Thursday, February 17, 2011

கலைஞர் டி. வி. ஆபீசில் சி. பி. ஐ. அதிரடி ரெய்டு. விடிய விடிய சோதனை.


தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது. அதே நேரத்தில் ஒரு முதல்வரின் குடும்பத்தோடு சம்பத்தப்பட்ட நிறுவனத்தில் பண 
பரிவர்த்தனை மற்றும் நாடே பேசப்பட்ட ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் 
தொடர்பு படுத்தி சி. பி. ஐ. ரெய்டு நடத்துகிறதென்றால் நமக்கு நாமே கிள்ளிப் 
பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

அதுவும் மத்திய அரசில் கூட்டணி பொறுப்பு வகிக்கிற ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அந் நிறுவனத்தின் அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு. என்னால் நம்ப முடியவில்லை. நாம் இருப்பது இந்தியாவில் தானா?

நள்ளிரவு ஆரம்பித்த சி. பி. ஐ. ரெய்டு காலை ஐந்து மணி வரை தொடர்ந்ததாகவும், பத்துக்கும் மேற்ப்பட்ட சி. பி. ஐ. அதிகாரிகள் ஆவன சோதனையில் ஈடுப்பட்டதாகவும் செய்திகள்
தெரிவிக்கின்றன. அதே போல் கலைஞர் டி. வி.யின் நிர்வாக இயக்குனர் திரு. சரத் குமாரின் இல்லத்திலும் ரெய்டு நடந்ததாக தெரிகிறது.       

சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கலைஞர் டி. வி. நிர்வாகத்தில் கலந்துள்ளதாக சி. பி. ஐ. சந்தேகிக்கிறது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கலைஞர் டி. வி. நிர்வாகம், எங்களிடம் எல்லா கணக்கு வழக்குகளும் முறையாக உள்ளது. நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

இதே போல் போபோர்ஸ், காமன் வெல்த் கேம்ஸ், பிறந்தநாள்  அன்பளிப்பாக பெறப்பட்ட வெளிநாட்டு டாலர்கள் என  எந்த ஊழல் நடந்தாலும் முதலில் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தி கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும்.
 
கடைசியில் இந்த சோதனையை தேர்தலுக்கு அதிக தொகுதிகள் கேட்டு பெற பயன்படுத்தும் ஆயுதமாக ஆக்கி விடாமல் இருந்தால் சரி. அரசியலில் எதுவும் நடக்கலாம். அங்கு நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை. கவுண்டமணி பாணியில் சொன்னால், "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா".
 
சரி, சரி, நீங்க வர தேர்தலில யாருக்கு வேணா வோட்டு  போடுங்க. இப்ப இந்த சூடான நியூசுக்கு உங்க வோட்ட எனக்கு போட்டுடுங்க...



share on:facebook

5 comments:

சக்தி கல்வி மையம் said...

கடைசியில் தேர்தலுக்கு அதிக தொகுதிகள் பெற பயன்படுத்தும் ஆயுதமாக ஆகி விடாமல் இருந்தால் சரி. ///இது தாங்க உண்மை..

See',

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_18.html

CS. Mohan Kumar said...

நிஜமாவா? நட்சத்திர வார மயக்கத்தில் இருப்பதால் செய்தியே பார்க்கலை . ம்ம் நீங்க சொன்ன மாதிரி அதிக சீட் வாங்க யூஸ் பண்ணாம இருந்தா சரி

Madhavan Srinivasagopalan said...

//அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு. என்னால் நம்ப முடியவில்லை. நாம் இருப்பது இந்தியாவில் தானா? //

யோசிச்சுத்தான் இக்கேள்விய கேட்டீங்களா..?

சாய்ராம் கோபாலன் said...

//கவுண்டமணி பாணியில் சொன்னால், "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா".//

அதுதான் உண்மை. இது எல்லாம் சால்ஜாப்பு ஆதி.

ஸ்ரீராம். said...

விடிய விடிய சோதனை....

விடிஞ்சுது போங்க....இதெல்லாம் இன்னுமா நம்பறீங்க... அப்புறம் எப்படி பூசி மொழுகறாங்க பாருங்க

Post a Comment