Friday, February 18, 2011

'Rajini - Entertainer of the decade' - ஒரு ரசிகனின் வாழ்த்தும் வினாவும்?


ரஜினி - இந்த ஒரு பெயருக்கு தான் என்ன ஒரு வசீகரம், புகழ், பெருமை. இன்று உள்ள இளைய சினிமா ரசிகர்களுக்கு விஜய், சூர்யா, அஜீத், கார்த்திக், விசால், தனுஷ் என்று பல நட்சத்திரங்கள் இருகிறார்கள். ஆனால் நாங்கள் சினிமா பார்க்க தொடங்கிய காலத்தில் எங்களுக்கு ரஜினி கமலை தவிர வேறு யாரும் பெரிய நடிகர்களாக தெரியவில்லை.  

அப்படிப்பட்ட ரஜினிக்கு தான் சமீபத்தில் NDTV - Entertainer of  the decade என்ற மிக பெரிய விருதை தந்து கவுரவித்து இருக்கிறது. 
பொதுவாகவே வட இந்திய சினிமா உலகம் தான் இன்றளவும் இந்திய சினிமாவின் முகமாக இந்தியா முழுமையும் வெளி நாடுகளிலும் 
இருந்து வருகிறது. என்ன தான் தென் இந்திய படங்கள் தரமாகவும் பிரமாண்டமாகவும் எடுத்தாலும்  அது அவர்களிடம் பேசப் படுவதில்லை. இது இந்தியா தாண்டி வெளி நாட்டிற்கும் பொருந்தும்.

அந்த வகையில், வட இந்திய தொலைக்காட்சி ஒன்று எந்திரனை பாராட்டியும், ரஜினியை NDTV - Entertainer of  the decade என்று கவுரவித்தும் பாராட்டி பட்டம் தந்தது ஒரு அறிய நிகழ்வே. இதில் வழக்கம் போலவே ரஜினி எளிமை காட்டியிருந்தாலும் வழக்கத்திற்கு மாறாக சம்மந்தம் சமந்தமில்லாமல் பேசாமல் அமைதியாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 

பிரணாய் ராய் ரஜினியை விழா மேடைக்கு வரவேற்றபோது 'தன்னடக்கத்தின் உருவம், தாராள குணம் படைத்தவர், இமாலய வெற்றிக்கு சொந்தக்காரர் என்றும், 'ஒரு நல்ல உள்ளம் படைத்த  மனிதாபிமானி என்றும் வரவேற்று பேசுகையில், 2010 இல் ஒரு திரை படம் காலை 4 மணிக்கு திரையிடப்பட்டு அது வரிசையாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது ஒன்றே போதும் அதன் 
வெற்றியையும் அவரின் புகழையும் பறைசாற்ற என்ற போது அரங்கமே கை தட்டி ஆராதித்தது.  

ஆனால் நிகழ்ச்சியின் போது பிரணாய் ராய் 'உங்கள் படங்களில் மிக பெரிய படைப்பாக எதை கருதுகிறீர்கள்' என ரஜினியிடம் கேட்டதற்கு, 'I hope so far ROBO is the best' என கூறியதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

ஒரு காலத்தில் ரஜினி படமென்றால் பெண்கள் பார்க்க போக மாட்டார்கள். குழந்தைகளையும் படம் பார்க்க அனுப்ப மாட்டார்கள். அதே ரஜினி, ஆறிலிருந்து அறுபது வரை, ஸ்ரீ ராகவேந்திரர், கை கொடுக்கும் கை என சிறந்த படங்களை தந்து தானும் ஒரு சிறந்த நடிகர் என்று நிருபித்த காரணத்தினாலும், தன்னுடைய வசீகரத்தாலும் தான் இன்றும் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவ்வாறான அவரின் சிறந்த படைப்புகளையெல்லாம் விட்டு விட்டு எந்திரனை தன் சிறந்த படைப்பாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.   

பரட்டைக்கு முன், அலெக்ஸ் பாண்டியனுக்கு முன், பில்லா பாட்சாவிற்கு முன் எங்களுக்கு ரோபோவும் சிட்டியும் ஒன்றுமே இல்லை. அது காகிதத்தில் செய்த ஒரு பிரமாண்ட டைடானிக். அவ்வளவுதான். 

