எவ்வளவு நாளாக அவளை உங்களுக்கு தெரியும்?
நான் சுமார் இரண்டு வருடங்கள் மூன்று மாதங்களாக தினமும் அவளை பார்த்து வருகிறேன்.
அவளுடைய பெயர் என்ன?
நான் அவளுக்கு வைத்த பெயர் விண்டி (Windy)
அவள் என்ன கலர்?
நல்ல வெள்ளை நிறம்.
அவளை அருகிலிருந்து பார்த்ததுண்டா?
இல்லை அதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனது அலுவலகத்தின் நான்காவது மாடியில் இருந்து பார்த்தால் அவள் தெரிவாள்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்ப்பீர்கள்?
அவளை ஒரு நாள் கூட நான் பார்க்காமல் இருந்ததில்லை. தினமும் அலுவலகம் நுழையும் முன்னும் பிறகு வீட்டிற்கு திரும்பும் முன்பும் கண்டிப்பாக அவளை பார்க்காமல் போனதில்லை. சில நேரங்களில் அவளை பார்க்க வேண்டும் போல் தோணும். உடனே ஓடி வந்து எட்டி பார்த்து விட்டு போய் விடுவேன்.
உங்கள் நண்பர்களுக்கு அவளை தெரியுமா?
ஓ... நான் எல்லோருக்கும் அவளை காண்பித்துள்ளேன். ஒன்று தெரியுமா? அவளை பார்த்த முதல் நாளிலுருந்து ஒவ்வொரு வருட முடிவிலும் நான் அவளுக்காக நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி வருகிறேன்.
இன்னும் எத்தனை நாட்கள் அவளை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணம்?
எனக்கு தெரியாது. இன்னும் சில நாட்கள் அல்லது மாதங்கள் ஏன் வருடங்கள் கூட பார்த்துக்கொண்டே இருக்கலாம்?
அவள் உங்களை விட்டு விலகி விடுவாள் என்று நினைக்கிறீர்களா?
தெரியவில்லை. ஒருவேளை இரண்டு வருடங்களுக்கு முன் அடித்தது போல் ஒரு மிக பெரிய காற்று அடித்தால் அவள் தற்போது தொங்கிக்கொண்டிருக்கும் மரத்திலிருந்து பறந்து போக வாய்ப்புண்டு.
காற்றடித்ததினால் பறந்து வந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிளாஸ்டிக் பையை இரண்டு வருடங்களாக தொடர்ந்து பார்த்துக்கொண்டு அதற்காக ஒவ்வொரு வருடமும் ஒரு கேக் வெட்டி கொண்டாடும் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எனக்கு தெரியும். இது ஒரு மிக பெரிய கிறுக்கு தனம் என்று. ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு அந்த பையின் மேல் ஏற்பட்டுவிட்டது.
நன்றி Kathy Fedrick அவர்களே. எங்கள் வானொலி நிலையத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்து உங்கள் (பை) காதல் கதையை பகிர்ந்து கொண்டதற்கு.
மேலும் விபரங்களுக்கு...
ஒண்ணும் இல்லங்க. அமெரிக்காவில் ஒரு FM வானொலியில் நேயரிடம் எடுக்கப்பட்ட பேட்டி இது. இதெல்லாம் அமெரிகாவில் சகஜமுங்க.
share on:facebook
4 comments:
படத்தை தவிர்த்து, அல்லது வேறு ஒரு படம் போட்டிருந்தால், சஸ்பென்ஸ் இருந்திருக்கும். :)
பேசுவது, பெண்ணைப் பற்றி அல்ல என்பது முதலிலேய நன்றாக தெரிந்தது....
இருந்தாலும் 'பிளாஸ்டிக் பை' யை, ஏன், 'பெண்பால்' போன்று சொன்னார்கள் என்பது புலப்படவில்லை..
நல்லபடியாக மொழி பெயர்த்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
////இருந்தாலும் 'பிளாஸ்டிக் பை' யை, ஏன், 'பெண்பால்' போன்று சொன்னார்கள் என்பது புலப்படவில்லை.. ////
.... same question. :-)
நன்றி பின்னோக்கி. எனக்கும் அப்படி தான் முதலில் பட்டது. அனால் கூகிளில் தேடியவுடன் அந்த படம் பொருத்தமாக கிடைத்து விட்டது. அதனால் அப் லோட் செய்து விட்டேன்.
இந்த படம் எப்படி இருக்கு?
Post a Comment