முல்லை பெரியார் அணை பிரச்சனையால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் படும் பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. வாடிக்கையாளர்கள் வரவால் தான் ஒரு வியாபாரம் செழிக்கும். அது போல் பக்தர்கள் வருகையால் தான் ஒரு திருத்தலம் புகழ் பெற முடியும். தமிழக ஐயப்ப பக்தர்கள் ஒரு வருடம் சபரி மலைக்கு செல்வதை நிறுத்தினாலே போதும். அடுத்த வருடம் சபரி மலையை நிர்வகிக்க கேரளா அரசிடம் டப்பு இருக்காது. இவை எல்லாம் தெரிந்திருந்தும் கேரளா அரசு தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படும் இன்னலை கண்டும் காணாமல் இருக்கிறதென்றால் அவர்களுக்கு சரியான பாடம் கற்ப்பிக்க வேண்டும்.
அதற்காக இங்கு தமிழகத்தில் உள்ள கேரளா வர்த்தக நிறுவனங்கள் மீதும் மலையாளிகள் மீதும் தாக்குதல் நடத்தி தான் நம் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. சமீபத்தில் சபரி மலை செல்லும் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகளால்தவித்த தமிழக பக்தர் ஒருவர், இனி நாங்கள் சபரி மலை சென்று ஐயப்பனை தரிசிக்க போவதில்லை. தமிழ் உணர்வுடன் இங்கு உள்ள (அவர் சொன்ன ஊர் பெயர் நினைவில்லை) ஐயப்பன் கோவிலுக்கே சென்று விரதத்தை முடித்துக் கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்தார். என்ன உன்னதமான ஒரு புத்திசாலித்தனமான முடிவு.
பொதுவாகவே தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம். அதனால் தவறு ஒன்றும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஐயப்ப சேவா சங்கங்களும் உடனே கூடி சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அடுத்த வருடத்தில் இருந்து நாங்கள் யாரும் சபரி மலைக்கு வர மாட்டோம். இங்குள்ள பழனிக்கோ, குன்றக்குடிக்கோ விரதம் இருந்து காவடி எடுப்போம் என்று ஒரு அறிக்கை விடட்டும். அது போதும், கேரளா அரசு அணை கட்டும் பேச்சை கூட எடுக்காது.
தமிழகத்திற்க்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள தண்ணீர் பிரச்னை வேறு. ஆனால் முல்லை பெரியாறு அணை பிரச்னை வேறு. ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் கல்லணை உறுதியாக உள்ள போது சுமார் நூறு வருடங்களுக்கு முன் கட்டிய அணை எவ்வாறு பலமிழந்து போகும். சுப்ரீம் கோர்ட் முதல் அனைத்து வல்லுனர்களும் அணையின் பலத்தை பற்றி அறிக்கை கொடுத்தும் கூட கேரளா அரசு அடம் பிடிப்பது சண்டித்தனம் என்பதை தவிர வேறு என்ன?
கேரளா அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றால், தமிழகத்திலுள்ள அனைத்து கேரளா நிறுவனங்களையும் (குறிப்பாக தொண்ணூறு சதவிகத்திற்க்கும் மேலான டீ கடைகளை) தமிழர்கள் புறக்கணித்தால் போதும். கேரளா அரசுக்கு மலையாளிகளே நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பொருளாதார ரீதியாக அடித்தால் போதும் ஒரு மாநில அரசு என்ன ஒரு நாட்டையே வீழ்த்தி விட முடியும்.
உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை தவிர்ப்போம். பொருளாதார ரீதியாக கேரளா அரசை மிரட்டுவோம்.
share on:facebook
2 comments:
யப்பா.. எடு ஓட்டம்..
கொலைவெறியும் குத்துயிருமா அலையுறாங்க..
திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று
Post a Comment