ஏப்ரல்-1: சென்னையில் தேர்தல் பிரசாரத்தின் போது நேருக்குநேர் சந்தித்துக்கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.
நலம் விசாரித்த ஜெ: தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான திரு. கருணாநிதி தேர்தல் பிரசார திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக முன் அறிவிப்பின்றி கோட்டூர்புரம் வழியாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே ஏற்கனவே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜெயலலிதாவிடம் இதை எடுத்து கூறிய உயர் காவல் துறை அதிகாரிகளிடம் சற்று காட்டம் காட்டிய ஜெயலலிதா பிறகு தன் பிரசாரத்தை சிறிது நேரம் நிறுத்திக்கொள்ள சம்மதித்தார். அதே வேளையில் கருணாநிதியின் பிரசார வேணும் அங்கே வர, வேனில் இருந்தபடியே ஜெ கலைஞரை நோக்கி கை கூப்பி கும்பிட்டார். அதை கவனித்த கலைஞரும் ஜெவை நோக்கி கும்பிட்டார். திடீரென்று ஜெயலலிதா தன் கையில் வைத்திருந்த மைக்கின் மூலமாக, என்ன சி.எம் சார் சவுக்கியமா என கேட்க, கலைஞரும் வண்டியை நிறுத்த சொல்லி சைகை கான்பித்தவாறே நலம் என்று சைகை மூலம் தலையை அசைத்தார். மீண்டும் ஜெ, உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் ரெஸ்ட் எடுங்கள், உங்கள் தளபதிகளை பிரசாரத்தை பார்த்துக்கொள்வார்கள் என்று மீண்டும் கூறினார். இதை கேட்ட அங்கிருந்த இரு கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என எல்லோரும் கண்கள் இமைக்காமல் காதுகள் நம்ப முடியாமல் பிரம்மித்து நின்றார்கள்.
விஜயகாந்த் கருத்து: இது பற்றி கருத்து தெரிவித்த விஜயகாந்த், ஜெயலலிதா மேடம் ஒரு மிக பெரிய ராஜதந்திரி. கலைஞரை ஓய்வு எடுக்க கேட்டுக்கொண்டதின் மூலம் தி.மு.க. பிரசாரத்தின் வீச்சை பலவீனப்படுத்தி அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளார் என கூறினார்.
தாம்பரத்தில் ஸ்டாலின் பேச்சு: எதிர் கட்சித்தலைவர் தலைவர் கலைஞரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதை வரவேற்கிறோம். நாங்கள் அண்ணா பாசறையில் பயின்றவர்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதை ஏற்று கொண்டவர்கள். சகோதிரி ஜெயலலிதாவும் அதிகம் இந்த வெயிலில் அலையாமல் அவர்களின் உடம்பை பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் பிரச்சாரம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர் பேசாமல் சசிகலா மற்றும் அவரின் உறவினர்களை பிரச்சாரத்திற்கு அனுப்பலாம். அவர்கள் தானே தற்போது அ.தி.மு.க. என மறைமுகமாக அ.தி.மு.க. வை தாக்கினார்.
எல்லோரும் வயதானவர்கள், இ.வி.கே.எஸ். தாக்கு: ஜெ, கலைஞர் சந்திப்பு பற்றி கருத்த திரு. இ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜெயலலிதா கருணாநிதி இருவருமே வயதானவர்கள். இளம் தலைவர் ராகுல் காந்தி போல் இவர்களால் பிரச்சாரம் செய்ய முடியாது. நிச்சயம் ஒரு நாள் தமிழகத்திற்கு காமராஜர் ஆட்சியை அவர் தருவார் (அப்ப ராகுல் காந்திக்கே வயசாகி போய்டுமேய்ப்பா -பட்டி மன்ற நடுவர் ஐயா சாலமன் பாப்பையா ஸ்டைலில் படியுங்கள்) என உறுதியாக கூறினார்.
என்ன மக்களே ?உங்கள நீங்களே கிள்ளி பாக்குறீங்களா? நம்ப முடியலனா மீண்டும் ஒரு முறை முதல் வரியில இருந்து படிங்க. விளங்கிடும்.
படம் நன்றி: tamilantoday.com
share on:facebook
5 comments:
நாங்களா உஷார் பார்டி..
இன்னிக்கு எதையுமே நம்பப் போறது இல்லை..
அதிமுக திமுக ஒரு ஜாயின்ட் போடுவோமா.?
என்னங்கண்ணா!! இது கூடவா எங்களுக்குப் புரியாது! இது தேர்தல் காலம் அல்லவா? நாமெல்லாம் ஏமாற தயாராக இருக்கும் காலமல்லவா??
visit and support:
http://sagamanithan.blogspot.com/
@Madhavan Srinivasagopalan
//நாங்களா உஷார் பார்டி..
இன்னிக்கு எதையுமே நம்பப் போறது இல்லை.. //
ஏப்ரல் 13 வரை எதையுமே நம்பாமல் இருந்தால் இன்னும் நல்லது...
@தம்பி கூர்மதியன்
//அதிமுக திமுக ஒரு ஜாயின்ட் போடுவோமா.? //
வாங்க தம்பி. போட்டுடுவோம். நாமலாம் ஒரே துப்பாக்கியில் இரு குழல்கள் அல்லவா?
@சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்
//visit and support:
http://sagamanithan.blogspot.com//
வருகைக்கு நன்றி. சக மனிதன்னு சொல்லிட்டீங்க. சப்போர்ட் பண்ணிடுவோம்.
Post a Comment