அதே போல் மேடை ஏறி ரஜினிக்கு வாழ்த்து கூற வந்தவர்கள் எல்லாம் கத்ரினா கைப்பும், த்ரிக்சா போன்றவர்கள் தான் (ப. சிதம்பரம் தவிர்த்து). ஏன் பிரணாய் சார் உங்களுக்கு வேறு யாரும் கிடைக்கலையா, இல்லை தமிழகத்திலிருந்து வரும் கலைஞனுக்கு இது போதும் என நினைத்து விட்டீர்களா?     

அதே போல் கடைசியாக, தனக்கு கிடைத்த பேர் புகழ் எல்லாவற்றுக்கும் காரணம் என்னை இயக்கிய இயக்குனர்கள், படமெடுத்த தயாரிப்பாளர்கள் அவர்களை இயக்கிய அந்த ஆண்டவன் என எல்லோரையும் கூறிவிட்டு எங்களை மறந்து போனாயே தலைவா? இது உனக்கே நியாயமா? சரி அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போது எப்படி இருந்தாலும் எங்களை நாபகம் வரும். அப்போ சந்தோசப் பட்டுக்கொள்கிறோம். ஆமா எப்போ அடுத்த படம் தலைவா? 



share on:facebook

15 comments:

சக்தி கல்வி மையம் said...

சரியான கேள்வி...
வேடந்தாங்கல் தங்களை அழைக்கிறது...
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html

Madhavan Srinivasagopalan said...

வடை..

சாய்ராம் கோபாலன் said...

Why worry Aadhi ?

ஸ்ரீராம். said...

முள்ளும் மலரும் ...ரஜினியின் டாப் படங்களில் ஒன்று. "கெட்ட பய சார் காளி"

சிவகுமாரன் said...

நல்லா கேட்டீங்க சார் கேள்வி .

ஆதி மனிதன் said...

@Madhavan Srinivasagopalan said...
//வடை.. //

போச்சே

ஆதி மனிதன் said...

@சாய் said...
//Why worry Aadhi ? //

தமிழன் அல்லவா. இதுக்கெல்லாம் கவலை பட்டு தானே ஆக வேண்டும்.

ஆதி மனிதன் said...

@ஸ்ரீராம். said...

சரியாக சொன்னீர்கள் ஸ்ரீராம். அதுவும் அருமையான படம்.

ஆதி மனிதன் said...

@சிவகுமாரன் said...
//நல்லா கேட்டீங்க சார் கேள்வி . //


வாங்க சிவகுமாரன். நன்றி.

எல் கே said...

//ஒரு காலத்தில் ரஜினி படமென்றால் பெண்கள் பார்க்க போக மாட்டார்கள். குழந்தைகளையும் படம் பார்க்க அனுப்ப மாட்டார்கள். //

அண்ணே இது எப்ப நடந்தது. எனக்குத் தெரிந்து ரஜினி படம் அனைவரும் பார்ப்பது ஆரம்பத்தில் இருந்தே. உலகநாயகன் படம்தான் பார்ப்பது கடினம். ஆபாசமும்,இரட்டை அர்த்த பேச்சுகளில் காமெடியும்

Philosophy Prabhakaran said...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_1145.html

sathishsangkavi.blogspot.com said...

..எல்லோரையும் கூறிவிட்டு எங்களை மறந்து போனாயே தலைவா? இது உனக்கே நியாயமா?.

என்னிக்குமே தூக்கிவிடும் தமிழனை அனைவரும் மறந்துவிடுவார்கள்...

Unknown said...

சரியாக சொன்னீர்கள்

ஆதி மனிதன் said...

@சங்கவி said...

//என்னிக்குமே தூக்கிவிடும் தமிழனை அனைவரும் மறந்துவிடுவார்கள்... //

அது என்னவோ உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி.

Anonymous said...

SUPER STAR RAJINI KANTH IS GODGIFT to India specially to Tamilnadu. He is very gengleman.

Post a Comment