தாயிடம் அன்பாக பேசுங்கள்
தந்தையிடம் பண்புடன் பேசுங்கள்
மனைவியிடம் உண்மை பேசுங்கள்
குழந்தைகளிடம் ஆர்வமாய் பேசுங்கள்
சகோதரர்களிடம் சகஜமாக பேசுங்கள்
சகோதிரியிடம் அளவோடு பேசுங்கள்
நண்பர்களிடம் உரிமையுடன் பேசுங்கள்
உறவினர்களிடம் சிரித்துப் பேசுங்கள்
ஆசிரியரிடம் தெளிவாக பேசுங்கள்
அதிகாரிகளிடம் அடக்கமாக பேசுங்கள்
முதலாளியிடம் முகம் மலர்ந்து பேசுங்கள்
தொழிலாளியிடம் இரக்கமுடன் பேசுங்கள்
கடவுளிடம் மவுனமாக பேசுங்கள்
பேசுங்கள்...பேசுங்கள்...
பேசாமல் மட்டும் இருக்காதீர்கள்.
கடைசியாக... பதிவை படித்தபின் வோட்டு போடாமல் மட்டும் இருக்காதீர்கள்... ஹீ ஹீ...
டிஸ்கி: பாதி எங்கோ படித்தது. மீதி நானே வடித்தது. ஆஹா கொஞ்சம் எதுகை மோனை நமக்கும் வருகிறதே? நீங்களும் வேறு யாரிடம் எப்படி பேச வேண்டும் என நினைத்தால் பின்னூட்டம் இடுங்களேன்! நன்றி.
share on:facebook
26 comments:
எல்லோரிடமும் அன்பாக, பண்புடன், உண்மையை, ஆர்வமாய், சகஜமாக, (தேவையான)அளவோடு, உரிமையுடன், சிரித்து, தெளிவாக, அடக்கமாக, முகம் மலர்ந்து, (தேவைப் பட்டால்)இரக்கமுடன் பேசுங்கள்.
"கடவுளிடம் மவுனமாக பேசுங்கள்"
தெரியாம இந்த பதிவ போட்டுட்டேன். என்னைய விட்டுடுங்க மேடி!
//மனைவியிடம் உண்மை பேசுங்கள்//
தல இது எப்பவும் முடியுமாஆஆ??
//தெரியாம இந்த பதிவ போட்டுட்டேன். என்னைய விட்டுடுங்க மேடி!//
Sorry boss! What you said is very good. I tried to apply the same to everyone.. & that may not be so practical. But, can be tried to the best.
நமக்கு நாமே...?
//ஸ்ரீராம். said...
நமக்கு நாமே...?//
அதான் ஸ்ரீராம்! சே... இது நமக்கு முதலில் தோணாம போச்சேனுதான் மொதல பீலிங்கா இருந்தது. ஆனா நமக்கு நாமே ? கொஞ்சம் யோசிச்சு பாத்தா? ஹூஹூம் .. நமக்கு நாமே எப்படி பேசுனாலும் அப்புறம் நமக்கு மத்தவங்க வேற பேரு வச்சிடுவாங்க. நா வரல இந்த ஆட்டத்துக்கு.
//மோகன் குமார் said...
//மனைவியிடம் உண்மை பேசுங்கள்//
தல இது எப்பவும் முடியுமாஆஆ??//
ஹி ஹீ ... முடிஞ்சப்ப மட்டும்.
நமக்கு நாமே வகுத்துக் கொள்ளும் நீதிகளா என்று கேட்க வந்தேன்....(மாத்திடுவோம்ல...) பேச்சு என்று ஒரு பதிவு எங்கள் ப்ளாகிலும் பல நாட்கள் முன்பு வந்துள்ளது ஆதி...படித்திருக்கிறீர்களோ?
நல்லாயிருக்கு ஆதிமனிதன், தொடர்ந்து எழுதுங்கள், அடிக்கடி எழுதுங்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீரம்
//பேச்சு என்று ஒரு பதிவு எங்கள் ப்ளாகிலும் பல நாட்கள் முன்பு வந்துள்ளது ஆதி.//
link please..பேச்சு என்று ஒரு பதிவு எங்கள் ப்ளாகிலும் பல நாட்கள் முன்பு வந்துள்ளது ஆதி...படித்திருக்கிறீர்களோ?
