Monday, February 7, 2011

பீனட்சும் (கடலையும்) பக்கத்து சீட் பெண்ணும்...இது நடந்தது சில வருடங்களுக்கு முன்...

லாஸ் ஏஞ்சலஸ்சிலிருந்து  சிகாகோவிற்கு ஒரு அவசர வேலையாக   விமானத்தில் சென்றிருந்தேன். அப்போதுதான் உள்நாட்டு விமான சேவையில் இலவச மீல்ஸ் வழங்கும் சேவையை நிறுத்தி இருந்தார்கள். காசு கொடுத்தால் மட்டுமே கேட்டது கிடைக்கும். அப்படியில்லை என்றால் அதிகபட்சம் சிறு கடலை பாக்கெட்டும் ஒரு சோடாவும்/ஜூசும் மட்டுமே இலவசமாக கொடுப்பார்கள்.  அப்படியான ஒரு சூழ்நிலையில்தான் என் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அம்மணியுடன் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. இப்போது அதை நினைத்தாலும் எனக்கு சற்று வெக்கமாகவே இருக்கிறது. நாம் அப்படி செய்திருக்க கூடாதோ என்று. சரி சரி, ரொம்ப கற்பனை பண்ணிக்கிடாதீங்க. மேலே படிங்க...

விமானம் கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் வழக்கம் போல ஒருவர் வறண்ட சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு எல்லோருக்கும் பீனட்சையும் (கடலை) சோடா/ஜூசையும் விநியோகித்துக் கொண்டே வந்தார்.  நானும் ஒரு பாக்கெட்டை வாங்கி  கொறிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் பயணக் களைப்பில் கண்கள் சொருக சற்று நேரம் கண் அயர்ந்தேன்.

அங்கு தான் தவறே ஏற்பட்டிருக்க வேண்டும். விமானம் குலுங்கியதில் திடும் என கண் முழித்த நான் சிகாகோ சென்றடைய இன்னும் சில மணி நேரம் இருப்பதை நினைத்து, நேரத்தை ஓட்ட என் கடலை பொட்டலத்தில் கை விட்டு இரண்டை எடுத்து என் வாயில் போட்டு அரைத்தேன்.  அதே சமயம் என் பக்கத்து சீட் பெண் என்னை பார்த்து சிநேகமாக ஒரு சிரிப்பை உதிர்த்தார். நானும் பதிலுக்கு ஒரு மாதிரியாக சிரித்து வைத்தேன். சிறிது நேரம் சென்றிருக்கும். பக்கத்து சீட் பெண் என் கடலை பாக்கெட்டில் கை விட்டு அவளும் இரண்டு கடலையை எடுத்து சாப்பிட்டார். சரி ரொம்ப பசியாக இருப்பார் போலும். மேலும் நம்முடனே பயணம் செய்கிறார். அதனால் உரிமை எடுத்துக்கொண்டார் போலும் என நானும் ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்து வைத்தேன். ஹ்ம்ம். பெண் என்றால் நமக்கு தான் என்ன ஒரு தாராள குணம்.

சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் அப்பெண் என்னிடம் இருந்து ஒன்றிரண்டு கடலையை எடுத்து ஒவ்வொன்றாக தன் வாயில் போட்டு ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தார். எனக்கு தற்சமயம் சற்று கோபம் வந்தது. என்னதான் இருந்தாலும் ஒரு தடவை ஓசி எடுக்கலாம். அதற்காக அடுத்தவன் பொருளுக்கு அளவுக்கு அதிகமாக ஆசைபடலாமா? அதுவும் கேக்காமலே. சரி பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்பார்கள். நாம் இறங்காமலா?

அப்போதுதான் எனக்கு அந்த ஐடியா தோன்றியது. சரி, கடலையை வைத்தால் தானே அவர் எடுத்து எடுத்து சாப்பிடுகிறார். ஒரே வாயில் மீதமுள்ள எல்லாவற்றையும் நாம் உள்ளே தள்ளிவிட்டால்? நொடி கூட தாமதிக்காமல் கடலை பொட்டலத்தை எடுத்து கையில் கவுத்து மீதமிருந்த ஒன்றிரண்டு கடலைகளையும் ஒரே வாயில் உள்ளே தள்ளினேன்.

பிறகு  பக்கத்து சீட் பெண்ணை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு  சிரித்தேன். அவளோ சற்று ஆச்சர்யம் கலந்த அதே நேரத்தில் ஒரு சிநேகப் புன்னகையுடன் மீண்டும் என்னைப் பார்த்து சிரித்தாள். நம்மை பார்த்து என்ன இளிச்சவாயன் என நினைத்தாளா? என்று எகத்தாளமாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டே 'Excuse me' என்றவாறே அவளை தாண்டி டாய்லெட்   பக்கம் சென்றேன்.

சற்று நேரத்தில் திரும்பி என் இருக்கைக்கு வந்து அமர எத்தனிக்கையில்தான் அது என் கண்ணில் பட்டது. சடு சடு வென்று ஒவ்வொன்றாக எல்லாம் என் மூளைக்குள் சென்று உரைத்தது. அடச் சே, இப்படி நாம் நடந்துகொண்டோமே. இருந்தும் இப்பெண் நம்மை பார்த்து ஒவ்வொரு தடவையும் எவ்வளவு சிநேகமாக சிரித்தாள். என்னை நினைத்து நானே வெக்கப்பட்டுக்கொண்டேன். அதே நேரத்தில் அவளின் பெருந்தன்மையையும் பொறுமையையும் நினைத்து பொறமைப்பட்டேன். 

