Wednesday, November 23, 2011

ஜெயலலிதா "பெயில்"




செய்தி: பெங்களூரு நீதிமன்றத்தில் நான்கு நாட்களில் கேட்கப்பட்ட ஆயிரத்து முன்னூற்று  முப்பத்தொன்பது கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு "தெரியாது", "மறந்து போயிற்று" என்று தமிழக முதல்வர் பதில்.

இப்ப சொல்லுங்க, ஜெயலலிதா மேடம் "பெயில்" தானே?

share on:facebook

6 comments:

Anonymous said...

தெரியாது அல்லது மறந்துவிட்டது, மறந்து போயிற்று என்ற பதில்கள்
பற்றி எனக்குத் தெரிந்த வரை,
இன்டியன் எவிடென்ஸ் ஆக்ட் படி ஒப்புக்கொள்ளப்பட்ட பதில்களே.
தெரியாதனவற்றை தெரியாது என்று கூறுவது சரியே.
தெரிந்தவற்றையும் தெரியாது எனக்கூறுகிறார் ஒருவர் என்றால் அதை நிதானிப்பதற்கு
மற்ற கேள்விகளின் துணையோடு ஒப்பிட்டுச் சொல்ல இயலும்.

இதுபோன்றே, மறந்து போயிற்று என்ற பதிலும் ஆகும்.நினைவு இல்லாதவன வற்றை
ஒரு ஊகத்தின் அடிப்படையில் சொல்வது ஒப்புக்கொள்ளத்தக்கன அல்ல. ( உதாரணமாக,
நீங்களோ நானோ 41 C பஸ்ஸில் செல்கிறோம். அதில் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்து
முணமுணத்துக்கொண்டே வந்தார். இது சில வாரங்களில் மறந்து போகும். அதே சமயம்,
அந்த பஸ்ஸில் உங்களது மணிபர்ஸ் கெட்டுப்போய் விட்டது. யாரோ பிக் பாக்கெட்
அடித்துவிட்டார்கள், என்றால் அது சில மாதங்கள் நினைவில் இருக்கும். இருப்பினும்,
அடிக்கடி நீங்கள் பல பொருட்களை, பேனாக்களை, மனி பர்ஸுகளைத் தொலைத்துவிடுகிறீர்கள்
என்றால், இந்த குறிப்பிட்ட தொலைப்பும் மறந்து போகும். )
ஆகவே, கால ப்போக்கில் மறப்பது short term amnesia இயற்கை. selective amnesia என்பது வேறு.
ஒரு விஷயத்தை மறைப்பதற்காக, மறந்து போயிற்று என்று சொல்லப்படும்பொழுது,
அதை எவ்வாறு மறக்க இயலாது என்பதையும், உண்மையில் மறக்கவில்லை, மறந்து
போயிற்று என்று சொல்கிறார் ஒருவர் என்பதை நிரூபிப்பதற்கு இயலும்.

இந்த எனது கமென்ட்ஸ் பொதுவானவை. ஜூரிஸ்ப்ரூடன்ஸ் எனச்சொல்லப்படுவதில்
இருக்கும் சில அடிப்படைகள்.

These comments are not with any reference to the case you are describing above.

SURYAJEEVA said...

bailஆ failஆ சரியாக சொல்லுங்கள்... நான் எதை எடுத்துக் கொள்வது???????????

Madhavan Srinivasagopalan said...

// ஆயிரத்து முன்னூற்று முப்பத்தொன்பது //

அவங்க சுமார் பத்து பதினஞ்சு கேள்விய மட்டுமே படிச்சிட்டுப் போயிருப்பாங்க.. அதான் மத்த கேள்விகள சரியா ஆன்சர் (அட்டென்ட்) செய்ய முடியல..

ஆதி மனிதன் said...

அனானி. மிக நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.

நீங்கள் கூறுவதும் ஒரு வகையில் சரிதான். ஆனால், விட்டால் வளர்ப்பு மகனுக்கு திருமணம் ஆகிவிட்டாதா என்றே எனக்கு ஞாபகம் இல்லை என கூறிவிடுவார் போலிருக்கே!

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி Suryajeeva.

நான் "Fail" என்று தான் கூறினேன். "Bail" ஆ என்பது நீதிபதியின் கையில் இருக்கிறது.

ஆதி மனிதன் said...

நன்றி மாதவன்.

பேசாமல் நீங்கள் "அம்மா"வுக்கு வக்கீலாக போய்விடலாம்.

Post a Comment