Thursday, March 31, 2011

தேர்தல் பிரசாரத்தின் போது ஜெ - கலைஞர் நேருக்கு நேர் சந்திப்பு: கலைஞரை நலம் விசாரித்த ஜெ.

ஏப்ரல்-1: சென்னையில் தேர்தல் பிரசாரத்தின் போது நேருக்குநேர் சந்தித்துக்கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.

நலம் விசாரித்த ஜெ: தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான  திரு. கருணாநிதி தேர்தல் பிரசார திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்  காரணமாக முன் அறிவிப்பின்றி கோட்டூர்புரம் வழியாக தாம்பரம் நோக்கி  சென்று  கொண்டிருந்தார்.  அப்போது அங்கே ஏற்கனவே பிரசாரத்தில்  ஈடுபட்டிருந்த  ஜெயலலிதாவிடம் இதை  எடுத்து கூறிய உயர் காவல் துறை  அதிகாரிகளிடம்  சற்று காட்டம் காட்டிய ஜெயலலிதா  பிறகு தன் பிரசாரத்தை  சிறிது நேரம்  நிறுத்திக்கொள்ள சம்மதித்தார். அதே வேளையில்  கருணாநிதியின் பிரசார  வேணும் அங்கே வர, வேனில் இருந்தபடியே  ஜெ கலைஞரை  நோக்கி கை கூப்பி கும்பிட்டார். அதை கவனித்த  கலைஞரும் ஜெவை நோக்கி கும்பிட்டார். திடீரென்று ஜெயலலிதா  தன் கையில் வைத்திருந்த  மைக்கின் மூலமாக, என்ன சி.எம் சார் சவுக்கியமா  என கேட்க, கலைஞரும்  வண்டியை நிறுத்த சொல்லி சைகை  கான்பித்தவாறே நலம் என்று சைகை மூலம் தலையை அசைத்தார். மீண்டும்  ஜெ, உடம்பை  பார்த்துக்கொள்ளுங்கள்,  நீங்கள் ரெஸ்ட் எடுங்கள், உங்கள்  தளபதிகளை  பிரசாரத்தை பார்த்துக்கொள்வார்கள்  என்று மீண்டும் கூறினார்.  இதை கேட்ட  அங்கிருந்த இரு கட்சி தொண்டர்கள் பொதுமக்கள்  என எல்லோரும் கண்கள்  இமைக்காமல் காதுகள் நம்ப முடியாமல்  பிரம்மித்து நின்றார்கள்.

விஜயகாந்த் கருத்து: இது பற்றி கருத்து தெரிவித்த விஜயகாந்த், ஜெயலலிதா மேடம் ஒரு மிக பெரிய ராஜதந்திரி. கலைஞரை ஓய்வு எடுக்க  கேட்டுக்கொண்டதின் மூலம் தி.மு.க. பிரசாரத்தின் வீச்சை பலவீனப்படுத்தி  அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளார் என கூறினார்.

தாம்பரத்தில் ஸ்டாலின் பேச்சு: எதிர் கட்சித்தலைவர் தலைவர்  கலைஞரை  ஓய்வெடுக்க அறிவுறுத்தியதை வரவேற்கிறோம். நாங்கள்  அண்ணா பாசறையில்  பயின்றவர்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்  மணமுண்டு என்பதை  ஏற்று கொண்டவர்கள். சகோதிரி ஜெயலலிதாவும்  அதிகம் இந்த வெயிலில்  அலையாமல் அவர்களின் உடம்பை  பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  அவர் பிரச்சாரம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர் பேசாமல் சசிகலா மற்றும் அவரின்  உறவினர்களை பிரச்சாரத்திற்கு அனுப்பலாம்.  அவர்கள் தானே தற்போது  அ.தி.மு.க. என மறைமுகமாக அ.தி.மு.க. வை  தாக்கினார்.

எல்லோரும் வயதானவர்கள், இ.வி.கே.எஸ். தாக்கு: ஜெ, கலைஞர் சந்திப்பு  பற்றி கருத்த திரு. இ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜெயலலிதா கருணாநிதி  இருவருமே வயதானவர்கள். இளம் தலைவர் ராகுல் காந்தி போல் இவர்களால்  பிரச்சாரம் செய்ய முடியாது. நிச்சயம் ஒரு நாள் தமிழகத்திற்கு காமராஜர்  ஆட்சியை அவர் தருவார் (அப்ப ராகுல் காந்திக்கே வயசாகி   போய்டுமேய்ப்பா -பட்டி மன்ற நடுவர் ஐயா சாலமன் பாப்பையா ஸ்டைலில் படியுங்கள்)  என உறுதியாக கூறினார்.       

என்ன மக்களே ?உங்கள நீங்களே கிள்ளி பாக்குறீங்களா?  நம்ப முடியலனா  மீண்டும் ஒரு முறை முதல் வரியில இருந்து படிங்க.  விளங்கிடும். 

படம் நன்றி: tamilantoday.com

share on:facebook

Wednesday, March 30, 2011

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...ஜனதா கட்சியின் கின்னஸ் சாதனை.


நன்றி: dinamalar.com

கமெண்ட்ஸ் ப்ளீஸ்.





அட அவங்களுக்குதான் வோட்டு போட யாரும் இல்ல. எனக்கும்மா?

share on:facebook

Tuesday, March 29, 2011

பேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா?



தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சிலரின் பெயரைக்கேட்டு ஆச்சர்யப்படுவேன்.  இருக்காதா பின்னே? அம்மாவசை, லைட்டு, பஞ்சாயத்து, தஞ்சாவூரான், பட்டாளத்தார் என்று விதவிதமாக பெயர்கள் அங்கு உண்டு. சில அவர்களின் உண்மையான பெயர். சில காரணப்பெயர்கள்.

அம்மாவாசை: நீங்கள் நினைப்பது போல் அவர் கறுப்பானவர் இல்லை. ஆனால் அவர் அம்மாவாசையன்று பிறந்ததினால் அப்பெயர்.

லைட்டு: இவர் எப்போதுமே கையில் (லாந்தர்) விளக்குடன் தான் இருப்பார்.

பஞ்சாயத்து: யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் தானாக ஆஜராகி சமாதானம் பேசுபவர்.

தஞ்சாவூரான்: இவர் தஞ்சை பெரிய ஆஸ்பத்திரியில் வந்து பிறந்ததால் இப்பெயர். 

பட்டாளத்தார்: இவர் பட்டாளத்தில் (ராணுவத்தில்) இருந்து ரிடையர் ஆனவர்.

