Tuesday, April 12, 2011

என்று தணியும் இந்த கிரிக்கெட் மோகம்?

விளையாட்டுல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கிரிக்கெட். இதை சொல்வதில் எனக்கு ஒன்றும் பெருமையோ சிறுமையோ இல்லை. ஆனால் எனக்கு ஏன் கிரிக்கெட் பிடிக்காது என்பதற்கு பல காரணங்கள் உண்டு.

இப்பதான் ஒரு உலக கோப்பை ஆட்டம் முடிந்தது. அதற்குள் இன்னொரு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் குறிக்கோள் என்னதான்  என்றே எனக்கு புரிவில்லை. வருடம் முழுவதும் சம்பாதித்துக்கொன்டே  இருப்பதா? இல்லை எல்லோரும் கிரிகெட் பார்த்துக்கொண்டே இருந்தால்  போதும் வேறு ஏதும் இந்த நாட்டுக்கு செய்ய வேண்டியதில்லையா?

முதலாவதாக கிரிக்கெட்டுக்கு மட்டும் கொடுக்கப்படும் அதீத மரியாதை + முக்கியத்துவம். மற்றொன்று வருடம் பூராவும் கொஞ்சமும் சலிக்காமல்  (ஆனால் சலிப்பை ஏற்படுத்தும் விதமாக) 20 - 20, 50 -50 என மாற்றி மாற்றி ஏதாவது ஒரு ஊரில் விளையாண்டுக்கொன்டே இருப்பது. அது  எப்படி  சலிக்காமல் ரசிகர்களும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்களோ! 

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கிரிகெட்டை மட்டுமே  விளையாடுவதால் நம் பாரம்பரியம் மிக்க, அது பாரம்பரியம் இல்லா  விளையாட்டாக இருந்தால் கூட மற்ற எந்த விளையாட்டையும் நம்  பிள்ளைகள் விளையாடுவதும் இல்லை அதை நாம் வலியுறுத்துவதும் இல்லை. கிரிகெட் ஒரு காலத்தில் மற்ற விளையாட்டுகளில் ஒன்றாகத்தான் இருந்தது. கோலி (பளிங்கு) முதல், பட்டம் விடுவது, ஹாக்கி, கிட்டிபுல் (கில்லி) புட்பால் என சீசனுக்கு தகுந்தார் போல் ஒவ்வொரு விளையாட்டையும் முறை வைத்து விளையாண்டது எங்கள் காலம். இப்போ இந்த கிரிகெட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஏன் தான் எல்லோரும் காலம் தள்ளுகிறார்களோ எனக்கு தெரியவில்லை.

அடுத்ததாக கிரிகெட் விளையாட 22 பேர் தேவை இல்லை (என்ன? எனக்கு கிரிகெட் அறிவு இருக்கா?) என்றால் கூட குறைந்த பட்சம் நிறைய பேர் தேவை. ஆனால் மற்ற விளையாட்டுகள்  பொதுவாக அப்படி இல்லை. ஒரு சில பேர் இருந்தால் கூட விளையாட முடியும். பெரிய அளவிற்கு ரூல்ஸ் எல்லாம் கிடையாது. விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களும் எளிதாக கிடைக்க கூடியவை.

கிரிகெட் பார்பதினால் பெரிதளவில் பாதிக்கப்படுவது குழந்தைகளே. கிரிகெட் பார்கிறேன் பேர்வழி என்று எந்நேரம் பார்த்தாலும் தொலைகாட்சி பெட்டிக்கு முன் அமர்ந்து கொண்டு கொட்ட கொட்ட பார்த்து கொண்டிருப்பது. இடைவிடாமல் நடக்கும் போட்டிகளால் தங்கள் வீட்டு பாடங்களை கூட முடிக்க முடியாமல் கஷ்டப்படுவது என்று  சொல்லிக்கொண்டே  போகலாம். 

