Wednesday, February 8, 2012

அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா?

அமெரிக்கர்கள் தங்களை அதிகாரம் செலுத்தி வந்த ஐரோப்பியர்களிடம் இருந்து விடுதலை வாங்கிய பின் ஒன்று, புதிது புதிதாக கண்டு பிடித்தார்கள் அல்லது அது வரை ஐரோப்பியர்கள் உபயோகித்து வந்த எல்லாவற்றையும் மாற்றி அமைத்தார்கள். அதனால் தான் இன்றும் அமெரிக்கா செல்பவர்களுக்கு முதலில் பல விஷயங்கள் புதிதாக தெரியும்.

அமெரிக்க பள்ளி கல்வி முறையும் அப்படிதான். இங்கு பள்ளி கூடத்தில்  ஒவ்வொரு பீரியட் முடிந்தவுடன் மாணவர்கள் தான் அடுத்த பாடத்திற்காக வேறு அறைகளுக்கு செல்ல வேண்டும். அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு அறை உண்டு. வெவ்வேறு பிரிவுகளில் இருந்து மாணவர்கள் தான் மற்றொரு பாடத்திற்காக வேறு வேறு அறைகளுக்கு செல்ல வேண்டும். ஆசிரியர்கள் ஒரே அறையில் தான் இருப்பார்கள்.

அதே போல், ஒவ்வொரு நாளும் P.E. எனப்படும் உடற் கல்வி இங்கு  கட்டாயம். பொதுவாக P.E. யில் மைல் ஓட வைப்பார்கள். அதாவது,  வருடத்தின் முதல் உடற் கல்வி வகுப்பின் போது எல்லோரையும்  கையில் கடிகாரம் இன்றி ஒரு மைல் ஓட சொல்வார்கள். ஒரு மைல் ஓடி முடிக்கும் போது எவ்வளவு நேரம்  எடுத்துக் கொண்டார்கள்  என குறித்துக் கொள்வார்கள். அடுத்த நாளில் இருந்து, தினமும் முதல் நாள்  எடுத்துக் கொண்ட நேரத்துக்கு அதிகமாகாமல்  ஒவ்வொரு நாளும் எல்லோரும் ஒரு மைல் ஓடி முடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களின் கிரேட் குறைந்து விடும். ஆம், உடற் கல்வி மதிப்பெண்களும் கிரேட் சிஸ்டத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இன்னொரு முக்கிய அம்சம், எல்லோரும் இங்கு எதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் வகுப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, இசை கருவி வாசித்தல், அல்லது நாடகம் நடித்தல் என எதாவது ஒன்று கட்டாயம் பழக வேண்டும். இதுவும் கிரேட் சிஸ்டத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கென்று தனியே லாக்கர் வசதிகள்  உண்டு. உடற் கல்வி வகுப்பின் போது மாணவர்கள் தங்கள் உடைகளை  மாற்றி கொள்வதற்கும்  தங்களின் வாத்திய கருவிகளை பாத்து காப்பாக  வைத்து கொள்வதற்கும் இது பெரிதும் உதவும். ஆனால், அதே நேரம் பல பள்ளிகளில் பாத்ரூம்களில் முகம் பார்க்கும்  கண்ணாடிகள் இருக்காது. மாணவ/மாணவிகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவே இப்படி. 

இவையெல்லாம் அமெரிக்காவில் உள்ள பப்ளிக் ஸ்கூலில் பொதுவாக உள்ள நடை முறைகள். சில மாகாணங்களில் அம்மாகான சட்டத்திற்கு ஏற்ப வேறு மாதிரியாகவும் இருக்கும். அது தவிர தனியார் பள்ளிகள் எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது. ஏனென்றால் இங்கு பப்ளிக் பள்ளிகளே அதிகம். தனியார் பள்ளிகள் மிகுந்த காஸ்ட்லி ஆனதும் கூட.

படம்: என் குழந்தைகள் படித்த அமெரிக்க அரசு பள்ளி.

இன்னும் பல சுவாரசியங்கள். அடுத்த பதிவில்...

அமெரிக்கா பற்றிய வேறு சில சுவாரசிய பதிவுகள்...

டாலர் பிச்சை
பேய் விரட்டும் அமெரிக்கர்கள்

share on:facebook

3 comments:

Sankar Gurusamy said...

புதிய தகவல்கள்.. உடற் பயிற்சிக்கும் எக்ஸ்ட்ரா கரிகுலர் வகுப்புகளுக்கும் முன்னுரிமை அளிப்பதை அறிந்து வியப்பாக இருக்கிறது. இங்கு நம் நாட்டில் இவை இன்னும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படாமல் வெறும் ஏட்டளவிலேயே இருக்கிறது.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

CS. Mohan Kumar said...

சுவாரஸ்யம் . தொடருங்கள்

Madhavan Srinivasagopalan said...

//அமெரிக்க பள்ளி கல்வி முறையும் அப்படிதான். இங்கு பள்ளி கூடத்தில் ஒவ்வொரு பீரியட் முடிந்தவுடன் மாணவர்கள் தான் அடுத்த பாடத்திற்காக வேறு அறைகளுக்கு செல்ல வேண்டும். //

Our system is better.. since only teachers move from one class to the other.

Rest of the points are very nice... if we also follow. These days here some school encourages xtra curricular but optional. My son leans TT this year under extra curricular activity.

Post a Comment