இவர்கள் யாரும் எந்த காரனத்திற்க்காகவும் தங்கள் பெயர்களை  மாற்றிக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒன்று அவர்களின் பெற்றோர்கள்  வைத்த பெயர். இல்லை மற்றவர்கள் பாசத்துடன் வைத்த பட்டப்பெயர்.  கிராமங்களில் இன்றும் யாரும் பாஷனுக்காகவோ ராசி பார்த்தோ பெயர் வைப்பதில்லை. பெரும்பாலும் குழந்தைகளின் தாத்தா பாட்டி பெயரை அல்லது குலதெய்வத்தின் பெயரை வைத்துவிட்டு பின்பு செல்லப்பெயராக ஒரு பெயரை கூப்பிடுவதற்கு வைத்துக்கொள்வார்கள். பின்னே மாமனார்  மாமியார் பெயரை சொல்லி கூப்பிட முடியாதல்லவா. சிலர் இதற்க்கென்றே  திட்டும்  போது மட்டும் உண்மையான பெயரை சொல்லி திட்டுவார்கள்.

அதேபோல் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் எங்கு பார்த்தாலும் 'நீலகன்டர்கள்' நீக்க மற நிறைந்து இருப்பார்கள். காரணம் அங்குள்ள பிரசித்தி பெற்ற நீலகண்ட சுவாமி கோவிலும் அங்குள்ள கடவுளும்.  பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் இருந்தால் அவர்களில்  15 பேரின் பெயர்கள் நீலகண்டன். இனிஷியலும் "N" ஆகத்தான் இருக்கும்.  நினைத்து பாருங்களேன் வாத்தியாரின் கஷ்டத்தை! 

ஆனால் இன்று நல்ல நிலையில் உள்ளவர்கள் கூட தங்கள் பெற்றோர் வைத்த பெயரை பெயர் ராசி, நூமரலாஜி என பல காரணங்களுக்காக மாற்றிக்கொள்கிறார்கள். T. ராஜேந்தர் விஜய T ராஜேந்தராகவும்,  வை. கோபால்சாமி வைகோவாகவும் மாறிவிட்டார்கள். என்னை பொறுத்த   வரையில் பெற்றோர் வைத்த பெயரை  மாற்றிக்கொள்வதில் எனக்கு ஏற்புடையதல்ல. நம்மை இந்த  உலகத்திற்கு  அடையாளப்படுத்தியதே  அவர்கள் தான். அந்த அடையாளத்தை மாற்றிக்கொள்ள நமக்கு உரிமை எது?

இந்த பெயர் ராசி, நூமராலாஜி போன்றவைகளால் இன்னதுதான் பெயர் வைக்கவேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. என்னுடைய நண்பர் ஒருவரின் பெயர் ஆங்கிலத்தில் 'Subramoney'.  நம்ப முடிகிறதா? அதே போல் அர்த்தம் தெரியாத பெயர்களும் நிறைய உண்டு.

பெயரில் என்னங்க இருக்கு? போன தலைமுறை வரை டாடா பிர்லா என  கூறிக்கொன்டிருந்தவர்கள் இப்போது இவர் என்ன 'பெரிய அம்பானியா'  என கூற ஆரம்பிக்கவில்லையா?  இத்தனைக்கும் மூத்த அம்பானி ஒரு கூலியாகத்தானே தன் வாழ்க்கையை  ஆரம்பித்தார்? அம்பானி என பெயர்  வைத்ததால் அம்பானியாகவில்லையே?       

எங்கள் வீட்டை பொறுத்தவரையில் எல்லா பெயர் தேர்வுகளும் எங்கள்  அம்மாவோ அப்பாவோ அல்லது மூத்தவர்கள் செய்த தேர்வுதான். சில நேரங்களில் எங்கள் குடும்பத்தில் மருமகள்களாக வந்தவர்களின்   பெயர்களுக்குள்ளும்  ஒரு ஒற்றுமை ஏற்பட்டது. சில பெயர்கள் இதோ...(என்னுடைய பெயர் மிகவும் அரிதானது. 'Facebook' ல் மொத்தம் 7  பேர்தான் என்னுடைய  பெயரில் உள்ளார்கள். சென்னை தொலைபேசி  டைரக்டரியில் மொத்தம் 2  பேர்தான். அதனால் சஸ்பென்ஸ்). 

சுதந்திரா தேவி (சுதந்திர தினத்தன்று பிறந்தவர்)
மிர்னாலினி தேவி
யாழினி தேவி
மணி வண்ணன்
முகில் வண்ணன்
எழில் வண்ணன்
விஜய லக்ஷ்மி
வீர லக்ஷ்மி
விஜய நிலா
விஜய பாரதி

அம்மாவாசை ஒரு நாள் அம்பானி ஆகிவிட முடியும். ஆனால் சச்சின் என்று பெயர் வைப்பதினால் மட்டும் ஒருவன் சச்சின் ஆகிவிட முடியாது (கலக்குற மச்சி).

     

share on:facebook

Saturday, March 26, 2011

சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போலாகுமா...


உங்களுக்கு எந்த ஊர் என்று யாராவது என்னிடம் கேட்டால் தஞ்சாவூர் என சொல்லிக்கொள்வதில் நான் மிகவும் பெருமைகொள்வேன். தஞ்சையை  பற்றி நான் சொல்லி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.  இந்தியாவிற்கே படியளக்க கூடிய நெற்கலஞ்சியமாகட்டும்,  அங்குள்ள  பெரிய கோவிலோ, புகழ் மிக்க சரசுவதி மஹால் நூலகமோ,  அல்லது அருகில் உள்ள நாகூர் மற்றும் வேளாங்கண்ணி என எல்லா  மதத்திற்குமான திருத்தலங்கள் என எல்லாமும் எல்லோரும் அறிந்ததே. 

இதைதவிர உள்ளூர் சிறப்பாக உள்ள சில விசயங்களை இங்கு பகிர்கிறேன். தஞ்சை நகரில் மற்ற ஊர்களைப்போலவே அனைத்து விதமான  வியாபாரங்களும் தொழில்களும் உண்டு. ஆனால் அதில் ஒரு தனி  சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட ஒவ்வொரு தொழிலும் ஒரு நிறுவனம் மட்டும் என்றுமே வாடிக்கையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.