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ்டன் ஸ்ரீராம். தொடர்ந்து எழுத முயற்சிகிறேன்.
//link please..//
Repeatu...
பேசுங்கள்...பேசுங்கள்...
பேசாமல் மட்டும் இருக்காதீர்கள்.
அதுதாங்க முதல்ல முக்கியம்...விழுகற அடியைப் பொறுத்து மற்றத மறுபடி யோசிக்கல்லாம். சரியா.
http://engalblog.blogspot.com/2009/09/blog-post_23.html
எங்கள் ப்ளாக்கில் வந்த பேச்சுப் பதிவு.
thanks sriram.. for the link
//
http://engalblog.blogspot.com/2009/09/blog-post_23.html said..
எதிராளி இன்னதுதான் பேசப் போகிறார் என்று தாமாகவே ஒன்றை நினைத்து அதற்கு பதிலும் இடைவிடாமல் பேசத் தொடங்கி விடுவார்கள்.//
Sometime, I come in this category.. I have to correct myself. Thanks engal blog.
I know you all wonder why I 'comment' here for a post from 'engalblog'. That post is too old you know.. not many will see it.
This is being latest, have more change of 'viewership'
தங்களின் முதல் வரவுக்கு நன்றி கண்ணகி. தொடர்ந்து வாருங்கள். எனக்கு ஆட்டோ அனுப்பும் பழக்கமெல்லாம் இல்லை.
//மனைவியிடம் உண்மை பேசுங்கள்//
மனைவி முன்னாடி பலபேருக்கு பேசுறதே பெரிய விசயம்... இதுல உண்மையை பேசுன்னு சொன்னா எப்படி?
மற்றவையெல்லாம் ஓகே.
//நாஞ்சில் பிரதாப் said...
மனைவி முன்னாடி பலபேருக்கு பேசுறதே பெரிய விசயம்...//
நீங்களும் நம்மாளுதானா? ok.. ok...
//maddy73 said... This is being latest, have more change of 'viewership'// Should be ...more சான்ஸ் of 'viewership'.
இப்ப என்கிட்டே மாட்டிக்கிட்டீங்களா? அப்பா... எப்படியோ மேடிகிட்ட தப்பு கண்டு பிடிச்சாச்சு.
மஞ்சத்தாத்தாவிடம் எப்படி பேசுவது..?
பச்சையம்மாவுடன் எப்படி பேசுவது..?
சதீஸொட மாமாவிடம் ( சரி..சரி..நம்ம கேப்டனுடன் ) எப்படி பேசுவது..?
சும்மா டமாசுங்க...
பதிவு நல்லாயிருக்கு...
அன்புடன் பட்டாபட்டி
இப்ப என்கிட்டே மாட்டிக்கிட்டீங்களா? அப்பா... எப்படியோ மேடிகிட்ட தப்பு கண்டு பிடிச்சாச்சு.
This is called 'Elephant'ukkum 'feet' sarukkum.
கணவருடன் எப்படி பேசுவது?
//malar said... கணவருடன் எப்படி பேசுவது?//
கணவருடன் கண்ணியத்துடன் பேசுங்கள்.
ஓகேயா மலர்? இல்ல, நீங்களே எப்படி அவங்க பேசணும்னு சொல்லிடுங்கலேன்.
வரவுக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
//பட்டாபட்டி.. said... மஞ்சத்தாத்தாவிடம் எப்படி பேசுவது..?//
அதுல்லாம் நீங்கதான் எக்ஸ்பர்ட். என்னைய இழுத்து விட்டுடாதீங்க!
வரவுக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
yaruku entha visayam pudikumo antha visayaththi paththi avanga kitta pasuna avanga nammidam athigam pesa aasai paduvanga. athanala yarutayavathu ninga friend da irukanumnu aasappatta avangaluku entha visayam pudikumnu therinchiko.
by
nithedavid
Post a Comment