Tuesday, April 5, 2011

விக்கித்த நரேந்திர மோடி - வேட்டையாடிய கரன் தப்பார்.


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி CNN IBN தொலைகாட்சியில் பிரபல அரசியல் விமர்சகர் கரன் தப்பாருக்கு அளித்த (பழைய) ஆங்கில பேட்டி  கீழே. 

அவர்களின் விவாதத்திற்குள்  செல்ல நான் விரும்பவில்லை. ஆனால் ஒரு  மாநில முதல்வரிடம் பத்திரிக்கையாளர் என்ற ஒரே தகுதியுடன் திரு. கரன்  கேட்ட கேள்விகளும், அதற்கு ஒரு பலம் மிகுந்த மாநில முதல்வராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பதில் அளித்த விதமும், என்னை நிமிர்ந்து உக்கார  செய்தது. 

இதே போல் ஒரு கேள்வியை தமிழகத்தில் யார் முதல்வராக இருந்தாலும்  கேள்வியை கேட்டு விட்டு அந்த நபர் அடுத்த நாள் ...... இருக்க முடியுமா?     

எல்லாவற்றுக்கும் வட இந்தியாவின் பத்திரிகை, தொலைகாட்சிகள் மற்றும்  அரசியல்வாதிகளை சாடுகிற நாம் இதற்கு சலாம் போட்டே தீர வேண்டும்.  


பேனாவின் முனை வாளின் முனையை விட கூர்மையானது என கேள்விபட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மை.

சத்தியமா நான் எந்த கட்சியையும் ஆதரிச்சோ எதிர்த்தோ இந்த பதிவ  போடலைங்க... இன்னும் சொல்லப்போனா நான் தமிழ் நாட்டு எலக்க்ஷன்ல  வோட்டு போட்டே பல மாமாங்கம் ஆவுதுங்க. You  tube  சும்மா துழாவிகிட்டு  இருந்தப்ப பார்த்தேன். பகிர்கிறேன். அவ்வளவுதாங்க.  

share on:facebook

8 comments:

Anonymous said...

ivar jayalalithavoda eduththa paetti parththathu illayaa? itha vida supera irukkum

பொன் மாலை பொழுது said...

/ ///சத்தியமா நான் எந்த கட்சியையும் ஆதரிச்சோ எதிர்த்தோ இந்த பதிவ போடலைங்க... இன்னும் சொல்லப்போனா நான் தமிழ் நாட்டு எலக்க்ஷன்ல வோட்டு போட்டே பல மாமாங்கம் ஆவுதுங்க////



இதற்கு ஏன் இந்த முன் வாக்கு மூலம் ? இங்கு வலையில் எழுத்தும் பெரும்பாலோருக்கு எதிர் மறையான கருதுக்களைகூட ஜீரணிக்க இயலாத மன நிலையை உடைவர்கள் என்பதை நானும் அறிவேன். மோடியை பற்றி கேவலமாக திட்டி எழுதினால் மட்டுமே ஆஹா.... ஓஹோ....இவனைப்போல உண்டா என ஆடிப்பாடி மகிழ்வார்கள். ஆனால் சற்றே மாறுபட்டு மோடியின் ஏதாவது ஒரு செய்தியினை நேர்மறையாக எழுதிவிட்டால் போதும். பூமியே தலைகீழாய் கவிழ்ந்து கொட்டிப்போய்விடும் என்ற கதியில் இவர்கள் அடிக்கும் சவடால்கள் சொல்லிமாளாது.( இவர்கள் நடுநிளையாலர்கலாம், மத சார்பு அற்றவர்கலாம் )

மோடியை பற்றி நேர்மறையாக எழுத மோடியின் ரசிகராகவோ, விசுவாசியாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை உணர இயலாத மன நிலையை உடைவர்கள்.

சரி, இதே போல ஒரு கரண்தப்பார் பேட்டி ஒன்று B.B.C. யில் வந்ததே பார்த்தீர்களா? கரண்தப்பார் பேட்டி கண்டது யார் தெரியுமா? நம்ம ஊர் "மம்மி" தான் :)))
கரணை அடிக்காதகுரையாக மம்மி பேட்டி கொடுத்த விதமும் அதை முடித்த விதமும் படு சுவாரஸ்யம்.

இணைப்பு :
http://video.google.com/videoplay?docid=43516720611501596#

கானகம் said...

இதேபோல கருணாநிதியிடம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் அழகிரிதான் மதுரை தினகரன் அலுவலக எரிப்பில் ஈடுபட்டாராமே என்ற கேள்விக்கு, மிகவும் நாகரீகமாக ந்க்கோத்தா நீதான் கொன்ன, நீதான் கொன்ன? இன்னும் சில செந்தமிழ் வார்த்தைகளை உதிர்த்துவிட்டே சென்றார். நரேந்திர மோடி மட்டுமே மிக நாகரீகமாக பேட்டிய முடித்தார். பொதுமக்களின் கோபத்தை முதல்வர்மீது திருப்பி அவரி ஹிட்லர் போல சித்தரிக்க முயலும் கரந்தப்பாருக்கு நரேந்திரமோடி காட்டியது அதிகபட்ச மரியாதை. கரன் தப்பார், பர்காதத் போன்ற தேசவிரோதிகள் எல்லாம் நிருபர்கள் என்ற போர்வையில்.

கானகம் said...

உங்கள் தளம் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது நண்பரே..

Anonymous said...

vottu pottu romba naal aachunnu oru perumaiya ?

ஆதி மனிதன் said...

நன்றி திரு. மாணிக்கம். எடுத்தவுடன் யாராவது கண்ட மேனிக்கு திட்டி வைக்க போறாங்கன்னு நினைச்சேன். ஆனால் அப்படி ஏதும் நடக்காமலேயே உங்கள் ஆதரவை எனக்கு தெரிவித்ததற்கு நன்றி(ஒரு வேலை எனக்கு மாணிக்கம் சப்போர்ட் இருக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டுதான் யாரும் திட்டலையோ?!).

ஜெயின் வீடியோவை பகிர்ந்ததர்க்கும் நன்றி. அப்பா எவ்வளவு வித்யாசம் (மோடிக்கும் ஜெயக்கும்).

ஆதி மனிதன் said...

//கரன் தப்பார், பர்காதத் போன்ற தேசவிரோதிகள் எல்லாம் நிருபர்கள் என்ற போர்வையில்//

!?!?

//உங்கள் தளம் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது நண்பரே.. //

ஏனென்று எனக்கு தெரியவில்லை நண்பரே. ஏதாவது செய்ய முடியுமா பார்கிறேன்.

ஆதி மனிதன் said...

//Anonymous said...
vottu pottu romba naal aachunnu oru perumaiya ?//

நான் பெருமையா எல்லாம் சொல்லலீங்க. எல்லாம் பொழப்பு தேடி வெளியே போனதால் முடியலீங்க.

Post a Comment