முதலில் இனிப்புடன் ஆரம்பிப்போம் - பாம்பே ஸ்வீட் ஸ்டால்

தஞ்சையில் இனிப்பு வகைகள் என்றாலே தஞ்சை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு நினைவில் வருவது 'பாம்பே ஸ்வீட் ஸ்டால்' தான். ஒரு காலத்தில் சிறிய அளவில் இனிப்பு பலகாரங்கள் வியாபாரம் செய்துவந்த 'சேட்' என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்,    தன்னுடைய  கடுமையான உழைப்பாலும் இனிப்பு வகைகளின் தரத்தாலும் ஒரு மிக பெரிய வியாபார சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். அவரின் மறைவிற்கு பிறகும் அவருடைய மகன் திரு. மணி அவர்கள் அவரைவிட பலமடங்காக அதை விரிவாக்கி இருக்கிறார்.

தரமும், தங்கம் போல் இனிப்புகளை அளந்து பார்க்காமல் எப்பவுமே கூடுதலாக அள்ளி அள்ளி போட்டு  கொடுப்பதும் மக்களின் வரவேற்ப்பை  பெற்றதற்கான முக்கிய காரணம். தீபாவளி போன்ற நேரங்களில் வெளியூர்  செல்லும் பேருந்துகள் ஸ்வீட் ஸ்டால் முன் நிறுத்தி டிரைவர் கண்டக்டர்  பயணிகள்  என அனைவரும் ஸ்வீட்ஸ் வாங்குவது ஆச்சர்யமான ஒன்றாகும்.  இது எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்வீட் ஸ்டாலின் மறைந்த உரிமையாளரும்  அவரின் மகனும் வெளியே தெரியாமல் பல பேரின் படிப்புக்கும் நல்ல  காரியங்கள் பலவற்றுக்கும்  உதவுவது சிலருக்கு மட்டுமே தெரியும்.  தஞ்சை சென்றால் ஒரு  முறை அவசியம் அங்கு ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு பாருங்கள். குறிப்பாக  அவர்களின் சோமாசா + பாதாம் கீர் மிகவும்  ருசிமிக்கவை.  

உயிர் காக்கும் மருந்தகம் - ஸ்டேட் மெடிக்கல்ஸ்.

தஞ்சையில் மருத்துவக்கல்லூரி இருப்பதால் டாக்டர்களுக்கு பஞ்சமே இல்லை. தஞ்சை தெற்கு அலங்கத்தில் உள்ள கிளினிக்குகளில் பணியாற்றும் டாக்டர்களை கணக்கெடுத்தால் மட்டுமே மற்ற எல்லா ஊர்களிலும் உள்ள டாக்டர்களின் எண்ணிக்கையை தாண்டி விடுவார்கள். அதே போல் மருந்தகங்களும்.

எத்தனையோ புது மருந்தகங்கள் வந்தாலும் கூட ரயிலடி அருகில் உள்ள ஸ்டேட் மெடிகல்ஸ் மிகவும் பெயர் பெற்றது. இதன் உரிமையாளர் கூட ஒரு காலத்தில் சிறிய அளவில் மட்டுமே நடத்தி வந்தார். பிறகு அவரின் மகன் திரு. நேரு பொறுப்பேற்றபின் அவரின் உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்களை  கவனிக்கும்/கவரும் பண்பின் காரணமாக மக்கள்  தலைவலி மாத்திரை வேண்டும் என்றால் கூட அரை மணி நேரம் காத்திருந்து  வங்கி செல்வார்கள். கடையை அடைத்து கூட்டம் இல்லாமல் நான் ஒரு நாள்  கூட பார்த்ததில்லை. சாதாரண உடல் உபாதைகளுக்கெல்லாம் அவரே சரியான  ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் தருவார். அதே நேரத்தில் மற்ற  விசயங்களுக்கு முறையாக இதை நீங்கள் டாக்டரிடம் தான் காட்ட வேண்டும்  எனவும் கூற தவற மாட்டார். ஒரு ருபாய் இரண்டு ருபாய் குறைவாக இருந்தால்  கூட எற்றுக்கொள்வார். ஏழைகளாக இருந்தால் கணக்கு பார்க்க மாட்டார். அவரின் சிரித்த முகமும், வாங்க சார், என்னம்மா வேணும் என்று அவர் அன்பாக கேட்கும் அழகே தனி. 

தவறாமல் ஒரு முறை அங்கு சென்று வாருங்கள் என கூற மாட்டேன்.  ஏனென்றால் அது மருந்து கடை ஆயிற்றே.  

சிறப்புகள் தொடரும்...




share on:facebook

Tuesday, March 22, 2011

பீனிக்ஸ் தேசம் - வியக்க வைக்கும் ஜப்பானியர்கள்.


2001 செப்டம்பர் 11. யாரும் மறக்க முடியாத நாள். உலகில் தங்களை மிஞ்ச மீற யாரும் இல்லை என்ற மெதப்புடனும் தெம்புடனும் இருந்த அமெரிக்காவையே  அதன் வர்த்தக தலை நகரமாக விளங்கிய நியூயார்க் நகரத்தில் வானோக்கி  இருந்த   இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் விமானத்தால் மோதி  சிதைத்ததை யாராலும்   நியாயப்படுத்த முடியாது.  அதே சமயம் தீவிரவாத  தாக்குதல் நடந்தவுடன்  பேரிடர்  மேலாண்மை  என  சொல்லப்படுகின்ற  Disaster Management எல்லாம்  தெரிந்து அறிந்து புரிந்து வைத்திருந்தும், அமெரிக்க  அரசும் மக்களும் அதை எதிர் கொள்வதில் தோல்வியைத்தான் தழுவினார்கள்.

நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் அலறி அடித்துக்கொண்டு  ஓடியதும், தொலைபேசிகளும், கைபேசிகளும் செயல் இழந்து போய்,  ஆங்காங்கே மக்கள் எப்படி தங்கள் வீடுகளுக்கு திரும்பி போவது என  தெரியாமல் விழி பிதுங்கி நின்ற போது, அமெரிக்காவில் இப்படியா? அமெரிக்க மக்கள் இப்படியா என அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

இன்று அதை விட பேரழிவு, அதுவும் இயற்கையின் சீரழிவு, யாராலும்  கட்டுப்படுத்த முடியாத சுனாமி, பூகம்பம், அணு கசிவு எனவு நினைத்து  பார்க்க முடியாத அளவிற்கு ஜப்பான் மிகப் பெரும் இயற்க்கை பேரிடரை  சந்தித்துக்  கொண்டு இருக்கிறது. ஆனால் ஜப்பானிய மக்கள் என்றும்  போல் இன்றும் மனம்  தளராமல், அரண்டு போகாமல் எல்லாவற்றையும்  எதிர் கொண்டு வருகிறார்கள்.

