Thursday, February 23, 2012

உலகின் மிக பெரிய பீரங்கி - தஞ்சையின் பெருமை

உலகின் சக்தி வாய்ந்த பீரங்கி வேண்டுமானால் தற்போது அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கலாம். ஆனால், நான்கு  நூற்றாண்டுகளுக்கு முன் உலகின் மிக பெரிய பீரங்கியை உருவாக்கி அதை  தன நாட்டு பாதுகாப்புக்கு உபயோகித்தது தஞ்சையை சேர்ந்த அரசர் ஒருவர் தான்.

தஞ்சை கீழ அலங்கத்தில் அமைந்துள்ள பீரங்கி மேட்டில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த பீரங்கி அப்போது தஞ்சையை ஆண்ட  ரகுநாத  நாயக்கால் 1920 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. எதிரிகளிடமிருந்து  நாட்டை காப்பாற்றி கொள்ள வடிவமைக்கப் பட்ட இந்த பீரங்கி டானிஷ்  (டென்மார்க்) தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப் பட்டது.

சுமார் 26 அடி நீளமும், 22 டன் எடை கொண்ட இந்த பீரங்கி போர்ஜ் வெல்டிங்  மூலம்  செய்யப்பட்டது. போர்ஜ் வெல்டிங், காஸ்டிங் மூலம் செய்யப்படும்  பொருளை  விட மிகவும் வலுவானதாக இருக்கும். அதுவே இத்தனை   நூற்றாண்டுகள் ஆகியும் இப்பீரங்கி இன்றும் மலையிலும் வெயிலிலும்     காய்ந்தாலும் துரு பிடிக்காமல் இருக்க காரணம்.

சுமார் 300 மில்லி மீட்டர் வெளி சுற்றளவும் 150 மில்லி மீட்டர் உள் சுற்றளவும் கொண்ட இப்பீரங்கியை தூக்க எட்டு வளையங்கள் மேலே  பொருத்தப் பட்டுள்ளன (அவற்றில் தற்போது இரண்டு வளையங்கள் மட்டுமே உள்ளன). 43 இரும்பு பட்டைகளும், 94 வலையங்களினாலும்  உருவாக்கப் பட்டுள்ள இப்பீரங்கி, எதிரிகள் தஞ்சையின் கீழ வாசல்  வழியாக நுழைவதை தடுக்க இந்த இடத்தை தேர்ந்தெடுத்து  அமைத்துள்ளார்கள்.

இந்த பீரங்கி மேடு தொல்பொருள் துறையின் கீழ்  வந்தாலும் அவற்றின் சட்ட திட்டங்கள் எதுவும் பின்பற்ற படுவதாக தெரியவில்லை. உதரணமாக, சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தால் இரவில் சமூக விரோதிகளாலும், சுற்றிலும் ஆடு மாடுகள் வளர்க்கப்பட்டு வருவதாலும் இப்பீரங்கி மேடையின் அழகும் பாரம்பரியமும் அழிந்து கொண்டு வருகிறது.   இம்மேடையின் மீதிருந்து தஞ்சையின் நாயக் அரண்மனையையும், அதன் அருகே அமைந்துள்ள ராஜா காலத்து ஏழடுக்கு  மாளிகையையும் காண முடியும்.

தஞ்சை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து  சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பீரங்கி மேடையை சென்று  பாருங்கள். நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்  நம் மூதாதையர்களின்  அறிவையும், திறனையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

படம் உதவி: கூகுல் ஆண்டவர்.

தஞ்சை பற்றிய மற்ற பதிவுகள் இதோ...

சொர்க்கமே என்றாலும்...தரணி போற்றும் தஞ்சை தொடர்

சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போலாகுமா...share on:facebook

11 comments:

ஆரூர் மூனா செந்தில் said...

பீரங்கி மேட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி கீழ அலங்கத்தில் தான் என் அத்தையின் வீடு உள்ளது. எனக்கு தெரிந்து பலருக்கு தெரியாமல் இருந்த நம்ம ஊரின் பெருமையை அறிய வைத்ததற்கு நன்றி.

Sankar Gurusamy said...

அரிய தகவல். இப்படி இன்னும் எத்தனை பொக்கிஷங்களை நம் அலட்சியத்தால் இழந்து கொண்டிருக்கிறோம் என தெரியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி...

http://anubhudhi.blogspot.in/

ஆதி மனிதன் said...

நன்றி ஆரூர் மூனா செந்தில்.

அடுத்த முறை உங்கள் அத்தை வீட்டுக்கு சென்றால் அவசியம் பீரங்கி மேட்டை சென்று பாருங்கள்.

ஆதி மனிதன் said...

நன்றி சங்கர் குருசாமி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

Anonymous said...

good information
by
nagaindian.blogspot.com

Madhavan Srinivasagopalan said...

Beer-Angi ?

மோகன் குமார் said...

Is it close to Old bus stand? I have not seen it yet !!!

ஆதி மனிதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரத்னவேல்.

நன்றி nagaindian.blogspot.com.

ஆதி மனிதன் said...

நன்றி மாதவன். வழக்கமான மாதவன் குசும்பு :)

ஆதி மனிதன் said...

ஆம், மோகன்.

கீழவாசல் ரவுண்டானா அருகே அமைந்திருக்கும் இந்த மேடை பல பேருக்கு அங்கு இருப்பது கூட தெரியாது. மேலும் பீரங்கி அமைக்கப் பட்டிருக்கும் இடம் உயரமான இடத்தில் இருப்பதால் கீழிருந்தும் தெரியாது.

Post a Comment