Tuesday, February 28, 2012

அமெரிக்க அவஸ்தைகள் : அபார்ட்மென்ட் கட்டுபாடுகளும் லீஸ் தொல்லைகளும்...


ஒரு காலத்தில் சென்னையில் வாடகை வீட்டில் மாறி மாறி குடியிருந்த போது ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் ஒவ்வொரு வகையான கண்டிசன்கள் போடுவார்கள். ஆனால், எனக்கு தெரிந்து அதிக பட்சமாக பத்து பன்னிரண்டு கண்டிசன்கள் இருக்கும். அதுவும் எல்லாம் ஒரே மாதிரியானவை. ஒன்று முதல் ஐந்தாம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும், அதை உடைக்க கூடாது இதை உடைக்க கூடாது என்று. சென்னை வீட்டு உரிமையாளர்களின் சர்வதிகார போக்கை பற்றி ஒரு பதிவே போடலாம்.

அதுக்கே விழி பிதுங்கிய நான், இங்கு கலிபோர்னியாவில் ஒவ்வொரு லீஸ் அக்ரீமென்ட் கை எழுத்து போட்டு முடிக்கும் முன் என் பேனாவில் உள்ள இங்க்கே தீர்ந்து போய் விடும். அந்த அளவிற்கு கண்டிசன்கள். எல்லாம் சட்டத்தை மேற்கோள் காட்டி வேறு. அக்ரிமெண்டில் உள்ள சில முக்கிய கண்டிசன்கள் கீழே...


# ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதிக்குள் வாடகை செலுத்தி விட வேண்டும். இல்லை என்றால் முப்பத்தி ஐந்து டாலர் பைன்.


# செக்கூரிட்டி டெபாசிட் $ 500. இது ஆற்றில் போட்ட கல். திரும்பி நமக்கு கிடைக்கவே கிடைக்காது.

# $ 1,00,000 க்கு ஆன ரெண்டர்ஸ் இன்சூரன்ஸ் கட்டாயம். நம் பணத்தில் நாம் குடி இருக்கும் வீட்டிற்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை தவிர கீழே வரும் அனைத்து கண்டிசன்களுக்கும் பக்கத்துக்கு பக்கம் என் கையெழுத்து மட்டும் இன்றி வீட்டு எஜமானி அம்மா கையெழுத்தும் அவசியம்.

# Additional Occupants Addendum : அதாவது அக்ரிமெண்டில் குறிப்பிட்டுள்ள நபர்களை தவிர வேறு யாரும் வீட்டில் தங்கி இருக்க கூடாது. ஊரிலிருந்து அம்மா அப்பாவை அழைத்து வந்தால் கூட ரெண்டல் ஆபிஸிற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலனோர் இதை கடை பிடிப்பதில்லை.

# Asbestos Addendum : இந்த அபார்ட்மெண்டில் ஆஸ்பெஸ்டாஸ் உபயோகம் உள்ளது. அதனால் ஏற்படும் உடல் நல குறைவிற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த அறிவிப்பை அனேகமாக கலிபோர்னியாவில் எங்கும் காணலாம்.    

# Bedbug Addendum : வீட்டில் மூட்டை பூச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வந்து விட்டால், வீட்டில் உள்ள, மெத்தை, தலையணை, துணி மணிகள் என்று எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட வேண்டும். வீட்டை கம்ப்லீடாக அவர்கள் மீண்டும் பூச்சி மருந்து அடித்து சுத்தம் செய்யும் வரை உள்ளே அனுமதி இல்லை.

# Business Center Agreement : அபார்ட்மென்டில் உள்ள பிசினஸ் சென்டரை உபயோகிக்க 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், அல்லது துணை இருக்க வேண்டும். இன்டர்நெட், ஈமெயில், பிரிண்டர் என அனைத்து வசதிகளும் இங்கு இலவசம்.

# Carpet Care Instructions : வீட்டில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து இருக்கும் கார்பெட்டை பத்திரமாக, அதே நேரத்தில் சுத்தமாக பேணி காக்க வேண்டும். இல்லையேல் வரும் போது அவர்கள் சுத்தம் செய்ய நம் கை காசை அழ வேண்டும்.

# Fitness Center : பிட்நெஸ் சென்டரின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ். அதுவும் எங்கள் அபார்ட்மென்டில் பிட்நெஸ் சென்டர் காலை 8 மணி முதல் மாலை ஆறு மணி வரை தான் திறந்து இருக்கும். ஆபீசுக்கு லீவு போட்டு விட்டா ஜிம்முக்கு போக முடியும்?

# Grilling Addendum : இங்கு பார்பிகு மிகவும் பாப்புலர். அட அது ஒன்றும் இல்லைங்க. நம்மூர் பாட்டி வடை சுட்டு கொடுப்பாரே. அது போல் தான். சிக்கன் பீஸ், மீன் துண்டுகளை எலெக்ட்ரிக்/அடுப்புக் கரி க்ரில்களில் வைத்து வறுத்து சாப்பிடுவது தான். அந்த க்ரில்களை போர்டிகோவில் எங்கு வைக்கலாம். எங்கு வைக்க கூடாது, எப்படி பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்பதற்கு ஒரு அக்ரிமென்ட்.