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்ட போது அங்கிருந்த லண்டன்  பத்திரிக்கையாளர் ஒருவர் தனது அனுபவத்தை இப்படி கூறுகிறார். பூகம்பம்  வந்தபோது நான் ஒரு ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தேன். அப்போது பிளாட்பாரம் நகர்வதை போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சரி, ரெயில் வேகமாக நகர்ந்து செல்வது தான் அப்படி ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியதோ என நினைத்துக் கொண்டு நான் சென்று கொண்டு இருந்த போதே, அருகே தெரிந்த தொலைக்கட்சியில் பூகம்பம் ஏற்பட்டிருப்பதையும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறும் அறிவிப்பு வந்தது கொண்டிருந்தது.

எனக்கு உடனே  படபடப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் என்னை  சுற்றி உள்ள எல்லோரும்  அமைதியாக அதே சமயத்தில்  வேகமாக  பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.  எங்கும் ஒரு கூச்சலோ மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையோ என்னால் காண முடியவில்லை. ஏதோ பள்ளி குழந்தைகள் ஆசிரியர் கூறினால் எப்படி தங்கள் வகுப்பறைகளுக்கு அமைதியாக வேகமாக  செல்வார்களோ அதே ஒழுங்குடன் அனைவரையும் பார்க்க  முடிந்தது. என கூறியுள்ளார்.

மேலும் வானை தொடும் கட்டடங்கள் ஜெல்லியை போல் ஆடியபோது கூட  அதை  பார்த்து யாரும் மிரளவில்லை. ஒன்று அவர்கள் கட்டட கலையின் மீது  அவர்களுக்கு உள்ள நம்பிக்கை(நம்மூரில் மழைக்கு ஒதுங்கினால் கூட  கட்டடம் ஸ்ட்ராங்கா என பார்த்துவிட்டு தான் ஒதுங்க வேண்டும்).  இன்னொன்று அவர்கள் அந்த  அளவிற்கு தங்களை தயார்  படுத்திக்கொண்டுள்ளார்கள். நண்பர் ஒருவர் குறிப்பிட்டதைப்போல் சுனாமியின் போது  ஆங்காங்கு  பொருட்கள் கிடந்தபோதும் தெருக்கள் வெறிச்சோடி கிடந்த  போதும் ஒரு திருட்டு கொள்ளை அங்கு நடக்கவில்லை.
நம்மூரில் நாலு நாள் மழைக்கே பள்ளி அலுவலகங்களுக்கு விடுமுறை  விட்டு விடுவார்கள். ஜப்பானில் நில நடுக்கத்திற்கு அடுத்த நாளே டொயோடோ   கம்பெனி  தங்கள் தொழில் உற்பத்தியை தொடங்கி விட்டார்கள்.  ஜப்பானியர்களுக்கு தங்கள் நாட்டின் மீதும் தங்கள் மீதும் அதீத நம்பிக்கை. அணு கசிவின் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அரசு  அறிவுறித்தியது.  ஒருவரும் ஏன் என்றோ முடியாது என்றோ  கூறவில்லை. அனைவரும்  அப்படியே வீட்டுக்குள் முடங்கிப்  போனார்கள்.

பிற நாடுகளில் பேரழிவுகள் ஏற்பட்ட போது உதவிக்காக எல்லோரிடமும்  கை நீட்டினார்கள்(அமெரிக்க உட்பட). ஆனால் இன்றுவரை ஜப்பான் பெரிதாக  எந்த உதவியையும் உலக நாடுகளில் இருந்து கேட்கவில்லை.  இதை  அமெரிக்காவில் உள்ள ரெட் கிராஸ் தெரிவிக்கிறது.  எங்களுக்கு என்ன  மாதிரியான உதவி ஜப்பானுக்கு தேவைபடுகிறது என்றே  தெரியவில்லை.  ஜப்பான்  ஒரு வளமிக்க நாடு. அது குறிப்பிட்டு  ஏதாவது  உதவி கேட்டால் தான் நாங்கள் செய்ய முடியும் என  அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது ஒரே நேரத்தில் ஏற்பட்ட சுனாமி, நில நடுக்கம் மிக  பெரிய அளவிலான அணு கசிவு ஆகிய சோதனைகளில் இருந்து ஜப்பான் வழக்கம் போல் மீண்டு வந்து விட்டால் அவர்களை வெல்ல  உலகத்தில் வேறு யாரும் கிடையாது.

ஜப்பானியர்கள் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள். இந்த பேரழிவில் இருந்தும் அவர்கள் மீண்டும் மீண்டு வருவார்கள் என நம்புவோம் ஆக.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஜப்பான் செல்ல எனக்கு வாய்ப்பு வந்தது.  குறுகிய  கால பயணம் என்பதாலும், அங்கு அடிக்கடி ஏற்படும் நில  நடுக்கம், ஆங்கில  கல்வி முறை போதனை அதிகம் இல்லாதது  போன்ற  காரணங்களால் அதை தவிர்த்து விட்டேன். நானும் ஒரு சராசரி இந்தியன் தானே!   

ஆமாம் Seismologist என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு? Google  பண்ணாமல்  முடிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள். நன்றி.

share on:facebook

Sunday, March 20, 2011

வலுவிழந்தது புரட்சிப்புயல் - அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு only அமைதிப்பயணம்.


ம. தி. மு. க. செய்தி குறிப்பு.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்; திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

//ஊட்டி வளர்த்த அன்பு தங்கச்சி, தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சு...//

ஏனோ விஜய T ராஜேந்தரின் இந்த பாடல் வரிகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

புயல் சரித்திரம்.

share on:facebook

Tuesday, March 15, 2011

சட்டத்தின் முன் அனைவரும் சமம்(அல்ல) - சொல்கிறது அமெரிக்கா!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பெருமளவில் மெக்சிகர்கள் வசிக்கிறார்கள். அதற்கு காரணம் கலிபோர்னியா மெக்சிகோ நாட்டின் எல்லையில் உள்ளது. ஒரு காலத்தில் பெரும்பாலான கலிபோர்னியா மாகாணம்  மெக்சிகோவிடம் இருந்ததாகவும் பிறகு அமெரிக்கா அதை இணைத்துக்கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.

எப்படி மும்பை டெல்லி போன்ற நகரங்களில் பிற வட மாநிலத்தவர்கள் கூலி வேலை போன்ற குறைந்த வருவாய் உள்ள வேளைகளில் ஈடுபடுகிறார்களோ அது போல் கலிபோர்னியாவிலும் பெரும்பாலான மெக்சிகர்கள் சாதாரண வேலைகளை செய்துதான் தங்கள் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குறிப்பாக தென் கலிபோர்னியாவில் எங்கு பார்த்தாலும் மெக்சிகர்களை காணலாம்.