மற்றதை விட்டு தள்ளுங்கள். இந்த பள்ளிகளில் எங்காவது குழந்தைகளுக்கு  மற்ற விளையாட்டுகளை சொல்லி தருகிறார்களா? அல்லது விளையாட  வசதிகளை  ஏற்படுத்தி தருகிறார்களா? இல்லையே.   ஒரு  கணம் கண்களை மூடி சின்னஞ் சிறார்கள் பூட்பால் விளையடுவதையோ, டென்னிஸ் ஆடுவதையோ நினைத்து பாருங்கள். எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது.

எந்த ஒரு பொழுது போக்கு அம்சமாக இருந்தாலும் அது அளவோடு இருந்தால்  தான் ரசிக்க முடியும். பரம ரசிகனாக இருந்தால் கூட ரஜினி மாதத்துக்கொரு  படம் ரிலீஸ் செய்தால் அதை ரசிகர்கள் அதே ஆராவாரத்துடன்  பார்ப்பார்களா என்பது சந்தேகமே. அப்படி இருக்க இந்த கிரிகெட் மட்டும்   மாத  மாதம் அம்மாவாசை வருகிறதோ இல்லையோ மேட்ச் மட்டும்  வந்து விடுகிறது. அதையும் ரசிகர்கள் அலுக்காமல் பார்த்துக்கொண்டே  இருக்கிறார்கள்.

அதே போல் மற்ற எல்லா துறையிலும் அதிகம் சம்பாதிப்பவர்களில்  எல்லோரும் இல்லாவிட்டாலும் கூட ஒரு சிலராவது பொது நலனுக்காக  நன்கொடை  வழங்குவதை பார்த்திருக்கிறேன். இந்த கிரிகெட் வீரர்களை  தவிர. ஒவ்வொரு போட்டியின் போதும் கிடைக்கும் காரையும் பரிசு  பொருட்களையும் என்ன தான் செய்வார்களோ. இவர்கள் தவிர இந்த  விளையாட்டின் மூலம் அதிகம் சம்பாதிப்பது விளம்பர நிறுவனங்களும்  விளம்பரங்கள் மூலம் தங்கள் பொருட்களை வியாபாரமாக்கும் மிக பெரிய  கார்பரேட்களும் தான்.

ஏமாந்த பேர்வழிகள்? அவர் சிக்ஸர் அடித்தார் இவர் ரன் அவுட் ஆனார் என்று விளையாட்டு முடிந்தும் அதை நான்கு நாட்களுக்கு பேசிக்கொண்டு  திரியும் கிரிகெட் ரசிகர்களே...

என்றோ அறிஞர் பெர்னாட்ஷா கூறியது ஏனோ ஞபகத்துக்கு  வருகிறது... பதினோரு ..... விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கும் ஒரு விளையாட்டு 'கிரிகெட்'.

ம்ம்...பலநாள் எழுத நினைத்தை எழுதிவிட்டேன். எதிர்வரும் பின்னூட்டங்களை சந்தித்துதானே ஆகவேண்டும்.

share on:facebook

10 comments:

Madhavan Srinivasagopalan said...

கிரிகேட்டினால் விலையும் நன்மைகளில் ஒன்று :
பதிவெழுத சரக்கில்லாத பொது எழுதுவதற்கு உதவும் ஒரு சப்ஜெக்ட்..

ஹி.. ஹி.. சும்மா..


மத்தபடி.. நீங்கள் சொன்ன

//இவர்கள் குறிக்கோள் என்னதான் என்றே எனக்கு புரிவில்லை. வருடம் முழுவதும் சம்பாதித்துக்கொன்டே இருப்பதா? //

//கோலி (பளிங்கு) முதல், பட்டம் விடுவது, ஹாக்கி, கிட்டிபுல் (கில்லி) புட்பால் என சீசனுக்கு தகுந்தார் போல் ஒவ்வொரு விளையாட்டையும் முறை வைத்து விளையாண்டது எங்கள் காலம். இப்போ இந்த கிரிகெட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஏன் தான் எல்லோரும் காலம் தள்ளுகிறார்களோ எனக்கு தெரியவில்லை. //

//எந்த ஒரு பொழுது போக்கு அம்சமாக இருந்தாலும் அது அளவோடு இருந்தால் தான் ரசிக்க முடியும்.//

//இந்த விளையாட்டின் மூலம் அதிகம் சம்பாதிப்பது விளம்பர நிறுவனங்களும் விளம்பரங்கள் மூலம் தங்கள் பொருட்களை வியாபாரமாக்கும் மிக பெரிய கார்பரேட்களும் தான்.//

இதுவெலாம் சரியான கருத்துக்கள்..
ஆமோதிக்கிறேன்.