 # House Rules #2 : அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ் உள்ளே எப்படி நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் விளையாடும் பார்க் ரூல்ஸ். சத்தமாக பாட்டு வைக்க கூடாது. ஸ்விமிங் பூல் விதி முறைகள் என அனைத்து கண்டிசன்களும்  இங்கு. குழந்தைகள் பார்க்கில் விளையாடும் போது பெரியவர்கள் கூடவே இருத்தல் வேண்டுமாம். பேசாம அதுக்கு நம்ம வீட்டிலேயே குழந்தைகளை வைத்துக் கொள்ளலாம்.

இன்னும் வரும்...  

"அடச் சே" அமெரிக்கா பற்றிய மற்ற சில பதிவுகள் கீழே...

அமெரிக்கா போறீங்களா? இத படிங்க முதல்ல...

அட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.

share on:facebook

10 comments:

Sankar Gurusamy said...

உலகத்தில் எல்லா மூலையிலும் ஹவுஸ் ஓனர் என்பவருக்கு கொம்பு முளைத்துத்தான் இருக்கிறதுபோல...

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Madhavan Srinivasagopalan said...

அடாடா.. இந்த ஹவுஸ் ஓனரோட தொல்ல தாங்கல....

ம்ம்ம்.. ஆணி அடிக்கக் கூடாது..
சொவத்துல (குழந்தைகள்) கிறுக்கக் கூடாது ...
வுட் வொர்க் (கதவு, ஜன்னல், செல்ஃப்) கீறல் இல்லாம இருக்கணும்..
சமையல் அறையில என்னைப் பசை நீடிக்கக் கூடாது... (தங்கிடாம அடிக்கடி கிளீன் பண்ணனும் )
டாயிலட் வெள்ளை வெளேர்னு இருக்கணும்... மட்டமான ஆசிட் யூஸ் பண்ணக் கூடாது.. உயர்ந்த ரக டாயிலெட் க்லீனர்தான் யூஸ் பண்ணனும்..

--- டெனண்டின் புலம்பல்கள் ..
**********************

கண்ட இடத்துல ஆணி அடிச்சிடறாங்க..
செவரு பூரா ப்ளாக் போர்ட் ஆயிடுது.... (வாலுப் பசங்கள பெத்திருக்காங்க )
செல்ஃப், ஜன்னல், வாசல் -- எல்லா கதவுளையும் சீட் சீட்டா பேந்திருக்கு.. .
சமையல் ரூம்ல என்னை, மசாலா கரை.. போகவே இல்லை...
பப்ளிக் டாயிலட் மாதிரி வெச்சிருக்கானுக...

ஹவுஸ் ஓனர் புலம்பல்கள் ..


நீதி ..: அவனவன் கவலை அவனுக்கு..

NKS.ஹாஜா மைதீன் said...

இதற்கு பேசாமல் ஹோட்டலில் தங்கலாமோ?

arunrajamani said...

If you return the house properly, the security deposit will be returned. I got my deposit back. It is not ஆத்துல போட்ட கல்.

முகுந்த் அம்மா said...

Sir,

Families expectantly Indian families with
Kids encounter one more problem from the apartment office; the noise problem.
Indian kids make more noise so we often get letters from apartment office to be quiet. Sometimes neighbors complain to police about the noises. I had seen many of my friends encountering this problem.

Good post
M

ஆதி மனிதன் said...

நன்றி சங்கர்:

//உலகத்தில் எல்லா மூலையிலும் ஹவுஸ் ஓனர் என்பவருக்கு கொம்பு முளைத்துத்தான் இருக்கிறதுபோல...//

ஆமாம். சில நேரங்களில் எனக்கும் (நமக்கும்) கொம்பு முளைத்து விடும். ஹி ஹி..நானும் ஒரு ஹவுஸ் ஒணராக்கும்(இந்தியாவில்).

ஆதி மனிதன் said...

நன்றி மாதவன்:

//-- டெனண்டின் புலம்பல்கள் ..

ஹவுஸ் ஓனர் புலம்பல்கள் ..//

உங்கள் பொலம்பல் முதலாவதா? இரண்டாவதா?

ஆதி மனிதன் said...

நன்றி ஹாஜா மைதீன்:

//இதற்கு பேசாமல் ஹோட்டலில் தங்கலாமோ? //

சில நேரம் அப்படி தான் தோணும். இங்கு வாடகை வீட்டை ஒப்பிடும்போது ஓட்டல்கள் சற்று மலிவுதான். ஆனாலும், வீடும் ஓட்டலும் ஒன்றலவே!

ஆதி மனிதன் said...

நன்றி அருண்ராஜாமணி :

நானும் ஒரு தடவை முழு டெபாசிட்டையும் திரும்பி வாங்கி இருக்கிறேன் (மினசொட்டவில்). ஆனால், இங்கு என்ன தான் சுத்தமாக வைத்திருந்தாலும் போகும் போது நிறைய சார்ஜஸ் போடுவார்கள் என கேள்விப் பட்டேன்.

ஆதி மனிதன் said...

நன்றி முகுந்த் அம்மா:

ஆம், இந்தியர்களுக்கு குழந்தைகள் சத்தம் ஒரு பிரச்னை தான். அதனால் தான் எப்போதும் நான் லோயர் ப்ளோர் எடுத்துக் கொள்வேன். நீங்கள் சொன்னது போல் ஒரு தடவை என் குழந்தையுடன் இன்னொரு குழந்தையும் சேர்ந்து சத்தம் போட்டு விளையாடியபோது பக்கத்து வீட்டு பாட்டி ரெண்டல் ஆபீசில் கம்ப்ளைன்ட் செய்து விட்டார்.

Post a Comment