ஆம். அந்த நேரம் வரை என்னுடைய கடலை பொட்டலம் என நான் நினைத்துக்கொண்டிருந்தது உண்மையில் அவளின் பொட்டலம். என் கடலை பொட்டலம் நான் தூங்கி வழிந்த போது என்னை அறியாமல் நான் கீழே தள்ளி விட்டு உள்ளேன்.

உண்மையில் அப்பெண்ணின் கடலையைதான் நான் இதுவரை என்னுடையது என எண்ணி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். 'என்ன கொடுமை சரவணன் சார்' இது?

புடிச்சிருந்தா கடலை... 'சாரி'. அப்படியே உங்கள் வோட்டை போடுங்களேன்...நன்றி.


share on:facebook

15 comments:

tamilan said...

click and read

=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.
<====

Madhavan Srinivasagopalan said...

வித்தியாசமா கடலை போட்டீங்க....

sury said...

அண்மையில்தான் நடிகர் வடிவேலு நடித்த ஒரு படக்காட்சியில்
அவர் டீக்கடையில் தான் வாங்கி வைத்தது என நினைத்து ஒரு சோடாவோ
கோகோ கோலாவோ குடிப்பார். அது அவர் பக்கத்தில் இருக்கும் நபர்
வாங்கியது. அவரும் குடித்ததைப் பார்த்து கோபப்பட்டு திட்டுவார்.
காட்சி அமக்களமா இருந்தது.

அவரது கற்பனையும் உங்கள் அனுபவமும் ஒண்ணா இருக்கே !!

சுப்பு ரத்தினம்.

Chitra said...

அவ்வ்வ்வ்.....

Madhavan Srinivasagopalan said...

தமிழ்மணத்தில் இணைத்தபின்..
நாமும் ஒட்டு போடலாம்.. (போடணும்.. நமக்கு நாமே ஒட்டு போடும் திட்டம்)

Philosophy Prabhakaran said...

பழைய கதை... ஆனால் விமானப்பயணம், கடலைன்னு கொஞ்சம் தூசிதட்டி நல்ல எழுத்துநடையுடன் சொல்லியிருக்கிறீர்கள்...

ஸ்ரீராம். said...

:))

ஆதி மனிதன் said...

@Madhavan Srinivasagopalan
//வித்தியாசமா கடலை போட்டீங்க.... //

ஆமா, ஆமா, கடலை பொட்டலத்தை கீழே போட்டுவிட்டேனே...

ஆதி மனிதன் said...

@sury said...
//அவரது கற்பனையும் உங்கள் அனுபவமும் ஒண்ணா இருக்கே !!//

அட ஆமா! சத்தியமா இப்பதான் எனக்கு அந்த காமெடி நினைவுக்கு வருகிறது.

ஆதி மனிதன் said...

@Chitra said...
//அவ்வ்வ்வ்..... //

???

@ஸ்ரீராம். said...
:))

நன்றி ஸ்ரீராம்.

ஆதி மனிதன் said...

@Philosophy Prabhakaran said...
//பழைய கதை... ஆனால் விமானப்பயணம், கடலைன்னு கொஞ்சம் தூசிதட்டி நல்ல எழுத்துநடையுடன் சொல்லியிருக்கிறீர்கள்... //

ஹி ஹி ...நன்றி பிரபா.

rangarajan said...

Good but not Original...

டக்கால்டி said...

நாம் அப்படி செய்திருக்க கூடாதோ என்று. சரி சரி, ரொம்ப கற்பனை பண்ணிக்கிடாதீங்க//

நான் இந்த வரிக்கு அப்புறம் படிக்கவே இல்லீங்கோ...பின்ன நீங்க தான் அதுக்கு அப்புறம் மேலே படிங்கன்னு சொல்லிட்டீங்களே...அதனாலே மீண்டும் முதல் வரிக்கு போயிட்டேன். இப்படி பல தடவை அந்த முதல் பத்து வரிகளை படித்து வாய் வீங்கி போச்சுங்கோ ...

டக்கால்டி said...

நாம் அப்படி செய்திருக்க கூடாதோ என்று. சரி சரி, ரொம்ப கற்பனை பண்ணிக்கிடாதீங்க//

நான் இந்த வரிக்கு அப்புறம் படிக்கவே இல்லீங்கோ...பின்ன நீங்க தான் அதுக்கு அப்புறம் மேலே படிங்கன்னு சொல்லிட்டீங்களே...அதனாலே மீண்டும் முதல் வரிக்கு போயிட்டேன். இப்படி பல தடவை அந்த முதல் பத்து வரிகளை படித்து வாய் வீங்கி போச்சுங்கோ ...

சாய் said...

ஆதி இப்படியும் கடலை போடலாமா ? அடுத்த வாரம் இரண்டு நாள் அட்லாண்டா போறேன். பக்கத்தில் எதாவது பட்லி உட்காருதனா பார்ப்போம் !! என் ஜாதகத்தில் எப்போதும் எக்ஸ்ட்ரா பெல்ட் வாங்கும் குண்டன் தான் வருவான் !!

Post a Comment