எட்வின் said...

எனக்கு தெரிந்த வரை இந்திய கிரிக்கெட் வாரியம் பேட்மிண்டன், தடகளம் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கு உதவி செய்கிறது.

சச்சின் மும்பையில் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார். முந்தைய அணித்தலைவர் கபில்தேவ் கூட பல நற்பணிகளை செய்து வருகிறார்.

முந்தைய பாகிஸ்தான் அணித்தலைவர் இம்ரான் கான் அவரது அம்மா பெயரில் பாகிஸ்தானில் புற்றுநோய் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

இன்னும் நிறைய சொல்லிப் போகலாம். கிரிக்கெட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்வது பெற்றோரின் தவறு. குழந்தைகள் அவர்கள் கட்டுப்பாட்டில் என தான் பொருள் கொள்ள முடியும்.

நான் உட்பட்ட எனது இருபது நெருக்கமான நண்பர்கள் பலரும் ஐந்து வயதில் இருந்து கிரிக்கெட் பார்த்து வருகிறோம்; விளையாடி வருகிறோம். எங்கள் முப்பதுகளில் இன்று நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் தான் இருக்கிறோம்.

விளையாட்டு வேறு வாழ்க்கை வேறு அன்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா ?
http://gunathamizh.blogspot.com/2010/11/blog-post.html

அமைதி அப்பா said...

நல்ல பதிவு. பலரின் மன சாட்சியாக இந்தப் பதிவு உள்ளது.

என்னுடைய கிரிக்கெட் தொடர்பான பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படிக்க...

அளவுக்கு மீறினால்...?!

நன்றி.

ஆதி மனிதன் said...

//பதிவெழுத சரக்கில்லாத பொது எழுதுவதற்கு உதவும் ஒரு சப்ஜெக்ட்..//

எனக்கு முடியாது. நேற்று மாட்ச்சில் எத்தனை கோல் என்று கேட்பேன்.

ஆதி மனிதன் said...

@எட்வின் said...

//விளையாட்டு வேறு வாழ்க்கை வேறு அன்பரே. //

தகவல்களுக்கு நன்றி எட்வின். என்னுடைய உறவினர்கள் இருவர் கூட கிரிக்கெட்டினால் நல்ல நிலைமையில் உள்ளார்கள். ஆனால் எத்தனை பேருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு.

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் ஒத்த கருத்துடைய முனைவர்.இரா.குணசீலன், அமைதி அப்பா அவர்களுக்கு நன்றி.

ப.கந்தசாமி said...

நான் ஆமோதிக்கிறேன். ஆனால் ஒன்று கவனிக்க வேண்டும். ஆயிரக்கணக்கானவர்கள் கிரிக்கெட் மைதானத்தில் கூடி இருப்பதால் அவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் குறைகின்றன. இது ஒரு பெரும் உதவி அல்லவா?

ஆதி மனிதன் said...

@DrPKandaswamyPhD said...

//அவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய
சங்கடங்கள் குறைகின்றன. இது ஒரு பெரும் உதவி அல்லவா? //

அது என்னவோ உண்மைதான்.

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி டாக்டர்.

Anonymous said...

matra vilaytukkala nama mathikrahilla athu unmai than ana ipl ponra matches unmaila cricketota swarasyatha ketukitrathu entha oru visayathaiyum veliya irunthu pathu sollathiga cricket nalla vilaytuthan

Post a Comment