Wednesday, February 2, 2011

தோணியும் தோட்டாக்களும்...



உலகில் பல வருடங்களாக தீர்வு காணப்படாமல் இருக்கும் இன பிரச்சனைகளில் ஒன்று இலங்கை தமிழர் பிரச்னை. நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு வழியாக கடந்த சில வருடங்களுக்கு அது ஒரு முடிவுக்கு வந்தது(போல் இருந்தது).

ஆனால் மழை விட்டும் தூவானம் விடாதது போல், தமிழக மீனவர் பிரச்சனை மட்டும் இன்னும் தீரவேயில்லை. இலங்கையில் தமிழர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, புலிகளுக்கும் மற்ற போராளிகளுக்கும் தமிழக மீனவர்கள் டீசல் கடத்துகிறார்கள், பொருட்கள் சப்பளை செய்கிறார்கள், புலிகளுக்கும் தமிழக மீனவர்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என பல காரணங்களை கூறிக்கொண்டு தமிழக மீனவர்களை குருவி சுடுவது போல் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் தற்போது இலங்கையில் போரும் இல்லை போராளிகளும் இல்லை. இருந்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் நிற்கவில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சிறு மற்றும் ஏழை மீனவர்களே. பெரிய லாஞ்சர் மற்றும் விசை படகுகள் கூட இலங்கை ராணுவத்தினரிடம் சிக்குவதில்லை. ஆனால் சிறிய தோணிகளில் செல்லும் மீனவர்களே இலங்கை கடற்படையினரின் தோட்டாக்களுக்கு இரையாகிறார்கள்.

உலகில் ராணுவ பலத்தில் நான்காவது நிலையில் இருக்கும் இந்திய ராணுவமோ, கடற்படையோ சமாதானப்புறாக்களாக கைகட்டி எல்லவற்றையும் இன்னமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் இலங்கையிடம் நமக்கு பயமோ தெரியவில்லை.

இதில் ஒவ்வொரு முறையும் மீனவர்கள் சுடப்படும் போது மாநில மற்றும் மத்திய அரசுகள் கடிதம் எழுதுவதும், கண்டனம் தெரிவிப்பதும் மட்டுமே தங்கள் கடமை என நிறுத்திக்கொள்கிறது. நமக்கெல்லாம் எதற்கு ஒரு கடற்படை? ஒரு ராணுவ மந்திரி அல்லது ஒரு வெளியுறவு அமைச்சர் என புரியவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே அப்படி ஒன்றும் மிகப் பெரிய கடற் பகுதி இல்லை. ராமேஸ்வரத்திலிருந்து எட்டிப்பார்த்தால் இலங்கை தெரியும் என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறிய பகுதியை, நம் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும், நமக்கு உரிமையுள்ள கடற்பகுதியை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வக்கில்லை என்றால் நாம் அதற்காக வெக்கப்பட வேண்டும்.

தற்போது பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் பிரதமருக்கு தமிழக மீனவர் பிரச்னை பற்றி அதிகம் தெரியாது. நான் தான் எடுத்து கூறியுள்ளேன் என்கிறார். ஹ்ம்ம். இவர்களை நம்பினால் என்னாவது.

எப்படியோ ஏதோ ஒரு வகையில் நம் மீனவர் பிரச்னை தீர்ந்தால் போதும். அந்த வகையில் ஆன்லைன் மூலமாக நம் நாட்டு அரசுக்கு தமிழக மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்த கோரிக்கை வைக்கும் வகையில் புண்ணியவான்கள் சிலர் முயற்சி எடுத்து உள்ளார்கள். நாமும் அதில் பங்கு பெறலாமே. கீழே உள்ள லின்க்கை சொடுக்கி இரண்டே விபரங்களை கொடுத்தால் போதும். கோரிக்கையின் எண்ணிக்கையில் ஒன்று கூடி விடும். பிளீஸ்...

தமிழக மீனவர்களை காக்க இங்கே சொடுக்கவும்...

பாடம் உதவி: freepoto.com

நன்றியுடன்....






share on:facebook

5 comments:

Philosophy Prabhakaran said...

மீனவர்களுக்காக உங்கள் குரலை பதிவு செய்ததற்கு நன்றி...

சாய்ராம் கோபாலன் said...

ஆதி

இது பேசி பார்த்து பிரயோசனம் கிடையாது. எறும்பு மாதிரி நசுக்கி எறியணும்.

ஸ்ரீராம். said...

'அங்க' ஏற்கெனவே 'சொடுக்கி' விட்டேன்!

ஆதி மனிதன் said...

@Philosophy Prabhakaran

நன்றிக்கு நன்றி பிரபா.

@ஸ்ரீராம். said...

நன்றி ஸ்ரீராம்.

ஆதி மனிதன் said...

@சாய் said...

//இது பேசி பார்த்து பிரயோசனம் கிடையாது. எறும்பு மாதிரி நசுக்கி எறியணும். //

சரியாக சொன்னீர்கள் சாய். ஆனால் அதுக்குதான் ஆள் இல்ல.

Post a Comment