வேறொரு ஆட்டோவை பிடித்ததால் தப்பித்தேன்.
கேரளாவில் கூட ஆட்டோக்கள் பரவாயில்லை..
//ஸ்ரீராம். said...
கேரளாவில் கூட ஆட்டோக்கள் பரவாயில்லை..//
நான் நினைத்தது சரிதான் போலிருக்கு. தமிழகத்தை தவிர மற்ற எல்லா ஊர்களிலும் ஆட்டோக்கள் சரியாகத்தான் ஓடுகின்றன போலும்.
தமிழகத்தை தவிர மற்ற எல்லா ஊர்களிலும் ஆட்டோக்கள் சரியாகத்தான் ஓடுகின்றன
mumbai is good....
Post a Comment