Thursday, November 24, 2011

இருபது லட்சம் ஹிட்ஸ் - Why this kolaveri ...Di உலகம் முழுவதும் பிரபலம்.



"3" படத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இருபது லட்சம் ஹிட்ஸ். "தி இந்து" நாளிதழில் முதல் பக்கத்தில் விமர்சனம். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மொழி வானொலிகளிலும் பாடல் ஒலிபரப்பு. இதுவரை  சமீப காலத்தில்  எந்த ஒரு தமிழ் சினிமா பாடலுக்கும் கிடைக்காத  ஒரு  வரவேற்ப்பு  Why this kolaveri ...Di பாடலுக்கு கிடைத்து இருக்கிறது.

முதல் தடவை Why this kolaveri ...Di பாடலை கேட்ட போது என்ன பாடல் இது என்று தான் நான் நினைத்தேன்(இப்போதும்). ஆனால், மாற்றமாக ஒன்றை  தந்தால் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பதற்கு இந்த பாடலின் ஹிட் ஒரு  உதாரணம். 

இது பெண்களையும், ஆங்கிலம் பேசுபவர்களையும் அவமானப் படுத்துவதாக அமைந்திருக்கிறது என்ற குற்றசாட்டு எழுதுள்ள  வேலையில்,  அப்படி ஏதும் இல்லை என்கிறார் 3 படத்தின் இயக்குனர்  ஐஸ்வர்யா தனுஷ். தனுஷ் "ஆடுகளத்தில்" முன்பு உடைந்த ஆங்கிலத்தில் பேசியது அவருடைய காரக்டருக்கு நன்றாக இருந்தது. அது போல் முயற்சித்தால் என்ன என்று நினைத்தோம். அவ்வளவு தான். வேறொன்றுமில்லை என்கிறார்.

பத்து நிமிடத்தில் டியுன் போட்டு இருபது நிமிடத்தில் இப்பாடலை பதிவு  செய்திருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல, இங்கு அமெரிக்காவில் கூட என்னுடைய வட இந்திய நண்பர்கள் இப்பாடலை கேட்டுவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்கள். 

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்.

share on:facebook

3 comments:

Philosophy Prabhakaran said...

// பத்து நிமிடத்தில் டியுன் போட்டு இருபது நிமிடத்தில் இப்பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். //

இதெல்லாம் வழக்கமா சினிமாக்காரங்க பேட்டியில சொல்றது தானே...

ரைட்டர் நட்சத்திரா said...

அப்படியோவ்

Madhavan Srinivasagopalan said...

// பத்து நிமிடத்தில் டியுன் போட்டு இருபது நிமிடத்தில் இப்பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். //

இதை நான் நம்பள..
அப்படியே இருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமில்ல.. எந்த ஒரு அருமையான விஷயமும் ஒரு நொடியில பொறி தட்டினா போதும்.. உதாரணம் : யுரேகா...

Post a Comment