எந்த நேரத்தில் "காப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை" என தலைப்பிட்டு இந்த பதிவை போட்டேனோ. நேற்று தமிழக சட்ட மன்றத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை பார்க்கும் போது மேலே உள்ள தலைப்பு உண்மை ஆகிவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் ஒன்று. சட்ட சபையில் நடந்த விவாதத்தில்(சண்டையில்), முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதா என்னமோ ஒரு கட்சி பொது கூடத்தில் எதிர் கட்சியை சவால் விட்டு பேசுவது போல் விஜயகாந்த்தை நோக்கி பேசியதும், அதன் பிறகு அக்கட்சியினரை பார்த்து விஜயகாந்த் ஏதோ சினிமாவில் வில்லன்களை பார்த்து சவால் விடுவது போல் நடந்து கொண்டதும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக சபாநாயகர் எதிர் கட்சியினரை மன்றத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்ட தொனியில் தெரிந்த அலட்சியமும், இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது இவர்களை சட்ட மன்றத்திற்கு அனுப்பியதற்கு நாம் தான் வருத்தப் பட வேண்டும், வேதனைப் பட வேண்டும்.
அந்த அறிய கட்சியை பார்க்க தவறியவர்கள் இங்கே பார்க்கலாம்...
காணொளி நன்றி: நக்கீரன் வெப் டி.வி.
share on:facebook
1 comment:
அரசியலில் நாகரீகம் தொலைந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டன!
Post a Comment