அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் யாரும் சூரியனை பார்க்க கூடாது, இலை என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. இப்படி கூட தேர்தல் கமிஷன் உத்தரவு போட்டாலும் போடும் போல.
ஒருவரின் பெயர் அவரின் விருப்பத்திற்கேற்பவோ அல்லது அவரின் பெற்றோர்களோ வைக்கும் பெயர். அது அவர்களின் தனி மனித உரிமை. உதயசூரியன் என்ற பெயர் இருப்பதினாலேயே அவர் தி.மு.க. காரரராக இருப்பார் என்று சட்டமில்லை. மேலும் எனக்கு தெரிந்து கருணாநிதி என்ற பெயருள்ளவர் அ.தி.மு.க. விலும் ஜெயலலிதா என்ற பெயர் தி.மு.க. அனுதாபி குடும்பத்தில் உள்ளதும் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தமிழகத்தில் என்ன ஒரே ஒரு கருணாநிதியும் ஜெயலலிதாவும் தான் உள்ளார்களா? கீழே தினமலரில் வெளியாகியுள்ள செய்தியை பாருங்கள். என கொடுமை சார் இது...
போடி: "உதயசூரியன்' என பெயர் வைத்த போடி தாலுகா இன்ஸ்பெக்டர், தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் திருநெல்வேலி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போடி தாலுகா இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் உதயசூரியன். இவர், பொறுப்பேற்று ஒரு மாதமாகிறது. தேர்தல் பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்த பணியில் ஈடுபட்டார். இவர், போடியிலிருந்து திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
நன்றி தினமலர்.
share on:facebook
4 comments:
இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் பாஸ்..?
//"உதயசூரியன்' என பெயர் வைத்த போடி தாலுகா இன்ஸ்பெக்டர், தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் திருநெல்வேலி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்//
உதய சூரியன் என்ற பெயர் இருப்பதால் அவர் தேர்தல் பணியாற்ற கூடாது என்று கூறுவது நியாயமல்ல என்று கூற வந்தேன். சரியாய் நான் சொல்லலையா/விளக்கலையா??
உதய சூரியன் என்ற பெயர் இருப்பதால் அவரது அப்பா நிச்சயம் திமுகவாத்தான் இருக்கும்... எனவே சரிதான்.. ஒன்னும் தப்பில்ல..
எதையுமே பாசிடிவாக எடுத்துக் கொள்ளலாமே..
'உதயசூரியன்' என்று பெயர் கொண்ட அந்த நபர் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது.. அவரின் சட்டையில் அவர் பெயர் தாங்கிய பட்டையை அணிந்திருப்பார்.. அவரை மேலதிகாரிகள் வாக்குச் சாவடியில் பெயர் சொல்லி அழைக்க நேரிடும்..
நியாயமான முறையில் தேர்தல் நடப்பது தேர்தல் கமிஷனின் தலையான பணி அல்லவா..
எனக்கு இந்த செய்தி சரியாகத்தான் தெரிகிறது..
Post a Comment