இதில் பெரும்பாலானவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியிருப்பவர்கள். அதாவது அமெரிக்க அரசுக்கு தெரிந்தே. இதை அமெரிக்க அரசும் கண்டும் காணாமல் விட்டு விடுகிறது. எல்லாம் சுயநலம் தான். இல்லையென்றால் அவர்களுக்கு சாதாரண அதே சமயம் அமெரிக்கர்கள் செய்ய விரும்பாத வேலைகளை செய்ய ஆள் கிடைக்காது. உதாரணமாக ரோடு போடுவது, புல் வெட்டுவது போன்ற வேலைகள். 

இப்படி சட்ட விரோதமாக குடியேறியவர்களிடம்  எந்தவொரு  அடையாள  அட்டையோ குடியுரிமையோ இல்லாத காரணத்தால்  இவர்கள் வாகன  ஓட்டுரிமை போன்றவை எடுக்க முடியாது. அமெரிக்காவில் கார் இல்லாமல்  எந்த ஒரு வேலைக்கும் செல்லவோ வாழ்க்கையை நடத்துவதோ முடியாது.  ஆதலால் வேறு வழியே இல்லாமல் இவர்கள் வாகன ஓட்டுரிமை   இல்லாமல் தான் தங்கள் வாகனங்களில் செல்வார்கள். அமெரிக்க சட்டப்படி இவ்வாறு ஓட்டுனர் உரிமை இல்லாமல் வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனத்தை மீண்டும் மீட்க பல நூறு அல்லது ஆயிரம்  டாலர்களுக்கு மேல்  செலவு செய்ய நேரிடும். இதில் அதிகம் பாதிக்கப்படுவது மெசிகர்கள்தான்.  இவர்களது பல நாள் கோரிக்கை, இவ்வாறு வாகன சோதனையின் போது ஓட்டுனர் உரிமை இல்லை என்றால் அவர்களின் வாகனத்தை பறிமுதல்  செய்யாமல் வெறும் அபராதம் மட்டும் போடவேண்டும் என்பது தான்.  இப்போது  அவர்களின் கோரிக்கையை லாஸ் ஏஞ்சலிஸ் நகரின்  காவல் ஆணையர்  நிறைவேற்றி உள்ளார்.  

இது பற்றி லாஸ் ஏஞ்சலிஸ் நகர காவல் ஆணையர் தெரிவிக்கையில், லத்தீன் அமெரிக்க மக்கள் ஓட்டுனர் உரிமை பெறமுடியாத சூழ் நிலையால்தான் இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஏற்கனவே கஷ்ட ஜீவனம் நடத்தும் அவர்கள், பறிமுதல் செய்யப்படும் காரை மீட்க மேலும் நூற்றுக்கணக்கில் செலவு செய்ய நேரிடுவது எங்களுக்கு புரிகிறது. ஆதலால் நகர வாகன சோதனையின் போது ஓட்டுனர் உரிமை இல்லாதது  கண்டு  பிடிக்கப்பட்டால் அவர்கள் காவல் துறையால் தேடப்படும்   குற்றவாளியாக  இல்லாத பட்சத்திலும் குடிபோதையில்  வாகனம்   ஒட்டாத பட்சத்திலும்  அவர்களுக்கு வெறும் அபராதம் மட்டுமே  விதிக்கப்படும்  என  அறிவித்துள்ளார். இது மெக்சிகர்களின் வயிற்றில்  பாலை வார்த்துள்ளது. 

அதே சமயத்தில் இந்த விதிமுறை தளர்வு நகர வாகன பரிசோதனை மற்றும் குடியுரிமை இல்லாத மெக்சிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குடியுரிமை/ சட்டப்படி வசிக்கும் எவருக்கும் இந்த தளர்வு பொருந்தாது எனவும்  குறிப்பிட்டுள்ளார். 

என்னை பொறுத்தவரையில் இப்படித்தான் சட்டத்தை அமல் படுத்தவேண்டும்.  மக்களுக்காக இயற்றப்பட்டது தான் சட்டமே ஒழியே சட்டத்திற்காக மக்கள்  இல்லை. நம்மூரில் பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் டிக்கெட்டோ பாசோ  இல்லையென்றால் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடுவதும், வயதான பெரியவர்களை  புகைவண்டி, பேருந்துகளில் இருந்து முறையான டிக்கெட் இல்லை, பாஸ் இல்லை, சில்லறை இல்லையென இறக்கிவிடுவதும் கொடூரம். 

நல்லது எங்கு நடந்தாலும் ஏற்றுக்கொள்ளலாமே, பின்பற்றலாமே!       
 
  

share on:facebook

Thursday, March 10, 2011

கரையை கடக்குமா புரட்சிப்புயல்?



இந்தியாவில் 'பாராளுமன்ற புலி' என்று வர்ணிக்கப்பட்டவர்  வைக்கோ அவர்கள். தொடர்ந்து 18 ஆண்டுகள் ராஜிய சபா  எம். பி. யாக  தி. மு. க. வின் சார்பில் பதவி வகித்தவர். தி. மு. க. விலேயே  வேறு யாரும் இவ்வளவு ஆண்டுகள் எம். பி. யாக இருந்ததாக  தெரியவில்லை. 

அப்படிப்பட்ட வைக்கோ நடிகர் ராமராஜனால் திருச்செந்தூர் பாராளுமன்ற  தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போது, 'வைகோவை தோற்கடித்த தமிழா, உனக்கு மானம் ஒரு கேடா?' - என்று தி. மு. க. சார்பில் ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். உண்மையை சொல்லப்போனால் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் கூட வைக்கோ தோத்து போனதற்காக வருந்தினார்கள்.

வைக்கோவிற்க்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் தி. மு. க. வில் இருந்தபோதும் சரி, தனியாக கட்சி ஆரம்பித்த பிறகும் சரி. ஆனால், என்று அவர் தன் மீது கொலை பலி சுமத்தியதால் வெளியே வந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைத்தாரோ அன்றே அவரின் தனிமனித செல்வாக்கு குறையத்தொடங்கி விட்டது. பிறகு அடுத்த தேர்தலிலேயே தன்னை கொடும் சட்டத்தின் மூலம் மாதக்கணக்கில் சிறையில் அடைத்த  ஜெயலலிதாவிடமே கூட்டணி வைத்த பிறகு அவர் மீது இருந்த மரியாதையும் மற்றவர்களிடம் குறையத்தொடங்கிவிட்டது.

இன்று முகம் தெரியாத கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொண்டு முதல் சுற்றிலேயே ஓரிரு சீட்டுகளை வாங்கிக்கொண்டு தேர்தல் களம் காண களம் இறங்கி விட்டது. ஆனால் புரட்சிப்புயல் வைக்கோ அவர்கள் 'காணவில்லை' விளம்பரம் தரும் அளவிற்கு அரசியலில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாத அளவிற்கு மங்கிப் போய்விட்டார். ஒரு காலத்தில் தி. மு. க. வின் தலைமை தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் வைக்கோ. வாக்குகள் என்னும் இடத்தில் வைக்கோ இருந்தால் அது ஆளும் முதல்வர் தொகுதியாய் இருந்தால் கூட எண்ணிக்கை நிலவரம் வெளியே போக முடியாது. ஒரு முறை எம்.ஜி.யார் முதல்வராக இருந்த போது ஒரு முக்கிய வேட்பாளர் போட்டியிட்ட வாக்குச் சாவடியிலிருந்து முன்னணி நிலவரம் அங்கிருந்த மாவட்ட  கலெக்டர் மூலம் எம். ஜி. யாருக்கு போய்கொண்டிருந்தது. இது தெரிந்த  வைக்கோ அவர்கள் கலெக்டரிடம் வாக்கு வாதம் செய்திருக்கிறார். ஆனால்  கலெக்டரோ ஒரு மாநில முதல்வர் கூப்பிட்டு தகவல் கேட்டால் அதை தர  வேண்டியது என் கடமை என கூறியுள்ளார். அதற்க்கு வைக்கோ அவர்கள், அப்படி என்றால் என்னுடைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள். அவரும் என்னிடம் முன்னணி நிலவரம்  பற்றி கேட்கிறார். நீங்கள்  எம்.ஜி.யாருக்கு தகவல் கொடுத்தால் நானும் கலைஞருக்கு தகவல்  கொடுப்பேன் என்று வாதிட்டு கடைசி வரை எம்.ஜி.யாருக்கு தகவல்  போவதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

தி.மு.க. வில் அதிக காலம் எம்.பி. யாக இருந்த பெருமைக்கு உரியவர் வைக்கோ. தொடர்ந்து களத்தில் தோல்வியை தழுவி வந்தாலும் தி.மு.க. வில் இருந்தவரை அவருக்கு உரிய மரியாதையும் பதவியும் கட்சியிலும்  வெளியிலும் (பாராளுமன்றத்திலும்) கிடைத்து தான் வந்தது. 

அப்பேற்பட்டவர் இன்று போயஸ் தோட்ட வாசல் கதவு தனக்கு திறக்குமா  என தவம் கிடக்க வேண்டியதாகிவிட்டது. தேர்தலுக்கு தேர்தல் அடுத்த கூட்டணிக்கு தாவுவது சில கட்சிகளுக்கும்  அதன் தலைவர்களுக்கும்  ஏற்றதாகவும், லாபமாகவும் இருக்கலாம். ஆனால் வைக்கோ  போன்றவர்களின் கட்சி தொண்டர்களும் அவருக்கு வாக்களிக்கும்  பொதுமக்களும்  இதை ஏற்று கொள்வதில்லை போலும். இல்லை என்றால்  எதுவோ தேய்ந்து என்னமோ  ஆனா கதையாக அவரின் கட்சி இப்படி  ஆகியிருக்க வேண்டியதில்லை. 

எனக்கு தெரிந்து ஒருவரை கட்சியிலிருந்து நீக்கியதற்காக ஒரு சிலர்  தீக்குளித்தது (தீக்குளிப்பை நான் ஆதரிப்பவனில்லை-எந்த ஒரு காரணத்திற்கும்) வைக்கோவை தி. மு. க. விலிருந்து நீக்கிய  போதுதான். இன்னும் சொல்லப் போனால் இப்படி பட்ட  சம்பவங்களினால் மட்டுமே  ம.தி.மு.க. மலர்ந்தது, வளர்ந்தது.  ஆனால் அவர்கள் தீக்குளிக்க  காரணமானவர்கள் கட்சியுடன்தான்  வைக்கோ கடைசியில் கூட்டணி வைத்தார். 

எங்கோ உள்ள தமிழர்கள் சுய மரியாதை, கவுரவத்திற்காக துப்பாக்கி தூக்கவேண்டும் என முழங்கி விட்டு தன்னை அதே காரணத்திற்க்காக சிறையிலிட்ட  ஜெயலலிதாவுடன் எப்படி கூட்டணி அமைத்தார் என தெரியவில்லை. இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாக போய்விட்ட ம. தி. மு. க. வும் வைக்கோவும் மீண்டும் எழுந்து வருவது என்பது மிகவும் சிரமமமே. 

வைகோ அவர்களே! உங்களை யாரும் தோற்கடிக்க வேண்டியதில்லை. அதை உங்களுக்கு நீங்களே செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.

ஹ்ம்ம். இந்த முறையாவது புயல் கரையை கடக்கிறதா என பார்ப்போம்.


share on:facebook

Sunday, March 6, 2011

Hello Mr. President - ஒரு தமிழனின் புலம்பல்...


புரட்சித்தலைவி டாக்டர் அம்மா, முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்  ஐயா,  கருப்பு எம்ஜியார் காப்டன் விஜயகாந்த். இப்படி அரசியல் தலைவர்களை மட்டுமல்ல.  நம் நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் விட்டு சென்றாலும் அவர்கள்  விட்டு சென்ற  ஆண்டான் அடிமைத்தனம் மட்டும் இன்றும் பல இடங்களில் நம்மை விட்டு விலகவில்லை. பள்ளியில்  ஆரம்பித்து ஒரு பதவியில் சேர்ந்த பிறகும் கூட அது எல்லா மட்டத்திலும் நம்மை விட்டு நீங்காமல்  நம்முடன்  நீக்கமற  நிறைத்திருக்கிறது.   

ஒரு கலெக்டருக்கு பின்னால் எதற்கு ஒரு டவாலி? அதுவும் நம் நாட்டிற்கு  சற்றும்  பொருத்தமிலாத ஒரு உடையை அணிந்துகொண்டு. ஜனநாயக  நாடு  என்றால் அனைவரும்  சமம். நம்மிடம் அது இருக்கிறதா? அமெரிக்காவின் அதிபரையே அதிபர் மாளிகையில் சுத்தம் செய்யும் ஒரு சாதாரணமான வேலைகாரர்  Hello Mr. President என கூப்பிட முடியும். அதே போல் அதிபராகவே  இருந்தாலும் அந்த வேலைக்காரரை தாண்டி செல்ல வேண்டுமானால்  'Excuse  me' என்று தான் கூறவேண்டும்.  சற்றே நினைத்து பாருங்கள்.   ஜெயலலிதாவையும், கருணாநிதியையும், Mr /Mrs. Cheif  Minister' என ஒரு அரசு உயர் அதிகாரியாவது அப்படி கூப்பிட இயலுமா? கேட்டால் மரியாதையை என்பார்கள். ஆனால் இந்த மரியாதைதான் நம்மை  பல விதத்திலும் அடிமையாக்குகிறது.  

காவல்துறை உங்கள் நண்பன் என்கிறார்கள். எங்காவது ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு சாதரணமான குடிமகன் சென்று மரியாதையை எதிர்  பார்க்க முடியுமா? அது என்னவென்று தெரியவில்லை.  இந்தியாவிலேயே மிகவும் சீரழிந்து போன ஒரு துறையான காவல்துறையில் தான் அவர்களை  எல்லோரும் "ஐயா" என கூற வேண்டும் என எதிர்பார்கிறார்கள்.  ஐயா என்றவுடனே அங்கு அடிமைத்தனம் வந்து விடுகிறது.

பள்ளிக்கூடம் சென்றால் அங்கு பெற்றோர்கள் அடிமைகளாக  பார்க்கப்படுகிறார்கள். நம் பிள்ளைகள் படிப்பதால் தான் அவர்களால்  பள்ளியே நடத்த முடிகிறது. ஆனால் ஒரு பள்ளியின் பிரின்சிபாலை பார்க்க சென்றால் நம்மை அடிமைகள் போல் நடத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நமக்கு அடிமைத்தனமும் எல்லாவற்றுக்கும்  பயப்படும்  குணமும் பள்ளியில் தான் ஆரம்பிக்கிறது. அங்கு ஆரம்பித்து நாம் வேலைக்கு செல்லும் போது அங்கும் அது தொடர்கிறது. ஒன்று நாம் பயந்து போகிறோம் அல்லது நம்மை பார்த்து நமக்கு கீழ் உள்ளவர்கள் பயப்பட வேண்டும் என எதிர்பார்கிறோம்.

முதலில் செய்யும் வேலைக்கு தகுந்தார் போல் மரியாதை தரும் குணம் நம்மிடமிருந்து விலகவேண்டும். வீட்டு வேலை செய்யும் கொத்தனாரை வாங்க போங்க என்போம். அதுவே சித்தாளை என்னய்யா வாய்யா போய்யா  என்போம். அமெரிக்காவில் எல்லா பள்ளிகளிலும் குழந்தைகள் கூட தங்கள் பள்ளியின் பிரின்சிபாலை எளிதில் நெருங்கவும் பேசவும் முடியும். Mr. Ms. என்று அவர்கள் எல்லோரையும் அவர்களின்  பெயரை சொல்லித்தான்  கூப்பிடுகிறார்கள். அதனால் யாரும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அதனால் அவர்களுக்கு தங்கள்  ஆசிரியர்களுடன் மேலும் பிடித்தம் ஏற்படுகிறது. தங்கள் தாய் தந்தையரை  பிடிக்கிறதோ இல்லையோ இங்குள்ள எல்லா பிள்ளைகளுக்கும்  தங்கள் ஆசிரியர்களை மிகவும் பிடிக்கும்.  

எல்லாவற்றுக்கும் மேலாக IT துறையில் எந்தவொரு நிலையில்/பதவியில்  இருந்தாலும் அவர்களை பெயரை சொல்லித்தான் கூப்பிடுகிறார்கள்.  இதனால்  இருவருக்கும் உள்ள இடைவெளி குறைந்து  நல்ல புரிதல்  உண்டாகிறது. முதன் முதலில் நான் என்னுடைய சீனியர் மேனஜரை சார்  என கூறியபோது அவர் சார் என்று கூப்பிடாதீர்கள். என்னை பெயர்  சொல்லியே  அழையுங்கள் அதுதான் எனக்கு மரியாதை என கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இன்று பெயர் சொல்லி  அழைப்பது என்பது எனக்கு பழகி போய்விட்டது. வீட்டு அம்மா தான் என்  நண்பர்களை எப்போதும் பெயர் சொல்லி அழைக்காமல் சார் சார் என்பார்கள். ஆனால் அது என் நண்பர்கள் எல்லோருக்கும் தர்மசங்கடமாக இருக்கும்.  ஒவ்வொரு தடவையும் அவர்களை சார் என்று சொல்லும் போது என் நண்பர்களின் முகத்தை  பார்க்கணுமே. காலம் தான்  எவ்வளவு மாறிவிட்டது?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது எல்லாவற்றுக்கும் மேலாக நம்மூரில் மருத்துவ துறையில் இருக்கும் டாக்டர்கள் அதிலும் மிக பெரிய புகழ் வாய்ந்த டாக்டர்கள். அப்பா, அவர்கள் செய்யும் அலும்பு இருக்கிறதே! அவர்களுக்கு என்னமோ பெரிய ஆர்மி ஜெனெரல் என்றுதான் நினைப்பு. ரூமுக்குள் நுழையும் போதே ஒரு பெரிய பட்டாளத்துடன் தான் நுழைவார்கள். அவர்களுடன் வரும் கைத்தடிகள் (பிராக்டிஸ் டாக்டர்கள்/செவிலியர்கள்) எல்லோரையும் விரட்டிக்கொண்டே வருவார்கள். அவர் பேஷண்டை பார்ப்பதும் தெரியாது போவதும் தெரியாது. நாம் தான் அவர்கள் அடிமைகள் போல் பின்னாடியே போய் எப்பொழுது அவர்கள் முகத்தை திருப்புவார்களோ அப்போது என்னவென்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஹ்ம்ம். இன்னும் எவ்வளவோ நாம் மாற வேண்டும். எப்படி?  எப்போது? 

புலம்பல்கள் தொடரும்...

படம் நன்றி: gurneyjourney.blogspot.com
  

share on:facebook

Thursday, March 3, 2011

சோத்துக்கட்சி - என் அப்பாவின் நினைவாக.




இதோ ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது. ஓரளவு விபரம் தெரிய ஆரம்பித்ததிலிருந்தே எனக்கு அரசியலில் நாட்டம் உண்டு. அது இன்றும் தொடருகிறது. கிரிகெட் மேட்ச் பார்க்க மாட்டேன். ஆனால் தேர்தல்  முடிவுகளை  விடிய விடிய கண் விழித்து பார்த்ததுண்டு. இதில் எனக்கு ஒன்றும்  வெக்கமில்லை. கிரிகெட்டை  விட  நம் நாட்டில் அரசியல் ஆர்வம் தான் இளைஞ்சர்களிடம் அதிகம் இருக்க வேண்டும்  என்பது என் நிலைப்பாடு. யாரோ ஜெயிக்கிறார்கள்  நமக்கென்ன  என்று அரசியல்வாதிகளை பார்த்து கூறினால்,  கிரிகெட் வீரர்கள்  மட்டும் ஜெயித்து நாட்டுக்கு என்ன செய்கிறார்கள்  என்பதே என்  தனிப்பட்ட கருத்து. சரி அதை விடுவோம்.

நான் சிறு வயதில் என் அப்பாவிடம் நீங்கள் எந்த  கட்சி   என்றால்  'நாமலாம் சோத்து கட்சிடா' என்பார். இருந்தாலும் நாங்கள் நிறைய  அரசியல் பேசுவோம். ஆனால் என்றுமே என் அப்பாவும்   அம்மாவும் அவர்கள் எந்த கட்சிக்கு வோட்டு போட்டார்கள் என  கூறியதே இல்லை. கேட்டால் நான் கவர்மென்ட் செர்வன்ட். வெளியே  சொல்லக்கூடாது என்பார்கள். இப்போலாம் கவர்மென்ட் அபீசுக்குள்ளேயே  ஆளும் கட்சியினர் கட்சி நடத்துகிறார்கள்.

ஒரு இருபது வருடங்களுக்கு முன் இருந்த அரசியல்  மற்றும்  தேர்தல்களை ஒப்பிட்டு பார்த்தால் இன்று நிறைய மாற்றங்கள்.  சில நல்லவை. சில கேட்டவை. 

இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியும், இந்தியாவையே மாற்ற முடியும் என செய்து காட்டியவர்  முன்னாள் தலைமை தேர்தல் கமிஷினர் திரு. T  N சேஷன்  அவர்கள். 

முன்பெல்லாம் எந்த ஒரு அரசியல்  கட்சியும்  இரவு   பத்து  மணிக்கு முன்பு பொது கூட்டங்களை ஆரம்பித்ததாக சரித்திரமில்லை.  ஆனால் இன்று இரவு ஒன்பது மணி  ஐபத்தொன்பது   நிமிடமானால் முதல்வரோ பிரதமரோ யாராக இருந்தாலும் சரி மைக்கோடு சேர்த்து வாயையும் மூடிக் கொள்கிறார்கள்.  தேர்தல் கமிஷன் முன் அவ்வளவு பயம். வோட்டு போட்ட  மக்களுக்கு  பயப்படாதவர்கள் ஒரு தேர்தல் அதிகாரிக்கு  பயப்பிடுகிறார்கள்.  அதே போல் தேர்தல் வந்தால் ஒரு  வீட்டின் சுவரு கூட  மிஞ்சாது அப்போது. எல்லாவற்றிலும் கை  சின்னமோ,  இரட்டை  இல்லையோ சூரியனோ ஒளிர்ந்து  கொண்டிருக்கும். இன்று  சிறிதாக கிறுக்கினால் கூட போன் செய்து  வேட்பாளர்களிடம்  கூறினால் ஓடி வந்து வெள்ளை  அடித்து கொடுக்கிறார்கள். 

எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது.  இந்த பயம்  எல்லாவற்றையும் ஒரே ஒரு தனி மனிதர்  T  N  சேஷன் ஏற்படுத்தினார்.  அவரிடம் எப்படி உங்களால் இவ்வளவு  மாற்றங்களை கொண்டு வர முடிந்தது என ஒரு முறை  கேட்டபோது, நான் எதுவும்  புதுசாக செய்யவில்லை. எல்லாம் ஏற்கனவே  இருந்த   விதிகள்தான். அதை முதல் முறையாக  நடைமுறை படுத்தினேன். அவ்வளவுதான் என  பதிலளித்தார்.        

கடந்த சில வருடங்களாக வோட்டுக்கு பணம் என்பது ஒரு கட்டாயமாக ஆக்கப்பட்டு விட்டது. என் அம்மாவும் அப்பாவும் வோட்டளிக்க செல்ல பல கட்சிகளிலிருந்தும் காரில் வந்து அழைப்பார்கள். அப்போதெல்லாம் நான் காரில் செல்ல வேண்டும் என்ற ஆசையில் அம்மா கார் வந்துடுச்சு சீக்கிரம் வாங்க வாங்க என கூப்பிடுவேன். ஆனால் ஒவ்வொரு முறையும் என் அம்மா காரை  திருப்பி அனுப்பி விடுவார். வோட்டளிப்பது நம் கடமை. அதை  நாம் தான் செய்ய வேண்டும் என வேகாத வெயிலில் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று தான் வோட்டளிப்பார். அதுமட்டுமில்லாமல் நான் ஒரு அரசு ஊழியை. கட்சி கொடி கட்டிய காரில் எல்லாம் நான் போக மாட்டேன் என்பார். ஆனால் இன்று கார் மட்டுமா வருகிறது. வாக்காளர்கள் கேட்டால் குவாட்டர் முதல் கோழி பிரியாணி முதல் கவரில் பணத்துடன் எல்லாமே கிடைக்கிறது.

பதவி போய் விட்டது என தெரிந்தவுடன் அரசு காரிலிருந்து  இறங்கி அரசு பஸ் பிடித்து போன முன்னால் அமைச்சர் ஐயா   கக்கன், தான் பதவியில் இருந்த போது அரசு ஒதுக்கிய வீட்டிற்கு  வந்த அவரின் சம்பந்தியிடம் நீங்கள் உறவினராக வந்திருக்கிறீர்கள்  என்றால் இங்கே நீங்கள் தங்க முடியாது. என் கிராமத்திற்கு வரும்  போது சொல்லிவிடுகிறேன். அங்கு வாருங்கள் என திருப்பி அனுப்பியவர். 

இன்று மகன் மகள் மச்சான் பேரன் பேத்தி குடும்பம் அல்லது தோழி தோழியின் கணவர், அக்காள், அக்காள் மகன் என  குடும்பமும் சுற்றமுமே கட்சிகளாகிபோனது. அதனால் நாம் என்றுமே சோற்று கட்சிதான். காசு வாங்காமல் முடிந்த போது வோட்டு போடும் சொந்தகட்சி.

படம் நன்றி: greenearthafrica.com    

share on:facebook